உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமித் ஷா ரொம்பவும் டேஞ்சர் ஆனவர்: கிலியூட்டும் பாரதி

அமித் ஷா ரொம்பவும் டேஞ்சர் ஆனவர்: கிலியூட்டும் பாரதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கம்புணரி : ''வரும் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அமித் ஷா எதையும் செய்வார். ஆகையால் கட்சியினர் முக்கிய விஷயங்களை செல்போன்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும்,'' என தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பாரதி பேசியதாவது:எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் இருந்தபோது, பெண்களின் ஓட்டு முழுமையாக தி.மு.க.,வுக்கு கிடைத்தது. அவர் வெளியேறிய பின், அனைத்து ஓட்டுகளும் இரட்டை இலைக்கு போய்விட்டது. வெகு காலத்துக்குப் பின், இப்போதுதான் பெண்களின் ஓட்டு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,விற்கு வந்துள்ளது.வரும் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அமித் ஷா எதையும் செய்வார். ஆகையால் கட்சியினர் முக்கிய விஷயங்களை செல்போன்களில் பேசுவதை தவிர்த்து விடுங்கள். உட்கட்சி பிரச்னைகளை செல்போனில் பேசவே கூடாது. அதை பதிவு செய்து, அதை வைத்துக் கொண்டு, கட்சியை பிளவுபடுத்த பார்ப்பார் அமித் ஷா. அவர் ரொம்பவும் டேஞ்சர் ஆனவர். அதனால், அவரிடம் நாமெல்லாம் ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 75 ஆண்டுகளாக பல தலைவர்கள் நம்மை எதிர்த்து பேசியுள்ளனர். ஆனால், அப்படி பேசியவர்கள் அதில் உறுதியாக நின்றதில்லை. பின், நம்மிடமே திரும்பி வந்துள்ளனர். இதுதான் வரலாறு. இன்றுவரை நடப்பது அதுதான். ஒரு காலத்தில், 'அறிவாலயத்தைக் கைப்பற்றுவேன்' என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். பின் என்ன நடந்தது? அவர் இன்று அறிவாலயத்தோடு செட்டில் ஆகி விட்டார். காமராஜர், இன்று உயிரோடு இருந்திருந்தால், அவரே கூட இன்று தி.மு.க.,வில் சேர்ந்திருப்பார். அப்படியொரு இயக்கமாக தி.மு.க., வளர்ந்திருக்கிறது. 17 மாதத்துக்கு முன்பு பிறந்த, ஒரு குழந்தை அரசியலில் பேரன், பேத்தி எடுத்த நம்மைப் பார்த்து சவால் விடுகிறது. அந்தக் குழந்தை நம் கால் துாசிக்கு சமம் என்பது, அந்தக் குழந்தைக்கும் தெரியும். ஒரு தொகுதியில் இரண்டு முறைக்கு மேல் நின்றால், மக்கள் தோற்கடித்து விடுவர் என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்திருந்தார். அதனால் தான், அவர் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிடவில்லை. பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, எம்.எல்.ஏ., ஆனது தி.மு.க., தயவில்தான். அவருக்கு இன்றைக்கு பென்ஷன் கிடைக்கிறது என்றால், அது தி.மு.க., போட்ட பிச்சை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramar P P
ஏப் 04, 2025 02:36

வயது ஆக ஆக என்ன பேசுவது என்றே தெரியாது போல. செந்தில்பாலாஜியும், ஜெகத்ரட்சகனும், துரைமுருகனும் உள்ள திமுகவில் காமராஜர் இவங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா?


Ramar P P
ஏப் 04, 2025 02:26

17 மாத குழந்தை இருக்கட்டும்.இப்படி கால் தூசியாக எம்ஜிஆரையும் நினைத்தீர்கள்.அவர் இறக்கும் வரை உங்கள் தலைவர் கருணாநிதிக்கு எழவே முடியவில்லை.


subramanian
ஏப் 01, 2025 22:43

இந்திய தேசத்திற்கு, தமிழக நாட்டிற்கும் திமுக பெரும் ஆபத்து.


எஸ் எஸ்
ஏப் 01, 2025 17:44

கருணாநிதி 1969 இல் முதல்வர் ஆனதே எம்ஜிஆர் தயவில்தான். இதை எப்படி சொல்வது மிஸ்டர் பாரதி??


ram
ஏப் 01, 2025 17:07

உங்களோட பொழப்பு எப்படி.. ஓட்டுக்காக ஒருத்தற் காலை விடாமல் விழுந்து விழுந்தோ ஓட்டு பிசௌசை எடுக்குறதை தெரியலையா உங்களுக்கு... நீங்க சும்மா உக்காந்து சேர்களைத் தேய்த்து வாங்கும் சம்பளம் ... நீங்க சுரண்டி சுருட்டும் பணமெல்லாம் யாரோடது... மக்களோட பிச்சைதானே


கைலாஷ்
ஏப் 01, 2025 13:42

என்ன அர்.எஸ்.பாரதி கலைஞரை இழிவுபடுத்தி பேசியுள்ளார். தேர்தலில் ஒரே தொகுதியில் மீண்டும் மீண்டும் நிற்காமல் மக்களை ஏமாற்றி வேறு தொகுதியில் நின்றார் என்று தானே அர்த்தம் வருகிறது. முதல்வர் அவர்களே பாரதியே உங்கள் தந்தையை இழிவுபடுத்துகிறார்.


krishna
ஏப் 01, 2025 13:14

PAAVAM


Ramesh Sargam
ஏப் 01, 2025 12:26

உட்கட்சி பிரச்னைகளை செல்போனில் பேசவே கூடாது. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆம், திமுகவில் உட்கட்சி பிரச்சினை இருக்கிறது.


vee srikanth
ஏப் 06, 2025 01:51

கட்சி விஷயங்களை போனில் பேசக்கூடாது - இவர் எங்கேயுமே பேசக்கூடாது - நாற வாய்


Haja Kuthubdeen
ஏப் 01, 2025 11:57

அண்ணாமலை இருக்க திமுக எதற்கு பயப்படனும்....பிஜேபி அஇஅதிமுக கூட்டணி ஏற்படாமல் அவுரு பார்த்துக்குவார்....


c.mohanraj raj
ஏப் 01, 2025 08:26

உண்மையில் வீழ்த்தப்பட வேண்டிய ஆட்சி இது