உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமித் ஷாவின் கனவு தமிழகத்தில் பலிக்காது

அமித் ஷாவின் கனவு தமிழகத்தில் பலிக்காது

மதுரை: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., தான் ஜாதி, மதவாத அரசியல் செய்து வன்முறைக்கு வித்திடுகிறது. ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பகைமையை வளர்க்கிறது. இது உலகறிந்த உண்மை. ஆனால் அமித் ஷா, தி.மு.க.,வினர் மீது பழி போடுவது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.டில்லியில் விளையாடியதை போல தமிழகத்திலும் விளையாடலாம் என்பது அமித் ஷாவின் கனவாக இருக்கலாம். ஆனால் இங்கு அது பலிக்காது. தமிழகம் முற்றிலும் மாறுபட்ட பூமி. சமூக நீதிக்கான மண்.பா.ஜ.,வினர் வடக்கே ராமர், கிருஷ்ணர், விநாயகர், மேற்கில் துர்கா, தமிழகத்தில் முருகனை துாக்கி பிடிக்கின்றனர். எல்லா கட்சியிலும் முருக பக்தர்கள் உள்ளனர். முருக பக்தர்கள் என்று சொன்னவுடன், ஏமாந்து பின்னால் வந்து விடுவர் என நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. இதை, 2026 தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு உணர்த்தும்.இங்கு தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான இருதுருவ அரசியல் போட்டி தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Ramesh Sargam
ஜூன் 11, 2025 20:55

மொதல்ல உங்க கனவு பலிக்குதான்னு பாருங்க?


சுலைமான்
ஜூன் 10, 2025 22:51

அமித்ஷா விஷயத்த அவரு பாத்துக்குப்பாரு......


Saai Sundharamurthy AVK
ஜூன் 10, 2025 20:25

இவரது கனவில் அமித்ஷாவும், அண்ணாமலையும் வந்து பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள் போலும். அவர்களை பற்றி இவர் பேசாத நாளே இல்லை என்றாகி விட்டது.


hariharan
ஜூன் 10, 2025 19:49

ரொம்ப நடுங்குகிறார். நல்ல கம்பளிய போத்தி விடுங்கப்பா. அமித்ஷா கனவு எங்கேயும் பலித்துவிட்டால் கதை கந்தலாகி விடுமோ என்ற குளிர் சுரம்.


அரவழகன்
ஜூன் 10, 2025 19:28

அமித்ஷா கனவு பலித்தால் பிளாஸ்டிக் பெயர் பறிபோய் விடுமோ...


Harindra Prasad R
ஜூன் 10, 2025 17:22

எடுப்புக்கு வயிறு எரியுதா ?


krishnan
ஜூன் 10, 2025 17:14

அண்ணா திரு திரு மா, அவர்களே சாதிக் கட்சி மதக் கட்சி இனக் கட்சி மொழிக் கட்சி மதசார்புள்ள கட்சி மதசார்பற்ற கட்சி எந்த மதமும் சாராத கட்சி தங்கள் கட்சியும் தங்கள் கூட்டணியும் இதில் எந்த பிரவில் வருகிறது தாங்கள் மத சார்பற்ற பிரிவு எனில் இந்துவும் கிறித்துவமும் இஸ்லாமும் என எந்த மதமும் பிரிவும் உங்கள் கூட்டணி பிரிவுக்குள் வரக்கூடாது அல்லவா? அப்படியா உங்கள் மதசார்பற்ற கூட்டணி இப்போது உள்ளது ?


அருண், சென்னை
ஜூன் 10, 2025 14:44

ஆம்... தமிழ்நாடு எப்படி முன்னேறலாம்... நாங்க விடமாட்டோம்...


Narasimhan
ஜூன் 10, 2025 14:17

பாஜக ஒரு பொருட்டே கிடையாது என்று கூவிவந்த உனக்கு இப்போது ஏன் இப்படி....


lana
ஜூன் 10, 2025 13:07

தீய முக அதிமுக என்று இரு துருவம் மட்டுமே. இவ்வளவு வருஷம் முக்கி உம் எனக்கே பிளாஸ்டிக்கில் chair தான் குடுக்குறாங்க. இதுக்கு குருமா கட்சியின் விழுதுகள் என்ன சொல்கிறார்கள்.