உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நிர்வாகிகள் பட்டியலுடன் மத்திய பா.ஜ., தலைவர்களை சந்திக்கும் அண்ணாமலை

நிர்வாகிகள் பட்டியலுடன் மத்திய பா.ஜ., தலைவர்களை சந்திக்கும் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'அரசியல் மேற்படிப்பை முடித்து நவ.28ல் தமிழகம் வரும் அண்ணாமலை, புதிய நிர்வாகிகள் பட்டியலுடன் டில்லி மத்திய பா.ஜ., தலைவர்களை சந்திக்க உள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அப்படிப்பை முடித்து சான்றிதழும் பெற்றுவிட்டார். நவ.28ல் தமிழகம் திரும்பும் அவர் 3 மாதங்களாக தமிழகத்தில் இல்லாத நிலையில், ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தலைமையில் கட்சி வழிநடத்தப்பட்டது.தமிழகம் திரும்பும் அண்ணாமலை, கட்சியை 2026 சட்டசபை தேர்தலுக்கு ஏற்ப வழிநடத்த ஆயத்தமாகி வருகிறார். கட்சிக்குள் நிர்வாக கட்டமைப்பை மாற்றி அமைக்க உள்ளார். டிசம்பர் முதல் வாரம் டில்லி செல்கிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்திக்க உள்ளார். தமிழகத்தின் புதிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வழங்க உள்ளார்.பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்ட இந்த பட்டியலை இப்போதே தயார் செய்துவிட்டதாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர். பல மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கட்சியின் இளைய தலைமுறையினர் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Oviya Vijay
நவ 22, 2024 23:50

இப்படியே புலம்பிக்கொண்டே இருங்கள் ஹரி. என்ன சொன்னாலும் திருந்த மாட்டேன் என்று இருக்கிறது உங்கள் மனநிலை.


Oviya Vijay
நவ 22, 2024 15:24

சொந்த கருத்தை எழுதாமல் மற்றவர்கள் கருத்துக்களின் மீது மட்டும் தன்னுடைய வன்மத்தை காட்டி நாங்கள் பலமுறை எடுத்துக்கூறியும் திருந்தாமல் நொடிக்கொரு முறை தான் ஒரு மட சாம்பிராணி என்பதை இங்கே நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் ஹரி... சுயமாக சிந்தித்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.


hari
நவ 22, 2024 15:49

வடை சுடும் ஓவியர் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை....உன் முரசொலி கருத்தை யாரும் மதிக்கவும் இல்லை


MADHAVAN
நவ 22, 2024 12:46

முதலில் உன்னைத்தான் மாத்தப்போறோம் னு மோடி ஜி சொல்லுவாங்க, ஆட்டுக்குட்டி தெரிசோடும்


hari
நவ 22, 2024 14:01

ஆன நாங்க கொத்தடிமைகளாக வே இருப்போம்.இது சாத்தியம்


ஆரூர் ரங்
நவ 22, 2024 10:46

அமர் பிரசாத்தை நெருக்கமாக வைத்திருப்பது பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பது போல. கஸ்தூரி அவர்கள் பேசியதை முதன்முதலாக தவறான முறையில் கண்டித்து திமுக வுக்கு வசதியாக எடுத்துக் கொடுத்த ஆள். எத்தனையோ புகார்கள் வந்தும் அப்படிப்பட்ட நபரை கட்சியில் விட்டு வைத்திருப்பது ஆபத்து.


சம்பா
நவ 22, 2024 09:56

என்னத்த மாத்துனாலும் பயன் இல்ல. தேறாது


அப்பாவி
நவ 22, 2024 08:33

படிப்பு முடிஞ்சு, பரிட்சை எழுதி பாஸ் பண்ணியாச்சா? அப்பிடியே பி.ஹெச் டி பண்ணலாமே.


hari
நவ 22, 2024 09:33

உன்னை எப்படி எல்லாம் கழுவி உதுரோம் அப்பாவி...அறிவு வருமா உனக்கு


சமீபத்திய செய்தி