உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆகம விதிகள் மீறப்படுகிறதா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆகம விதிகள் மீறப்படுகிறதா

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் ஆகமவிதிகளுக்கு முரணாக தரிசன நேரம் நீட்டிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக்கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. திருவிழா காலங்கள், சபரிமலை சீசன், தொடர் விடுமுறை போன்ற சமயங்களில் பல மணி நேரம் காத்திருந்து தரிசிக்கும் வகையில் கூட்டம் இருக்கும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை எவ்வளவு கூட்டம் இருந்தாலும் 'நடை அடைக்கப்பட்டு விட்டது' என்றுக்கூறி தரிசன டிக்கெட் தராமல் ஆகமவிதிகளை காத்து இருந்தனர். ஆனால் சமீபகாலமாக கூட்டத்தை சமாளிக்கவும், பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் ஆகமவிதிகளை மீறி நடைசாத்தப்படாமல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்டர்கள் சிலர் கூறியதாவது: ஆகமவிதிப்படி உச்சிக்கால பூஜை முடிந்து மதியம் 12:30 மணிக்கு நடைசாத்த வேண்டும். மீண்டும் மாலை 4:00 மணியளவில் சாயரட்சை பூஜையின்போது நடைதிறக்கப்படும். ஆனால் சிறப்பு தரிசன டிக்கெட் அதிகமாக வழங்குவதால் சில சமயம் மதியம் உச்சிக்கால பூஜை முடிந்து 3:00 மணி அல்லது 3:30 மணி வரை நடை திறந்து வைக்கப்படுகிறது. இரவில் அர்த்தசாம பூஜை முடிந்த உடன் பள்ளி அறை பூஜை செய்து 9:30 மணிக்கு நடை சாத்தப்பட வேண்டும். இதை 'பூத காலம்' என்பர். இந்நேரத்தில் பூஜையும், பக்தர்கள் தரிசனமும் செய்யக்கூடாது. செய்தால் அதற்குரிய பலன் கிடைக்காது.

ஆனால் இரவு நடைசாத்த 11:30 மணியாகி விடுகிறது.பக்தர்கள் கூறியதாவது:

வருமானத்திற்காக ஆகம விதிகளில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதை மதிக்காமல் நடப்பது கோயில் புனிதத்திற்கு எதிரானது. இதை தவிர்க்க அபிஷேகம், பூஜை காலங்களில் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கக்கூடாது. உச்சிக்கால பூஜையை கணக்கிட்டு காலை 11:30 மணிக்கு மேலும், பள்ளியறை பூஜையை கணக்கிட்டு இரவில் 8:30 மணிக்கு மேலும் டிக்கெட் வழங்காமல் இருந்து ஆகமவிதிகளை கடைபிடிக்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

எஸ் எஸ்
ஆக 19, 2025 23:00

இப்போதெல்லாம் பெரிய கோவில்களில் பிரகாரம் சுற்ற முடிவதில்லை. ஏன் எனில் எல்லாம் ஒருவழி பாதை ஆகிவிட்டது. கோவிலுக்குள் எதுவுமே சாப்பிட கூடாது. ஆனால் இந்த அறம் கெட்ட துறை டெண்டர் விட்டு பிரசாத கடை நடத்துகிறது. பக்தர்களும் எச்சில் பண்ணி சாப்பிடுகிறார்கள். டால்டா கலந்த விளக்கு நெய் விளக்கு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. எதை சொல்ல எதை விட?


சந்திரசேகர்
ஆக 19, 2025 21:40

எந்த பிரசித்தி பெற்ற கோவில்களிலும் ஆகம விதிப்படி சாமி கும்பிட முடியவில்லை.அறநிலையதுறை கம்பு கட்டி வைத்திருக்கும் வழியாக தான் நாம் சென்று சாமி கும்பிட வேண்டும்.பணம் செலுத்தினால் விரைவாக தரிசனம் செய்யலாம். இப்போது கோவில்களை பணம் சம்பாதிக்கும் இடமாக மாற்றிவிட்டார்கள்.கோவில்களுக்கு தானமாக கொடுத்த நிலங்கள் காணாமல் போய் விட்டது.கடவுள் தான் இவர்களை தண்டிக்க முடியும்.வேறு யாராலும் முடியாது


Sivagiri
ஆக 19, 2025 21:12

சிவன் கோவில்களில் சுவாமி சன்னதிக்கும் எதிரே அதிகார நந்திக்கும் இடையில் யாரும் குறுக்கே செல்ல கூடாது என்பது காலம் காலமாக உள்ள ஆகம விதி . . .. அனால் தற்போது எல்லா சிவன் கோவில்களிலும் , அய்யர் தீபாராதனை காண்பித்து ஓரமாக நின்று கொள்கிறார் , பக்தர்கள் வரிசையாக நந்திக்கு குறுக்கே வந்து , தொட்டு வணங்கி , விபூதி வாங்கி செல்லுமாறு , மாற்றப்பட்டுள்ளது . . . இது கொரோனா காலத்தில் ஆரம்பித்தது , ஆனால் இன்னும் இப்படி தவறான நடைமுறை பின்பற்றப்படுகிறது . . .


kamal 00
ஆக 19, 2025 20:24

அலேலுயா பாபு எப்போ ஒழியிரானோ அப்போ தான் இதுக்கு வீடிவு காலம்


Kanakala Subbudu
ஆக 19, 2025 11:48

நீதி மன்றங்கள் இதில் தலையிட்டால் மேலும் குழப்பம் ஏற்படும். அவர்கள் அரசு செய்யும் முடிவு இது என்று கூறிவிட வாய்ப்பு உள்ளது


Chandru
ஆக 19, 2025 10:53

Lord Almighty is watching everything with one thousand Eyes. HE Will strike at the most appropriate moment which we humans cannot even think of. Om Nama Shivaya


sankaranarayanan
ஆக 19, 2025 08:56

திராவிட மாடல் அரசுக்கு வேண்டியது கோயில்கள் மூலம் பண வருமானம் அதை எப்படியாவது பெருக்கினால் போதும் ஆகமங்கள் அவர்களுக்கு உதவாது அதை முற்றிலும் பின்பற்ற மாட்டார்கள் நீதி மன்றங்கள் தான் தலையிட வேண்டும்


SANKAR
ஆக 19, 2025 19:08

please observe what is happening in Tirupati as well as Kasi. Only for few hours in a day deities get some rest !...long ago Sankaracharyar said it was against rules to keep temples open even in midnight in the name of celebrating new year.but this happens all over India.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை