உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அஜித்தை சீண்டிய ஆதவ் அர்ஜுனா: பொதுக்குழு பேச்சால் சலசலப்பு

அஜித்தை சீண்டிய ஆதவ் அர்ஜுனா: பொதுக்குழு பேச்சால் சலசலப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், நடிகர் அஜித்தை சீண்டியதால் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு ஐந்து மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, எந்த கட்சியும் இதுவரை முன்வரவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yodpa5ps&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருந்தபோதும், த.வெ.க., ஓட்டு வங்கியை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் விஜய் இறங்கியுள்ளார். இதற்காக, விவசாயிகள், துாய்மை பணியாளர்கள் மட்டுமின்றி, தன் சினிமா வட்டத்தில் உள்ள நண்பர்களுடன், அவர் தொடர்ந்து பேசி வருகிறார். குறிப்பாக, அஜித் ரசிகர்களின் ஓட்டுகளை கைப்பற்ற விஜய் விரும்புகிறார். இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக, நடிகர் அஜித் தன் கருத்தை கூறியிருந்தார். 'கரூர் சம்பவத்திற்கு தனி மனிதருடைய தவறு மட்டும் காரணமல்ல; அனைவருக்கும் இதில் பங்கு இருக்கிறது; செல்வாக்கை காட்ட கூட்டம் கூட்டுவதை நிறுத்த வேண்டும்' என, அஜித் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த த.வெ.க., சிறப்பு பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 'ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள், இதுபோன்று விஜய்க்கு எதிராக கருத்து சொல்ல கிளம்பியுள்ளனர்' என, அஜித்தை மறைமுகமாக விமர்சித்தார். இதற்கு விளக்கம் அளித்து பேசிய அஜித், 'என் பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயல்கின்றனர். விஜய்க்கு நல்லதை மட்டுமே நினைத்திருக்கிறேன்; அவருடைய முயற்சியை வாழ்த்தி இருக்கிறேன்' என கூறியுள்ளார். 'த.வெ.க.,வின் ஓட்டு வங்கியை அதிகரிக்கும் வகையில் விஜய் காய் நகர்த்தி வரும் வேளையில், கட்சியின் ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும் வகையில், ஆதவ் அர்ஜுனா பேசுவது சரியல்ல' என கட்சியினர் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mr Krish Tamilnadu
நவ 08, 2025 14:08

தவெக துரோகி பட்டியலின் முதல் இடம் யாருக்கு என்பது கொஞ்ச நாளில் தெரியும்?. மக்கள் பணி என்றால் என்ன என்று தெரியுமா?. இதில் இவர் பணியாற்றும் மூன்றாவது கட்சி தவெக. ஆதவ் பொதுவெளியில் பேசாமல் இருப்பதே, அவர் கட்சிக்கு செய்யும் மிகப்பெரிய உதவி.. ஆர்வ கோளாறு இதற்கு அர்த்தம் உங்கள் பேச்சுக்கு பிறகு தெரிந்து விட்டது.


ரகு
நவ 08, 2025 11:10

வேறு வேலை இல்லை.


Shekar
நவ 08, 2025 10:13

இவன் திமுக ஏஜன்ட், பார்டைம் அரசியல்வாதியின் அல்லகைகளே போதும் கட்சியை கரைசேர்க்க


mathew
நவ 08, 2025 09:39

அஜித் இதுவரைக்கும் சன் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜென்ட்க்கு படம் பண்ணதில்லை.... இதுக்கப்புறம் பண்ணப்போவதில்லை... ஆதவ் சொன்னது ரஜினி மற்றும் கமலை.. அஜித் சொன்னது போல் தான் சொன்ன கருத்து விஜய்க்கு எதிராக மாற்றுவது போல் உள்ளது இந்த செய்தி...


baala
நவ 08, 2025 09:27

மக்களின் அனாதை திருட்டுத்தனமாக எடுத்து பணக்காரன் ஆனவன் எல்லாம் வேதம் ஓதுகிறான்.


Sun
நவ 08, 2025 09:18

மூணு கட்சி மாறி , 41 உயிர்களை பலி எடுத்து முப்பது நாளா முட்டுச் சந்துக்குள் ஒளிந்து திரிஞ்சவர் எல்லாம் ஜென்டில் மென் அஜீத் குமாரை பற்றிப் பேசுகிறார்


V RAMASWAMY
நவ 08, 2025 08:59

Misquoting or misunderstanding Actor Ajiths well intended and decent remarks for the welfare of all political meetings is unwarranted and is not in good taste this may result in displeasure and dissatisfaction to Ajiths fans in TVK party.


naranan
நவ 08, 2025 05:12

யாருன்னே தெரியாத இவனெல்லாம் அஜித்தைப் பற்றி பேசுகிறான்..


ஆசாமி
நவ 08, 2025 08:26

ஊழல் பெருச்சாளி லாட்டரி மார்டினின் மருமகன். பணமூட்டை பைனான்சியர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை