உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இணைந்து செயல்பட அ.தி.மு.க., -- பா.ஜ., முடிவு; பழனிசாமி பிரசார பயணத்தில் பங்கேற்க அழைப்பு

இணைந்து செயல்பட அ.தி.மு.க., -- பா.ஜ., முடிவு; பழனிசாமி பிரசார பயணத்தில் பங்கேற்க அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ள அ.தி.மு.க., அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி பிரசார பயணத்தில் பங்கேற்க, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளது.கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தனித்தனியாக போட்டியிட்டு தோல்வி அடைந்தன. அதனால், வரும் சட்டசபை தேர்தலுக்காக, கடந்த ஏப்ரல் 11ல், இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி சேர்ந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fe7m00lt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நெருடல்

ஆனாலும், ஹிந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில், அ.தி.மு.க., தலைவர்கள் பங்கேற்ற நிலையில், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை ஆகியோரை விமர்சித்து, 'வீடியோ' ஒளிபரப்பப்பட்டது, இது சர்ச்சையானது. இதற்கிடையில், தமிழகத்தில் அடுத்து அமையப் போவது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான். அந்த ஆட்சியில் பா.ஜ., நிச்சயம் பங்கேற்கும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து பேசி வருகிறார். இதுவும், அ.தி.மு.க.,- பா.ஜ.,வுக்கு இடையே நெருடலை ஏற்படுத்தியது. இதற்கிடையில், அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியை உடைக்க, தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும், முயற்சித்து வருவதாக, பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர். சிறுபான்மையினர் ஓட்டுகள், தி.மு.க., கூட்டணிக்குதான் என்பது உறுதியான நிலையில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி விடும் என, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும், பழனிசாமியிடம் கூறியுள்ளனர்.

போராட்டம்

அதைத் தொடர்ந்து, இரு கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தி.மு.க., அரசுக்கு எதிராக, போராட்டங்களை நடத்த, இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வரும் 7 முதல் 21ம் தேதி வரை, 12 நாட்கள் முதல்கட்ட பிரசார பயணம் மேற்கொள்கிறார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டபை தொகுதியில், தனது சுற்றுப்பயணத்தை துவங்கும் பழனிசாமி, 8ம் தேதி வரை, கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் பேசிய பழனிசாமி, மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பிரசார பயண துவக்க விழாவில் பங்கேற்க அழைத்துள்ளார். அதை ஏற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரன் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

வலுப்படும்

அதுபோல், பழனிசாமியின் பிரசார பயண கூட்டங்களில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் பங்கேற்கும்போது, அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி தொண்டர்கள் அளவில் வலுப்படும். மேலும் பல கட்சிகளும் கூட்டணிக்கு வரும் என, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

ராஜா
ஜூலை 02, 2025 23:02

இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் இருவருக்கும் இதுவே கடைசி காட்சியாக அமைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது வணக்கம் வணக்கங்கள்.


Easwar Kamal
ஜூலை 02, 2025 21:59

எடப்பாடி புரிஞ்சுகிட்டு அமித்ஷா உடன் சேர்ந்து பயணித்தால் கண்டிப்பாக தமிழகத்தில் பெரிய வெற்றி கிடய்க்க வாய்ப்பு உள்ளது. மஹராஷ்டிர போன்று சிறு அளவில் வெற்றி இருந்தால் கூட பெரிய அளவு வெற்றி என்று நிரூபித்து விடுவார்கள். ஸ்டாலின் கூட்டாளிகள் மேல் மக்களுக்கு வெறுப்புதான் உள்ளது. இதை பயன் படுத்தி கொண்டால் வெற்றி பெற கூடிய சூத்திரங்களை பிஜேபி வகுத்து கொடுக்கும். பின்னர் என்ன பாண்டிசேரி மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் ஆட்சி நடத்தலாம். உங்களுக்கு வேண்டியது பிஜேபி செயது கொடுக்கும். dmk அமைச்சர்கள் எல்லாம் ஜெயிலுக்கு அனுப்பலாம் குறிப்பாக நேரு/velu/ அறநிலையத்துறை அமைச்சர்கள் எல்லாம் கூடிய சீக்கிரம் ஜெயிலில் பார்க்கலாம். ஜெய செய்ய முடியாததை செயது காட்டுங்கள். தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.


Iyer
ஜூலை 02, 2025 21:40

 பிஜேபி, ADMK மற்றும் கூட்டுக்கட்சிகள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்  மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி ல் பிஜேபி வரலாறு காணாத வெற்றி பெற ஒரே காரணம் - ஹிந்து ஓட்டுக்கள் ஒன்றுபட்டு பிஜேபி க்கு கிடைத்தது  எனவே இந்த கட்சிகள் - RSS உதவியுடன் - மூலை முடுக்குகளுக்கு சென்று ஹிந்துக்களை ஒன்று படுத்தவேண்டும்  தமிழ்நாட்டை மட்டும் அல்ல, ஹிந்து மதத்தையும் காப்பாற்ற இதுதான் ஒரே உபாயம்


T.sthivinayagam
ஜூலை 02, 2025 21:34

நோ பால் போடுற அண்ணாமலையாலும் வைடு பால் போடுற ஈபிஸ்யாலும் எதிர் அணிக்கு தான் ரன் சேருது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 02, 2025 20:57

இணைந்து செயல்பட கூட்டணிக்கட்சிகள் முடிவெடுப்பது சகஜமே .... இதில் அறிவாலய பதர்களின் கதறல் அதிகமாக இருக்கிறதே ??


Iyer
ஜூலை 02, 2025 19:37

 சாதி வெறி உண்டாக்கி ஹிந்துக்களை பிரிக்கபார்க்கிறார்கள்.  ஹிந்து சாதிகளை இணைக்க முயற்சியுங்கள்.  ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய ராஜ்யங்களில் ""ஒன்றுபட்ட ஹிந்துக்கள்"" - பிஜேபி யை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தினர்  ஜெய் ஸ்ரீராம், பழனி ஆண்டவனுக்கு அரோஹரா


venugopal s
ஜூலை 02, 2025 18:31

துணை இருந்தால் பாதுகாப்பு இருக்கும்.


SIVA
ஜூலை 02, 2025 14:19

அதிமுக தேமுதிக கூட்டணி அமைந்த போது அம்மா மற்றும் கேப்டன் இருவரும் இணைத்து ஒரு மேடையில் கூட பிரச்சாரம் செய்ய வில்லை கூட்டணி பெரும் வெற்றி, காரணம் அந்த கூட்டணி தேவை என்று மக்கள் உணர்ந்தார்கள், இன்று அதிமுக பிஜேபி சேர்ந்து பிரச்சாரம் செய்யாவிட்டாலும் வெற்றி உறுதி ...


R k Ramanathan
ஜூலை 02, 2025 13:43

அதிலே உங்களுக்கு என்ன பிரச்சினை அவர்கள் இணைந்து செயல்பட்டல அந்த கூட்டணி வெற்றி பெரும் உங்களுக்கு என்ன சந்தேகம் ராஜா


S.L.Narasimman
ஜூலை 02, 2025 13:39

எடப்பாடியார் முடிவு தீயசக்தி தீயமுகாவை ஓழிக்க இந்த காலகட்டத்தில் சரியானதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை