உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க.,- பா.ஜ.,வுடன் ஜனசேனா கூட்டணி?

அ.தி.மு.க.,- பா.ஜ.,வுடன் ஜனசேனா கூட்டணி?

தமிழகத்தில் ஜனசேனா கட்சியை துவக்க, பவன் கல்யாண் முயற்சி மேற்கொண்டுள்ளார். தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, முன்னாள் செய்தித் தொடர்பு செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை அழைத்து பேசியுள்ளார். அவரை தமிழக தலைவராக நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.இதற்கிடையில், ஏற்கனவே தி.மு.க.,வில் இருந்தபோது, தன்னோடு நெருக்கமாக இருந்து, தற்போது அதிருப்தியில் இருக்கும் வட மாவட்ட தி.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்துச் சென்று, ஹைதராபாதில் பவன் கல்யாணை சந்திக்க வைத்துள்ளார்.இந்நிலையில், வரும் 26ம் தேதி சென்னை வரும் பவன் கல்யாண், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக, பா.ஜ., சார்பில் நடத்தப்படவிருக்கும் கருத்தரங்கில் பேச உள்ளார். பின்னர், தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், ஜனசேனாவை சேர்ப்பது குறித்து பேச்சு நடத்த உள்ளார். அப்போது, இரு கட்சி தலைவர்கள் ரியாக்ஷனை வைத்து, அடுத்த கட்டம் குறித்து யோசிக்கவும் பவன் கல்யாண் முடிவெடுத்துள்ளார். ஒருவேளை, அ.தி.மு.க., - பா.ஜ., என இரு கட்சிகளும், 'கூட்டணியில் வேண்டுமானால் ஜனசேனாவை இணைத்துக் கொள்கிறோம்; சீட் கொடுக்க வாய்ப்பில்லை' என்று சொன்னால், அதையும் ஏற்று, கூட்டணியில் இணைவது எனவும் பவன் கல்யாண் முடிவெடுத்திருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

முருகன்
மே 20, 2025 19:12

பதவி ஆசை யாரை விட்டது


கொங்கு தமிழன் பிரசாந்த்
மே 20, 2025 17:46

பவர் ஸ்டார் பவன் கல்யாண் இங்கே யாருக்கும் தெரியாது, பவர் ஸ்டார் என்றால் Dr. சீனிவாசன் தான் தமிழ்நாட்டில் தெரியும்.


P. SRINIVASAN
மே 20, 2025 16:54

ஆந்திராவில் விலைபோகாத இந்த பவன் கல்யாண் என்ன செய்யப்போகிறார் இங்கே? இவருக்கு ஒரு ஓட்டுக்கூட இங்கு இல்லை.


kr
மே 20, 2025 09:33

Jana Sena may be given 3 to 5 seats. He can be a good counter to other actor leaders during campaign


Samy Chinnathambi
மே 20, 2025 08:11

பரவாயில்லை இதன் மூலம் திமுகவுக்கு போகும் தெலுங்கர்கள் ஓட்டுக்கள் அதிமுக கூட்டணிக்கு சிறிதளவு வருவதற்கு வாய்ப்பு இருக்கும்..


மூர்க்கன்
மே 20, 2025 15:57

சாதி அரசியல் மொழி அரசியல் நமக்கு இலாபமெனில் எல்லாம் பரவாயில்ல ?? இல்லையா சின்ன தம்பி?? ஆனால் இங்கே பவரு ஸ்டாருன்னாலே விடாம மூணு நாளைக்கு சிரிப்பானுங்களே??


P. SRINIVASAN
மே 20, 2025 16:53

பகல் கனவு காணாதே சாமீ. . யார் இந்த பவன் கல்யாண்? இப்போ 4வது மனைவியை வைத்திருப்பவன்? இவன் ஒரு மனநோயாளி இவனுக்கு தமிழ்நாட்டில் ஒரு ஓட்டுக்கூட இல்லை.


ஜெய்ஹிந்த்புரம்
மே 21, 2025 00:18

அப்போ சாமியோட வோட்டு பவர் ஸ்டாருக்கு தானா? பேஷ். பிரச்சினை என்னான்னா இவனோட ல்லாம் கூட்டணி வெச்சிருக்கானுங்களேன்னுட்டு ஆடீம்காவுக்கு வரப்போற ஓட்டும் டீம்காவுக்கு போகப் போகுது சாமி. ஒங்க வோட்டை தவிர , ஹா ஹா..