உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தொகுதி பங்கீட்டில் அண்ணாமலை பார்முலா: தமிழிசை ஆதரவு

தொகுதி பங்கீட்டில் அண்ணாமலை பார்முலா: தமிழிசை ஆதரவு

அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில், தொகுதி பங்கீடு தொடர்பாக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை முன்வைத்துள்ள பார்முலாவுக்கு, முன்னாள் கவர்னர் தமிழிசை ஆதரவு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., பெற்ற ஓட்டு சதவீதம் அடிப்படையில், சட்டசபை தொகுதிகளை பங்கீடு செய்யும் பார்முலாவை கடைபிடிக்க வேண்டும் என, கட்சி மேலிடத்தை அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 20.5 சதவீதம் ஓட்டுகளையும், பா.ஜ., கூட்டணி 18.5 சதவீதம் ஓட்டுகளையும் பெற்றன. அதன் அடிப்படையில், பா.ஜ., கூட்டணி 84 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 2:1 என்ற விகிதாச்சார அடிப்படையில், கூட்டணி கட்சிகளுக்கு, தொகுதிகளை பிரித்து கொடுக்கும் பார்முலாவும், அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி அமைப்பதை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஏற்கவில்லை. எனவே, கூட்டணி ஆட்சியை அண்ணாமலையும் வலியுறுத்தவில்லை.லோக்சபா தேர்தல் ஓட்டு சதவீதம் அடிப்படையில், தொகுதிகளை ஒதுக்கினால் போதும், சட்டசபை தேர்தல் முடிவில் கூட்டணி ஆட்சியை அமைத்து விடலாம் என்பது அண்ணாமலை வியூகமாக உள்ளது. தொகுதி பங்கீட்டில், அ.தி.மு.க., சுமூக உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால், பா.ஜ., தலைமையில் கூட்டணியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, முன்னாள் கவர்னர் தமிழிசையும் ஆதரவு தெரிவித்துள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Minimole P C
மே 12, 2025 09:47

The media people who are benefited by the dravidian rule, say that TN wont accept Joint Govt. by two different parties in the same alliance, but reality is different. Gone are the days that either DMK or AIADMK alone forming Govt, as these parties loose their m due to high corruption that TN didnt see hitherto. People are not only getting awareness but also suffer a lot due to corruption. The anti establishment votes will be higher this time. These votes will go to generally winning alliance or a new depen new entrant like TVK. Therefore BJP shall insist a mimimum of 80 to 90 seats, otherwise they have to quit the alliance. This may help BJP for longer times.


கறிக்கோல்ராஜ் சிவகாசி
ஏப் 23, 2025 22:57

NDA கூட்டணியில் பண்ணங்காட்டு படை கட்சியை சேர்க்கவும்


Jagan (Proud Sangi )
ஏப் 23, 2025 22:56

117/117 தான். பிஜேபி இல்லாம நிச்சயம் தோல்வி தான் அதிமுக/பிஜேபி ரெண்டுக்கும். ஆனா அதிமுகவிற்கு இது வாழ்வா சாவா தேர்தல். பிஜேபி வளரும் கட்சி இன்னொரு தோல்வி தங்க முடியும் ஆனா அதிமுகவால் முடியாது. கடுமையா பேரம் பேசலாம். 84 ரொம்ப குறைவு


S. Balakrishnan
ஏப் 23, 2025 20:22

எல்லோரும் கொஞ்சம் அடக்கி வாசித்து தலைமை எடுக்கும் முடிவின் படி செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.


சுரேஷ்சிங்
ஏப் 23, 2025 19:03

ஆசை, தோசை, அப்பளம், வடை, ...


Rajasekar
ஏப் 23, 2025 13:16

சும்மா இருந்தாலே கட்சி வளரும்.


Veeraa
ஏப் 23, 2025 10:52

ADMK 160 OPS/DK 15 PMK 22 BJP 23 VK party


அப்பாவி
ஏப் 23, 2025 08:58

இவிங்க மகாராஷ்டிரா ஃபார்முலா படி நடக்கும்னு நினைக்கிறாங்க. முதலில் ஆதரவு தருவது போல் நடித்து பின்னாடி மொத்தமா அதிமுக வை ஊத்தி மூடிரலாம்னு ஐடியா.


Yes your honor
ஏப் 23, 2025 10:28

அந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு வேண்டாம், பொன்முடி பேசியது நாகரீகமானதா என்று உங்கள் மனைவியிடமும், மகளிடமும் கேளுங்கள், அவர்களின் பாதுகாப்பை பற்றி கவலைப்படுங்கள். ஏனெனில் நீங்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அடாவடித்தனம் நிறைந்த உலகத்தின் பாதுகாப்பற்ற ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்துகொண்டுள்ளீர்கள்.


sureshvenkat
ஏப் 23, 2025 07:45

வேணாம் நீ தனியா நில்லு இல்லனா பிஜேபி 40 pmk 25 மற்ற கட்சி 17 அட்மட் கண்டிப்பா 145 கீழ் போட்டி போடாது போர்முலா ஒர்க் இஙக எடுபடாது அந்த கனவு வேணாம்


pmsamy
ஏப் 23, 2025 06:46

தமிழ்நாட்டில் பாஜக செய்வது எல்லாம் கனவுக்கோட்டை குழந்தைகள் விளையாட்டு போன்றது பாவம்


Arunkumar,Ramnad
ஏப் 23, 2025 18:51

உமக்கு ,இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டுவதை தவிர வேற என்ன வேலை .