உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அறிவித்தால் கூட்டணி வெற்றிக்கு சிக்கல்

முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அறிவித்தால் கூட்டணி வெற்றிக்கு சிக்கல்

முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அறிவித்தால், தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆதாரப்பூர்வமாக விளக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, தமிழக பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

சமீபத்தில் டில்லியில் அமித் ஷாவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்தித்தார். அவரை தொடர்ந்து, அண்ணாமலையும் சந்தித்து பேசினார்.

'டிபாசிட்' இழப்பு

அப்போது, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமையும்பட்சத்தில், அதற்கு பழனிசாமி தலைமை ஏற்க அனுமதிக்கக்கூடாது என, அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். அதற்கான புள்ளிவிபர ஆதாரங்களையும் அவர் அளித்துள்ளார். அதாவது, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 20 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 18 சதவீதம் கிடைத்தது. கடந்த 2014, 2019 ஆகிய லோக்சபா தேர்தல்களைவிட, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணி ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.இதற்கு அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவுதான் காரணம். ஜெயலலிதா தோழி சசிகலா மற்றும் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கிய பின் நடந்த, 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் கணிசமாகவே அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு கிடைத்தன.ஆனால், பன்னீர்செல்வத்தை நீக்கியபின் நடந்த தேர்தலில், முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் குறையத் துவங்கி விட்டன. ராமநாதபுரத்தில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வை பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைக் கைப்பற்றினார். மூன்றாம் இடத்திற்கு அ.தி.மு.க., தள்ளப்பட்டு, 9 சதவீதம் ஓட்டுகளுடன், 'டிபாசிட்' இழந்தது. அதேபோல், தேனி தொகுதியிலும் அ.தி.மு.க.,வுக்கு வெறும் 13 சதவீதம் ஓட்டுகளே கிடைத்தன; டிபாசிட்டையும் இழந்தது. திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.,வுக்கு மோசமான தோல்வியே கிடைத்தது.கொங்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி மற்றும் தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணிக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு, பழனிசாமிக்கு இல்லை. அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் குறைந்து விட்டதால், இரட்டை இலை மீது இருந்த மவுசும், மதிப்பும் குறைந்துவிட்டது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட ஒரே காரணத்திற்காகவே, வட மாவட்டங்களில், அ.தி.மு.க.,வால் ஓட்டுகளை தக்கவைக்க முடிந்தது என்பதை, அமித் ஷாவிடம் அண்ணாமலை தெளிவுபடுத்தி இருக்கிறார். மேலும், நாடார், முக்குலத்தோர் உள்ளிட்ட சமுதாயங்களின் ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு குறைந்து வருவது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், அமித் ஷாவிடம் அண்ணாமலை பட்டியலிட்டுஉள்ளார்.

பின்னடைவு

அதேபோல், வன்னியர், கவுண்டர் அல்லாத சமுதாயத்தினர் ஓட்டுகள் பழனிசாமி தலைமைக்கு ஏன் கிடைக்கவில்லை என்பதையும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவை ஆதாரமாக காட்டி இருக்கிறார் அண்ணாமலை.ஈரோடு கிழக்கு தொகுதியில், கவுண்டர் ஓட்டுகள் அடர்த்தியாக உள்ள வார்டுகளில், 40 சதவீதம் அ.தி.மு.க., பெற்றுள்ளது. ஆனால், நாயுடு, செங்குந்தர், தலித், அருந்ததியர் கணிசமாக வசிக்கிற பகுதிகளில் உள்ள ஓட்டுகளில், 12 சதவீதம் மட்டுமே பெற முடிந்துள்ளது. எனவே, தொடர் தோல்வி கண்டு வரும் பழனிசாமியை முன்னிறுத்தி, வரும் சட்டசபை தேர்தலை சந்தித்தால், தே.ஜ., கூட்டணிக்கு பின்னடைவுதான் ஏற்படும். பழனிசாமி தலைமை இல்லாத அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதுடன், முதல்வர் வேட்பாளராக வேறு ஒருவரை அறிவிக்க வேண்டும் என்றும் அமித் ஷாவிடம், அண்ணாமலை கூறியுள்ளார்.இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Neethan K
ஏப் 06, 2025 06:44

2026 தேர்தல் பொது எதிரியும், தமிழக விரோதியுமான ஒற்றை கொள்ளை கூட்ட குடும்பத்தை வீழ்த்துவது தான் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். திட்டமிட்டு உழைத்தால் .. திரு அமித் ஷா குறிப்பிட்டது போல் கூட்டணி ஆட்சி கூட அமைக்கலாம். இவர்கள் இப்படி ஆளாளுக்கு வியாக்கியானம் செய்து கொண்டிருந்தால்.. தமிழகத்தை பரம்பரையாக கொள்ளையடித்து சுரண்டித் திங்கும் ஒற்றைக் குடும்பத்திற்கு கொண்டாட்டமாகிவிடும். அவர்களது அல்ல கை கட்சிகளும் சந்தோஷப்படுவார்கள்.


sampath, k
ஏப் 05, 2025 17:12

Votes reduction for AIADMK is not because of OPS. only because of e Vanniyar VS Devar


Rajkumar
ஏப் 03, 2025 22:46

அதிமுகவுடன் இப்போது கூட்டணி வைப்பதைவிட பிஜேபி தூக்கில் தொங்கலாம். செய்யவேண்டியது நாதக கூட்டணியில் பிஜேபி சேர்வது நல்லது. அண்ணாமலை தலைமை இழக்க செய்வது அதிமுக அல்ல திமுகவின் சதுரங்க வேட்டை.


S.jayaram
ஏப் 03, 2025 15:57

இவரை நம்பி ஒப்படைத்த கர்நாடக தேர்தலில் இவரால் பாஜகவை ஜெயிக்க வைக்க முடியவில்லை இவர் பேசுகிறாரா அதிமுகவை பற்றி, இந்தாலால்தான் கூட்டணி முறிந்து mp தேர்தலில் இருந்த சீட்டையும் இழந்தது. இல்லையெனில் பாஜக ஒரு 5 இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்கும் இவருக்கு தனித்திறமை எதுவும் கிடையாது மோடி செல்வாக்கு, உளவுத்துறை கொடுத்த செய்தி அதிமுகவின் துரோகி ஓ பன்னீர் செல்வம் கொடுத்த முட்டு ஆகியவையே இவர் போராட்டங்கள் நடத்தி முன்னிலை பெறவைத்தன இல்லையெனில் துண்டைக் காணோம் துணியை காணோம்னு ஒடியிருப்பார்.


Mario
ஏப் 02, 2025 08:52

முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க


nagendhiran
ஏப் 04, 2025 06:16

தற்குறி கவுன்சிலர் இருக்காங்கடா?


Minimole P C
ஏப் 02, 2025 07:53

Mr A shaw may fail in TN. His approach of putting butter in crows head and subsequently catching it, will not work here. These dravidian parties loot TN for the last 5 decades and every leader has properties in lakhs of crores. So many cases, so many evidences and all are solid cases against these parties men. If you simply conduct the case by engaging an ordinary lawyer these guys will be behind the bars. But it is not happending. If KK like person is in Shaws position, he could eliminate all these fellows from the political scene.


Minimole P C
ஏப் 02, 2025 07:41

Senkottaian may be a better chance. All AIADMK men are corrupted and out of that EPS,OPS, T mani, V mani, Pselvam are most corrupted. As the leader of the party, EPS is leading here also. It is the weakness of the judiciary, legal, undue advantages given to political parties by EC and above all peoples ignorance are the reasons that still these politicians claim they are leaders of us.


aaruthirumalai
ஏப் 01, 2025 23:59

ஆளுங்கட்சிக்கு சந்தோசம்


Raj
ஏப் 01, 2025 20:49

பின்ன யார அறிவிக்கணுங்கிறார் .


sundar
ஏப் 01, 2025 19:57

அண்ணாமலை முதல்வர் வேட்பாளர்....கேக்கவே எவ்ளோ நல்லா இருக்கு, மேலிடத்துக்கு தான் இன்னும் புரியல


சமீபத்திய செய்தி