உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., - பா.ஜ., ஓட்டுக்களை குறிவைக்கும் நாம் தமிழர் கட்சி

அ.தி.மு.க., - பா.ஜ., ஓட்டுக்களை குறிவைக்கும் நாம் தமிழர் கட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அடுத்த மாதம் 5ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இத் தேர்தலில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., - பா.ஜ., ஆகியவை போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொள்ள, தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் சந்திரகுமாரைத் தவிர, நாம் தமிழர் கட்சியில் இருந்து சீதாலட்சுமி போட்டியிடுகிறார். மற்றவர்கள் அனைவரும் சுயேச்சைகள்.இதனால் சந்திரகுமாருக்கும், சீதாலட்சுமிக்கும் இடையே தான் போட்டியே. சந்திரகுமார், ஆளும்கட்சியை சேர்ந்தவர் என்பதால், எப்படியும் அவருக்குத்தான் வெற்றி என்ற சூழலே கள நிலவரமாக உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=doi0jnpl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனாலும், 'பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில், அக்கட்சியினரின் ஓட்டுக்களை முடிந்த அளவுக்கு பெற்று, கடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் பெற்ற ஓட்டுக்களை விட கூடுதலாக இம்முறை பெற்றுக் காட்ட வேண்டும்; அது, அடுத்து நடக்கவிருக்கும் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு கட்சிக்கு பேருதவியாக இருக்கும்' என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி, கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் நிர்வாகிகளை உசுப்பி விட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதையடுத்து, நாம் தமிழர் கட்சி சார்பில், தொகுதிக்குள் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகளுக்கு ஓட்டளிப்போர் குறித்த தகவல்களை முழு வேகத்தில் சேகரித்து வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்று, பிரசாரம் துவங்கும் நாளில் இருந்து அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்போரை குறிவைத்தே, தேர்தல் பிரசாரம் செய்ய லோக்கல் நாம் தமிழர் கட்சியினர் முடிவெடுத்துள்ளனர்.இன்னும் சில நாட்களில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்குச் செல்லும் சீமானும், இரு பிரதான கட்சிகளின் ஓட்டை குறிவைத்து பிரசாரம் செய்ய முடிவெடுத்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 17, 2025 17:49

பாஜக 18% ஓட்டு வாங்கியதா?? போட்டியிட்ட 23 பாராளுமன்ற தொகுதிகளிலும், அதாவது 136 சட்ட மன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 23–ல் பாஜக மண்ணைக் கவ்வியது. இதில் 10 இடங்களில், அதாவது 58 சட்ட மன்ற தொகுதிகளை உள்ளடக்கிய MP தொகுதிகளில் டெபாசிட்டே போயிடுச்சு. இதெல்லாம் தமிழ் நாட்டு மக்கள் அறிவார்கள்.


ராமகிருஷ்ணன்
ஜன 17, 2025 15:14

எப்படியிருந்தாலும் திமுக காசை கொடுத்து ஜெயிக்க போறான். நீ கேவலமாய் தோக்க போறே. மற்ற நிக்காத கட்சி ஓட்டுக்கள் உனக்கு கிடைக்கும் என்று கனவு காணாதே. ஒரு பய போட மாட்டான்.


எஸ் எஸ்
ஜன 17, 2025 13:50

திமுக கூட்டணிக்கோ நா த வுக்கோ போட விருப்பம் இல்லாதவர்கள் நோட்டா வுக்கு போட்டு அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தர வேண்டும்


xyzabc
ஜன 17, 2025 12:52

Good for dmk.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 17, 2025 12:41

நாதக இந்த தேர்தலில் ஒரு பிரச்சாரமும் செய்யா விட்டாலும் கூட, கடந்த தேர்தலை விட அதிகமான, மிக மிக அதிகமான வாக்குகள் பெறும். இது நாதக வின் வளர்ச்சியால் அல்ல. அதிமுக, பாஜக, தேமு தி க, பா ம க போன்ற கட்சிகளின் கோழைத்தனம் மற்றும் வீழ்ச்சியால். அடுத்த 2026 தேர்தலில் நாதக பயங்கரமா பேரம் பேசப் போகிறது.


Haja Kuthubdeen
ஜன 17, 2025 15:44

புதுக்கோட்டையில் திமுக போட்டியிடாததும் கோழைத்தனமா????எப்படியும் இடைதேர்தலில் எதிர்கட்சி தோற்கத்தான் போவுது..இதை வைத்து ததிமுக ஒரு பில்டம் கொடுக்கலாம் என்று ஆசையா காத்திருந்தது...அஇஅதிமுக ஒதுங்கியதால் மத்தவய்ங்களும் எஸ்கேப்....திமுக பேசாம காங்கிரசுக்கே கொடுத்திருக்கலாம்...வரும் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் 50கேட்டாலும் ஆச்சரியபட எதுவுமில்லை...குருமா பதுங்கி இருப்பதே அதற்குதாங்கய்யா...


சம்பர
ஜன 17, 2025 12:27

கிடைக்காது


Rajasekar Jayaraman
ஜன 17, 2025 12:21

திருட்டு திராவிட கூட்டத்தை அழித்து ஒழிப்போம்.


Haja Kuthubdeen
ஜன 17, 2025 15:45

அப்ப ஏன் பிஜேபி ஒதுங்கி கொண்டது!!!!


கிஜன்
ஜன 17, 2025 07:46

அதிமுக ஓட்டுக்கள் சரி... பா.ஜ. ஓட்டுக்களா? சார் தேர்தல் உ.பி ல நடக்கல.. நம்ம தமிழ்நாட்டுல நடக்கிறது.. காமெடி பண்ணாம சீமான் எப்படி அரசியல் பண்ணுறாருன்னு வேடிக்கை மட்டும் பாருங்க ....


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
ஜன 17, 2025 08:29

உபிஸ் இப்படி சொல்லி சொல்லி நீ புளகாங்கிதம் அடைஞ்சுக்க வேணடியதுதான் தமிழகத்தில் பாஜக பாராளுமன்ற தேர்தலில் 18% சதவீதம் ஓட்டுக்களை பெற்றது உன்னைப் போன்ற சமச்சீர் அறிவிலிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை இன்னும் பழைய நெனப்புலயே திரியாதிங்க


Haja Kuthubdeen
ஜன 17, 2025 10:44

அஇஅதிமுக ஓட்டுக்கள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லாது...அது நிச்சயம்.


சமீபத்திய செய்தி