உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தலைமை பண்பு இல்லாமல் நடிகர்களால் நிலைக்க முடியாது; விஜயை விமர்சிக்கும் திருமாவளவன்

தலைமை பண்பு இல்லாமல் நடிகர்களால் நிலைக்க முடியாது; விஜயை விமர்சிக்கும் திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சென்னையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவரணி சார்பில் நடந்த, 'மதச்சார்பின்மை காப்போம்' கருத்தரங்கில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: நாம் பேசுவது, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்னும் பொறுப்பை உணர்ந்து பேசுவதே தலைமைப் பண்பு. துாண்டி விட்டு விட்டு, போய் விடலாம்; அது ஜாதி கலவரமாக மாறலாம்; துப்பாக்கிச்சூடு வரை செல்லக்கூடும். அந்த பாதிப்புகள் யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வு தேவை. தலைமைப் பண்பு சும்மா வந்துவிடாது. அரசியல் ஆதாயம் கிடைத்தால் போதும், யார் எக்கேடு கெ ட்டால் என்ன என, நினைக்கக் கூடாது. பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வந்தால், சில காலம் ஈர்ப்பு இருக்கும். ஆனால், தலைமை பண்பு இல்லாவிட்டால், அந்த ஈர்ப்பை தக்க வைக்க முடியாது; நிலைக்க முடியாது. ஆவேசமாக கை, கால்களை உயர்த்தி, உதறி, உணர்ச்சிகரமாக பேசும் பேச்சாளர்கள் இருக்கலாம். அவர்களுக்கும் கூட பொறுப்புணர்வு இல்லாவிட்டால், தற்காலிகமாகவே நீடிக்க முடியும். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி என்பது வெறும் கூட்டணி மட்டுமல்ல, பா.ஜ.,வின் கருத்தியலுக்கு அ.தி.மு.க., உட்பட்டு இருக்கிறது. அதைத்தான் நாம் சுட்டிக்காட்டுகிறேம். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரியும், அம்பேத்கர் அயலக உயர் படிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நிதி வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

பாரத புதல்வன்
ஆக 02, 2025 18:42

அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி, அப்புறம் கம்பி எண்ணு... இது தான் உம்மோட தலைமை பண்பு...அதை கேட்ட குட்டி சிறுத்தைகள் நாடக காதல்களை அரங்கேற்றி நிறைய ஆணவ கொலைகளுக்கு உம்மோட தாரக மந்திர உபதேசம் தான் காரணம், முதலில் நீங்க திருந்துங்க....அப்புறம் போதனை பற்றி பேசலாம்.


பேசும் தமிழன்
ஆக 02, 2025 16:32

உதயநிதி மற்றும் கமலஹாசன் மீது இவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை..... அவர்களை நோக்கி இப்படி பேசி இருக்கிறார்.


கூத்தாடி வாக்கியம்
ஆக 02, 2025 15:13

உன்னை மாதிரி ஆலாலத்தான் இங்க ஆணவ கொலைகள் அதிகமா நடக்குது. அவன் இப்போ உன்னை கூப்பிட்டு கொஞ்சம் காசு கொடுத்தா வேற மாதிரி பேசுவ. ஓசி பிரியாணி ஓரமா நில்லு


ram
ஆக 02, 2025 13:39

திருட்டு திமுகவின் அடிமை பேச்ச பாரு


அயோக்கிய திருட்டு திராவிடன்
ஆக 02, 2025 13:21

இரும்பை பார்த்து இழித்ததாம் பித்தளை என்பது போல இந்த தலைமை பண்பை பற்றி பாடம் எடுக்கிறான் அறிவாலயத்திற்கு கொத்தடிமை.


Rengaraj
ஆக 02, 2025 13:12

""..................எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரியும், அம்பேத்கர் அயலக உயர் படிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நிதி வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது........" என்று செய்தி. ஆர்ப்பாட்டம் பண்ணுகிற அளவுக்கு சென்றிருக்கிறார்கள். அப்போ தமிழக அரசு இந்த மாணவர்களை உதவித்தொகை தராமல் , நிதி தராமல் வஞ்சிக்கிறதா ? கூட்டணியில் இருந்தும் இவர்களுக்கு உதவிதொகை வாங்கித்தரமுடியவில்லை என்றால் திருமாவுக்கு என்ன தலைமை பண்பு உள்ளது ? அரசிடம் பேசி ஓர் கல்வி உதவி தொகையையே வாங்கித்தரமுடியாத அளவுக்கு இருக்கிறார் என்றால் இவரெல்லாம் ஒரு தலைவரா ? எம்பி யா ?அடுத்த கட்சிக்காரர்களை பற்றியும், கூட்டணி பற்றியும் பேசுவதற்கு இவருக்கு கொஞ்சம் கூட அருகதை கிடையாது. வாய் கிழிய பேசி என்ன பயன் ?


Mecca Shivan
ஆக 02, 2025 12:01

யார் யாரை குறை சொல்வது என்ற யோசனையே இல்லை


Mecca Shivan
ஆக 02, 2025 12:00

சரக்குக்கு மிடுக்கு .. உத்தமர்கள்


Mecca Shivan
ஆக 02, 2025 12:00

சரக்குக்கு மிடுக்கு ..டுக்கு கோவில் கோபுரத்தில் இருப்பது அசிங்கம் பிடித்த சிலைகள் என்று கூறி அவனெல்லாம் உத்தமர்கள்


Anand
ஆக 02, 2025 12:00

இவர் என்ன வர வர அடுத்தவர்களேயே விமர்சிக்கிறான், இவனை இரண்டு தரப்பிலும் உசுப்பேத்தி உசுப்பேத்தி நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள் போலிருக்கு. எப்படியோ இவரை போன்ற ஜாதிவெறி பிடித்த சாக்கடைகள் ஒழிந்தால் நாட்டிற்கு நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை