உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உங்களுடன் ஊழல் முகாமாக மாறிய உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்: அன்புமணி குற்றச்சாட்டு

உங்களுடன் ஊழல் முகாமாக மாறிய உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை : பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கடந்த ஜூலை 15ல் துவங்கப்பட்ட, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், இதுவரை 40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், 80 சதவீத மனுக்கள் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விண்ணப்பித்த ஒருவருக்குக் கூட, இதுவரை மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. மக்களுக்கு சேவை வழங்குவதை வெற்றிகரமாக செய்ய முடியாத தி.மு.க., அரசு, ஊழலை மட்டும் வெற்றிகரமாக செய்து வருகிறது. பட்டா மாற்றம், மின் இணைப்பு கோரி பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய், மின் துறை அதிகாரிகள் கட்டாயமாக லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பட்டா மாற்றம் செய்ய, நிலங்களின் மதிப்புக்கு ஏற்ப லஞ்சம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக, விவசாய அமைப்புகளின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். லஞ்சம் கொடுத்தால் சர்ச்சைக்குரிய இடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள், 'உங்களுடன் ஊழல்' முகாம்களாக மாறி விட்டன. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், விளம்பரங்களால் மக்களை ஏமாற்ற, தி.மு.க., அரசு முயற்சிக்கிறது. தி.மு.க.,வின் ஏமாற்று நாடகங்களை தமிழக மக்கள் புரிந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
செப் 07, 2025 04:35

தெரிஞ்சு போச்சா? உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?


Karuththuraja
செப் 07, 2025 04:26

ஐயா எப்போதுமே தி மு க வையே குறைசொல்லி நம் கற்வஹி வளராது நம் சமூகத்துக்கு என்ன செய்ய இவ்வளவு நாள் அரசியல் நடத்துறீங்க ணு சொல்லுங்க... உங்களுக்கு எந்த கொள்கையும் இல்லையா.... வயிறு வளர்க்கும் நீங்கள் குறை சொல்லும் நேரத்தில் தமிழ் நாட்டு மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்.... முதலமைச்சர் ஆகனும்மு நினைத்தால் பாதையை மாற்றவும் மடை மற்றும் வேலையை உணர்வு பூர்வமாக பேசுங்கள் தமிழ் மக்கள் உங்கள் பின் நிற்பார்கள்.