உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆகாஷ் எனும் நான்...:ஏழரை கேள்விகள்

ஆகாஷ் எனும் நான்...:ஏழரை கேள்விகள்

'நான் அவசரமாய் போக வேண்டும்; என்னை ஏன் மறிக்கிறீர்கள்' என ஆவேசமாய் கேட்டால், 'கதாநாயகன் திரையில் பேசுவது போல் இவன் பேசுகிறானே' என ஊர் மெச்சுமென்று நினைத்தாயா ஆகாஷ்; இல்லை, அன்றைய சம்பவத்திற்கு முன் கீழ்கண்ட சிந்தனைகள் ததும்ப நீ கனன்று கொண்டிருந்தாயா?1 'பா.ஜ.,வின் வெறுப்பு அரசியலால் எங்கள் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவமானம் ஏற்படுகிறது' என்கிறாரே தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்; 'காங்கிரஸில் மூத்த தலைவரான கார் கேவின் நிலை என்ன' என்பதை உண ராத தற்குறியா தமிழன்?2 சுதந்திரதின பொதுவிருந்தில் மக்களுடன் அமைச்சர்கள் உணவருந்துவதை பலமுறை பார்த்திருக்கும் தமிழகம், பல கோவில்களின் அன்றாட அன்னதானத்தில் அமைச்சர்கள் அடிக்கடி பங்கேற்று உண்பதை காண விரும்புகிறது; இம்மாற்றம் நிகழுமா?3 'ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேலான முதலீடு, 1.20 லட்சம் பணிவாய்ப்புகள்' என முன்னவர்கள் போலவே சொல்வது என்னவிதமான மாற்றம்; வேலைவாய்ப்புகள் நிஜமாகும் நாள் விபரம் எப்போது?4 'நீங்கள் கோபமாக பேசாதீர்கள்; அமருங்கள்' எனும் சபாநாயகரின் கண்டிப்பை பார்க்க முடிகிறதே தவிர, சத்தமாக பேசியவரின் முக உணர்வை பார்க்க முடிய வில்லை; இத்தகைய 'நேரலை' எவ்வகையில் 'வெளிப்படைத் தன்மை' என்றாகும்?5 'கரூர் சம்பவத்திற்கு காரணம் சதியா, அலட்சிய அணுகுமுறையா' என தெளிவுறாத நிலையில், பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு அரசுப்பணி; சரி... 'கொரோனா' கால பணியில் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு நீதி வழங்கும் தேதி?6 'ஊழலை சிறிதும் சகித்துக் கொள்ளாத மன நிலையை மக்கள் கொண்டிருக்க வேண்டும்' என, சுதந்திர தினத்தன்று முழக்கமிட்ட நம் முதல்வர், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை சொன்ன 'கமிஷன்' புகார்கள் பற்றி அவரிடம் விசாரித்திருப்பாரா?7 'பொதுவாழ்வில் சமரசமில்லை; ஆட்சி யாளர்களான மக்கள் நலனே முக்கியம்; அரசு ஊழியர்களான நாம் மக்கள் சேவகர்கள்' எனச்சொல்லும் முதல்வர் ஜோசப் விஜயின் ஆட்சியில் சாலை மறியலா; கண்ணாடி மாளிகையில் கல் வீச்சா; ஏய்ய்ய்... யார் நீங்கள்?7 ½ 'சகிப்புத்தன்மை' - பலவீனமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
ஆக 23, 2026 13:04

ரிப் ஆகாஷ்


baala
ஆக 28, 2026 09:33

சாவு எல்லோருக்கும் பொது . சாவில் சந்தோஷம் கூடாது


ரத்னவேலு
ஆக 23, 2026 12:29

பொறுக்கிகள் பொது மக்களுக்கு கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே தொந்தரவாகேவே இருக்கிறார்கள். நல்ல இளைஞர்கள் ஒன்று கூடினால் காவல் துறை தாங்குமா ?


நிக்கோல்தாம்சன்
ஆக 23, 2026 06:49

ஆகாஷ் எனும் இளைஞரை கொலை செய்ய துணிந்த காவல்துறையும் , அதற்கு ஊன்றுகோலாய் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சார்பாக அந்த கட்சியின் தலைவரையும் கைது செய்ய என்ன தயக்கம் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை