உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மீண்டும் ஒரு மொழி போராட்டம் அரசுக்கு எதிரான கோபத்தை மடைமாற்றும் திட்டமா?

மீண்டும் ஒரு மொழி போராட்டம் அரசுக்கு எதிரான கோபத்தை மடைமாற்றும் திட்டமா?

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தங்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாததால், தமிழக ஆட்சியாளர்கள் மீது கோபத்தில் உள்ளனர். ஆளும் தி.மு.க., அரசுக்கு எதிராக, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. இதை மடைமாற்ற, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பை, தி.மு.க., கையில் எடுத்துள்ளதாகவும், சட்டசபை தேர்தல் வரை, இப்பிரச்னையை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாக்குறுதி

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்' என்ற முக்கியமான வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தி.மு.க., பக்கம் மொத்தமாக சாய்ந்தனர். தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து, நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. இதுவரை அந்த கோரிக்கை கிடப்பில் உள்ளது. தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, அரசு குழு அமைத்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qzeuh28n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல மாநிலங்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திய நிலையில், தமிழக அரசு காலம் கடத்துவதற்காக, இப்படி குழு அமைத்துள்ளதாக, அரசு ஊழியர்கள் கொந்தளிக்கின்றனர். அதேபோல், 'அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும்; சரண் விடுப்பை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த, ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள், அரசை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், போராட்டத்தில் குதித்து உள்ளன.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ ஜியோ' சார்பில், கடந்த 14ம் தேதி, அனைத்து தாலுகாக்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய சங்க நிர்வாகிகள், 'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலை வரும்' என எச்சரித்து உள்ளனர்.

மறியல் போராட்டம்

மேலும், வரும் 25ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில், மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.இதேபோல், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என பல்வேறு அமைப்புகளும், அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்துள்ளன. இது, தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.இதே நிலை நீடித்தால், அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்ற நிலை காணப்படுகிறது. இந்த சூழலில், மத்திய அரசு, 'தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றினால்தான், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு நிதி வழங்க முடியும்' என அறிவித்தது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை மடைமாற்ற முடிவு செய்து, அதற்கான அரசியல் நடவடிக்கைகளில் அரசும், ஆளுங் கட்சியும் இறங்கியுள்ளதாக தெரிகிறது.மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதாகக் கூறி, ஆளுங் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் பிரசாரத்தை துவக்கியுள்ளன.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், சென்னையில் மத்திய அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, மத்திய அரசு தடையாக உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்த உதவும் என்பதாலும், மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு திட்டத்தை, தி.மு.க., அரசு கையில் எடுத்துள்ளது.

அரசுக்கு எச்சரிக்கை

இதன் காரணமாக, தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட விவகாரங்களையும் மறக்கடிக்க முடியும் என்பதால், மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு போராட்டத்தை, வரும் சட்டசபை தேர்தல் வரை, வேகம் குறையாமல் கொண்டு செல்ல, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. பா.ஜ., தவிர, மற்ற எந்த கட்சியும், இப்போராட்டத்தை எதிர்க்க முன்வராது என்பதால், அதுவும் அக்கட்சிக்கு சாதகமாகி உள்ளது.அதை எதிரொலிக்கும் விதமாக, 'மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கைவிடாவிட்டால், அண்ணாதுரை, கருணாநிதி காலத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை விட, பெரிதாக வெடிக்கும்' என, துணை முதல்வர் உதயநிதி, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பராசக்தி படத்தில் ஹிந்தி எதிர்ப்பு காட்சிகள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், 25வது படம் பராசக்தி. இப்படத்தை, 'டான் பிக்சர்ஸ்' மற்றும் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் கதை, ஹிந்தி எதிர்ப்பு களத்தை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரில், 'தீ பரவட்டும்' என்ற வாசகத்துடன், சிவகார்த்திகேயன் தமிழ் மொழிப் போராளி போல், கையில் பாட்டிலுடன் நின்று கொண்டிருக்க, அந்த பாட்டிலில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை, தமிழகத்தில் தீவிரப்படுத்தும் வகையில், 'தீ பரவட்டும்' என்ற தலைப்பு, தி.மு.க., மேலிடத்தின் உத்தரவின்படி வைக்கப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Bhaskaran
பிப் 21, 2025 19:02

காவியும் திமுகவும் சேர்ந்தே மக்கள் பிரச்சனையை மடைமாற்றம்செய்கின்றனர்


முருகன்
பிப் 20, 2025 21:04

அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு தான் கொடுப்பது சம்பளம் இல்லாமல் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து கொண்டு இன்னும் கேட்பது சாரியா


V வைகுண்டேஸ்வரன்
பிப் 20, 2025 14:43

மூன்றாவது மொழி ஒன்றைப் பாடமாகப் புகுத்தி, அதில் அதிகம் பிள்ளைகளை Fail ஆக்கி அவர்களின் உயர்கல்வியை மறுக்கப் பார்க்கிறார்கள் என்பது இன்னுமா புரியவில்லை??? ஏன் இப்படி கண்மூடித்தனமாக உங்கள் எதிரிகளை ஆதரிக்கிறீர்கள்??


ஆரூர் ரங்
பிப் 20, 2025 16:05

மொழியறிவு தொடர்புத்திறன், இல்லாததால் கேம்பஸ் இண்டர்வியூவில் தேறாமல் 70 சதவீதம் பேர் டெலிவரி பாய் வேலைக்குப் போய்விடுகிறார்கள். இதற்கு உயர்கல்வி தேவையா? இதனால் பல்லாயிரம் கோடி வீணாகிறது. சரியாக படிப்பு ஏறாத மாணவர்களுக்கு ITI போன்ற தொழில் கல்வியறிவு அளிக்க புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது . 200 உ.பி யாக வீணாகாமல் 18 வயதிலேயே சொந்த காலில் நிற்கலாம்.


guna
பிப் 20, 2025 16:42

உமக்கு கீழே இருக்கும் பட்ட பெயர் சூப்பர்


Rajarajan
பிப் 20, 2025 14:39

அது இருக்கட்டும். போராட்டம் நடத்துவோர் வாரிசுகள் தனியார் பள்ளிகளில் ஒருவேளை படித்தால், அவர்களை தனியார் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்று பொதுமக்கள் திரும்ப போராடினால் ??


N Sasikumar Yadhav
பிப் 20, 2025 14:23

அப்பாவி பாமுரன் வைக்குண்டி போன்றவர்கள் திருட்டு திராவிட மாடல் அரசுக்கு முதுகுத்தண்டு உடைகிறளவுக்கு முட்டு கொடுக்கிறார்கள் வாழ்க வாழ்க அவர்களுடைய கோபாலபுர விசுவாசம்


ஆரூர் ரங்
பிப் 20, 2025 14:01

அன்றாடம் நிகழும் போக்சோ குற்றச் செய்திகளை மறக்கடிக்க நிரந்தர துருப்புச் சீட்டான ஹிந்தி எதிர்ப்பைக் கையிலெடுத்துவிட்டனர். ஏமாளி டுமீல் மக்கள் இருக்கும் வரை தீயமுகவின் டகால்டி போராட்டங்கள் தொடரும்.


B MAADHAVAN
பிப் 20, 2025 14:01

தமிழக மக்கள் நன்கு படித்து முன்னேறி விட்டால், தலையில் மிளகாய் அரைத்து ஏமாற்ற முடியாது. தாங்கள் நடத்தும் பள்ளிகளில் நிறைய பணம் வாங்கிக் கொண்டு ஹிந்தி சொல்லி தரும் அரசியல் வியாதிகள், அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி கற்றுத்தரக்கூடாது என்று எண்ணுவது ஏமாற்றுத்தனம். அதற்காக மக்களை திசை திருப்பி போராட வைத்து கட்சிக்கு லாபம் கிடைக்குமா என்று எண்ணி செய்வது அயோக்கியத் தனம். தமிழ் கற்கக் கூடாது என்று சொன்னால் நியாயம் உள்ளது. தாய் மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலத்துடன், தேசிய மொழி ஹிந்தியோ அல்லது வேறு ஏதேனும் நம் மாநில மொழியோ கற்கலாம் என்ற உத்தரவை தவறு என்று சொல்லி மக்களை அன்று போல் என்றும் ஏமாற்றலாம் என்று தவறாக நினைக்கிறார்கள். தமிழக மக்கள் புத்திசாலிகள். தெளிவு பெற்று விட்டார்கள். பெரும்பான்மை உள்ள கட்சி தான் ஆட்சி செய்கிறது. பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி, ஹிந்தி மொழி கற்பதனால் நம் மக்களுக்கு தான் லாபம். ,தமிழகத்தில் மட்டும் வியாபாரம், வேலை செய்து சம்பாதிப்பவர்கள், ஹிந்தி கற்பதால், தேசம் முழுதும் எங்கு வேண்டுமானால் சுலபமாக சென்று சம்பாதிக்க முடியும். தானும், தமது குடும்பமும் மட்டும் நன்கு படிக்க வேண்டும், தமது குடும்பம் மட்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்று எண்ணி தவறுகளை மேன்மேலும் செய்வது நல்லதல்ல.


c.mohanraj raj
பிப் 20, 2025 13:55

இனி மொழியை வைத்து அரசியல் செய்தால் அரசு கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தி விட்டு மூன்றாவது மொழி கற்க வைக்க வேண்டியதுதான் முதலமைச்சர இல்லாவிட்டால் தமிழகம் ஒன்று மூழ்கி போய்விடாது


rasaa
பிப் 20, 2025 13:32

அதேதான்.மக்கள், மாணவர்கள் மீதெல்லாம் அக்கரை இல்லை. எல்லாம் மடைமாற்றும் செயல். மக்களே புரிந்துகொள்ளுங்கள்.


எஸ் எஸ்
பிப் 20, 2025 13:14

இன்னும் 1960 கள் போலவே மக்களை நினைத்து பேசிக்கொண்டு இருக்கிறது அரசு. காலத்திற்கு தக்கவாறு தன் கொள்கைகளை புதுப்பித்துக் கொள்ளாத எந்த இயக்கமும் தாக்குப்பிடிக்காது என்பதை எப்போது புரிந்து கொள்வார்களோ?


Tirunelveliகாரன்
பிப் 20, 2025 14:38

கரெக்ட். பிஜேபிக்கு சரியாக பாடம் எடுக்கிறீர்கள். பிற மொழி திணிப்பு தேவை இல்லாத ஆணி என்பதில் தமிழ் நாட்டு மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். இதனால் தான் பிஜேபி ஸெல்ப் எடுக்க மாட்டிருக்கிறது.


முக்கிய வீடியோ