உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்

அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடந்த 1999ம் ஆண்டு, டிச.,24ல் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டில்லி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், 'ஹர்கத் உல் முஜாகிதீன்' அமைப்பைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. விமானத்தில், 179 பயணியர் மற்றும் 11 பணியாளர்கள் இருந்தனர். விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள், நேபாளத்துக்கு தேனிலவுக்கு சென்ற பயணி ஒருவரை குத்திக் கொன்றனர். கடத்தப்பட்ட விமானம், அமிர்தசரஸ், லாகூர், துபாய் என வட்டமடித்து பின்னர் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு சென்றது.பணயக்கைதிகளாக இருந்த விமான பயணியரை காப்பாற்ற வேண்டும் எனில், அதற்கு ஈடாக, இந்திய சிறையில் இருக்கும் மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளில் ஒருவன் தான், இந்த மசூத் அசார். இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மீடியேட்டர்கள் (நடுவர்கள்) மூவரில் ஒருவர் 'ரா' உளவு அமைப்பில் இருந்த ஐ.பி.எஸ்., அதிகாரி அஜித் தோவல். அவர் தான் தற்போது, பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் தாக்குதலிலும், முக்கிய பங்கு வகிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

lana
மே 09, 2025 22:28

அன்னிக்கே அவர் கிட்ட நம்பி பொறுப்பு கொடுத்து இருந்தால இந்நேரம் எல்லா பருப்பை எடுத்து முடித்து இருப்பார்.


Mr Krish Tamilnadu
மே 09, 2025 12:27

இந்தியா ஒவ்வொரு முறையும் வெற்றிக்கான அடையாளத்தை ஒப்பந்தங்களாக பதிக்கிறது. இந்த முறையாவது கண்ணுக்கு தெரியும் நிலப்பகுதியாக பதிய வேண்டும். காஷ்மீர் மன்னரின் விருப்பப்படி ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைந்த முழு காஷ்மீரை உருவாக்க வேண்டும் அல்லது குருநானக் புனித இடம் நம்மிடம் வர வேண்டும். அப்போது தான் அடங்கி, ஒதுக்கியது அந்த பகுதிகள் அவர்களுக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருக்கும்.


பாரத புதல்வன்தமிழக குன்றியம்
மே 09, 2025 09:40

வெல்க பாரதம்


சுலைமான்
மே 09, 2025 08:21

இந்தியாவின் சுப்ரீம் கமாண்டர்......


Saamaanyan
மே 09, 2025 06:38

அஜித் தோவல்.. அன்று மீடியேட்டர் இன்று டெர்மினேட்டர் பொருத்தமான தலைப்பு ஜெய் ஹிந்த்


புதிய வீடியோ