உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் கட்சியை விமர்சிக்க அ.தி.மு.க.,வினருக்கு திடீர் தடை

விஜய் கட்சியை விமர்சிக்க அ.தி.மு.க.,வினருக்கு திடீர் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா.ஜ., --மற்றும் த.வெ.க., ஆகிய இரு கட்சிகளையும் விமர்சிக்க வேண்டாம் என, தன் கட்சியினருக்கு பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விரும்புகிறார். இக்கட்சிகளுடன், அ.தி.மு.க., சார்பில் தொழிலதிபர் ஒருவர் பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதாவது, 130 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும், 80 தொகுதிகளில் த.வெ.க., போட்டியிடவும், மீதமுள்ள 24ல் வி.சி., களமிறங்கவும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nleb860t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பான கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அளித்த பேட்டியில், 'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பழனிசாமிதான் முடிவு எடுப்பார். அ.தி.மு.க., மிகப்பெரிய இயக்கம். எங்களுடன் கூட்டணி வைக்காதவர்களே கிடையாது' என்றார்.திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கூறுகையில், 'விஜய் மாநாட்டிற்கு நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.'அதிக ரசிகர்களை கொண்ட முதல்தர நடிகர் விஜய். கொள்கை முரண்பாடு இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும், அ.தி.மு.க., கூட்டணியில் சேரலாம். விஜயுடன் கூட்டணி சேருவதற்கு மக்களும் விரும்புகின்றனர்' என்றார்.இதற்கிடையில், த.வெ.க., தனித்து போட்டியிட விரும்பினால், கடைசி நேரத்தில் பா.ஜ., மற்றும் பா.ம.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால், அக்கட்சிகளையும் விமர்சிக்க, கட்சியினருக்கு பழனிசாமி தடை போட்டுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Murali
அக் 25, 2024 21:02

EPS is always on right track.. The one and only leader to uplift Admk


Oviya Vijay
அக் 25, 2024 20:19

இலவு காத்த கிளி போல காத்துக் கிடப்பது பிஜேபி... அதிமுக தங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாதா? பிஜேபி தலைமையில் கூட்டணி அமைக்க அதிமுக ஒத்துக் கொள்ளாதா? இப்படி ஏதேனும் அதிசயம் நடந்து விடாதா? என்றெல்லாம் வாயைப் பிளந்து கொண்டு காத்துக் கொண்டுள்ளனர் சங்கிகள்... அதிமுகவின் வாக்குகளைப் பெற்று நான்கு MLA க்கள் பெற்றுவிட்டு அதிமுகவையே வசை பாடிக் கொண்டு திரியும் சங்கிகளின் வலையில் இனிமேலும் அதிமுக விழுவதற்கு வாய்ப்பில்லை. ஆக மொத்தத்தில் 2026 தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் காணாமல் போகக் கூடிய கட்சிகள் அதிமுக, பிஜேபி, சீமானின் நாம் தமிழர் கட்சி, பாமக... இவர்களையெல்லாம் எதிர்கட்சிகளாக நினைத்துப் பார்க்க கூட மக்கள் விரும்பவில்லை... உண்மையை சொல்வதானால் தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சி என்ற ஒன்றே இல்லை.


sankaranarayanan
அக் 25, 2024 17:17

இந்த புத்தி முதலிலேயே இருந்திருந்தால் பாஜாபாவைப்பற்றி கண்டபடி அவதூறாக பேசியிருக்க வேண்டாமே அண்ணாமலையுடன் தோழமை கொண்டு கட்சியை வலுப்படுத்தி இருக்கலாமே எல்லாமே காலம் கடந்து செயலால்தான் இப்போதும் விடவில்லை இப்போதே அதற்கே அடிக்கோல் நடலாம்


வைகுண்டேஸ்வரன்
அக் 25, 2024 09:24

முதல்வர் சொன்னது நிஜம் போலயே... EPS பயந்து போய் ஏதேதோ பேசிண்டிருக்காரே? இவரோட கட்சி MLA க்கள், நண்பர்கள் வீடுகளில் பிஜேபி யின் ஏவல் ED பூந்து ஏதேதோ அள்ளிண்டு போகுது. விஜய் கட்சியையும் பிஜேபி உள்ளே இழுக்கப் போகுது. அதான் EPS இப்ப விஜய் பத்தி பேசாதே என்கிறார். இவங்களைப் புடிச்சி தன்னோட கூட்டணி யில் போட பிஜேபி பண்ணும் தந்திரங்கள் தாங்க முடியல.


Oviya Vijay
அக் 25, 2024 08:48

சங்கி கட்சி மட்டுமே உங்கள் கடைக்கண் பார்வையை எதிர்நோக்கி உள்ளது. அதிலும் ஆட்டிக்குட்டி தலைவருக்கு அதில் உடன்பாடு வேறு இல்லை. வேறு எந்த கட்சியும் உங்களை சீண்டுவதற்கு கூட தயாரில்லை. இதுவே நிதர்சனம். தூக்கத்தில் இருந்து கொண்டு கனவு காணாமல் விழித்திருங்கள்... உண்மை புரியும்...


Sundar R
அக் 25, 2024 08:23

ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சுதந்திர காலத்திலிருந்தே ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலான முஸ்லிம்கள் அதிமுகவை விரும்புவர். ஹிந்துக்கள் அனைவரும் பாஜகவை விரும்புவர். பாஜகவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்தால், ஒட்டுமொத்த ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பேராதரவு கொடுப்பார்கள். பாமக, தமாகா, பன்னீர் செல்வம், டி டிவி, சசிகலா ஆகியோரும் சேர்ந்தால் இன்னும் பின்பலம் கூடும். அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அசுர பலத்துடன் ஹிந்து முஸ்லிம் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும். சீமான், திருமாவளவன், விஜய், திமுக ஆகியோர் தேர்தல் களத்தில் புறமுதுகு காண்பித்து ஓடுவார்கள். சொல்ல முடியாது கருணாநிதி குடும்பத்தினர் தமிழகத்தை விட்டு ஓடினாலும் ஓடலாம். தமிழக மக்களும் 1967-லிருந்து நம்மைப் பிடித்த பிசாசுகள் விட்டு ஒழிந்தது என்று சொல்லி மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அதுதான், தமிழகத்திற்கு அவசியம் தேவையானது. அதைத்தான் அதிமுகவினரும் பாஜகவினரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டும். தமிழகத்தில் மக்களை ஏமாற்றாத கட்சிகள் அதிமுகவும், பாஜகவும் மட்டுமே. எனவே அதிமுகவும், பாஜகவும் ஹிந்து முஸ்லிம் ஆதரவுடன் சீமான், திருமாவளவன், விஜய், திமுக ஆகியோரை அடித்து விரட்ட வேண்டும்.


vijay,cbe
அக் 25, 2024 07:29

eppadi irundha naan ippadi agitten


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை