உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குளறுபடியற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றணும்: ஸ்டாலின் கோரிக்கை

குளறுபடியற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றணும்: ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: 'குளறுபடிகளுக்கு இடம் தராமல், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, தி .மு.க., தலைவர் ஸ்டாலின் வ லியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: மக்கள் தொகை கணக்கெடுப்பில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை கணக்கிட, ஜாதி பட்டியல் பயன்படுத்தப்படாது எனவும், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவை வகுப்புகள் தானே தவிர, ஜாதிகள் அல்ல எனவும், மத்திய அரசு தரப்பில் தரப்பட்ட விளக்கம் ஏற்புடையது அல்ல. மாநில அரசுகளுடன் ஆலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள ஜாதிகளின் பட்டியலை பெற்று, அதில் ஒன்றை தேர்வு செய்யும் வாய்ப்பை, மக்களுக்கு வழங்கும் வழிமுறை தான், குழப்பங்களுக்கு இடம் தராது. மாறாக, மக்கள் கூறும் ஜாதி பெயரை பதிவேற்றுவது, இந்தியாவில் 46 லட்சம் ஜாதிகள் இருப்பதாக, குளறுபடியான கணக்கு வரும். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் நோக்கமே, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான எண்ணிக்கையையும், அவர்களின் கல்வி, சமுதாய, பொருளாதார நிலைமையையும் அறிந்து கொள்வது தான். அப்போது தான் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு கொள்கைகளை வகுத்து, தேவையான திட்டங்களை தீட்ட அரசுகளால் இயலும். எனவே, தற்போதைய முறையை தொடர்ந்தால், மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக செலவிடப்படும், 12 ஆயிரம் கோடி ரூபாயும், லட்சக்கணக்கான அரசு ஊழியர்க ளின் உழைப்பும் வீணடிக்கப்படும். பொருத்தமற்ற விளக்கங்களை கூறி தவறை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடம் தராமல், ஜாதிவாரி கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதற்கான திருத்த நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே, இதற்கான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Karthik
செப் 08, 2026 13:22

பெரியார் புத்திரனுக்கு எதற்கு ஜாதிக் கணக்கெடுப்புத் தேவை?


Sriram V
செப் 08, 2026 07:21

How u and ur family amassed lacs of crores?


Mani . V
செப் 08, 2026 04:05

ஏன் இரும்புக்கை கோப்பால் சார் கடந்த ஐந்து வருட திருட்டு திமுக ஆட்சியில் இதற்கு தீர்மானம் கொண்டு வரவில்லை?


ஷாட் பூட் த்ரீ …
செப் 07, 2026 22:36

கருப்பு காலிப்ளவர் ஹேர ஸ்டைல்


ஜெகதீசன்
செப் 07, 2026 20:48

சாதியை விடுங்கப்பா. மதம் ஒருவரது தனிப்பட்ட விஷயம் என்றால், சாதியும் அப்படிதான். அரசுக்கு வேண்டாத விஷயம். பாரதியார் சொன்னத கேளுங்க சாதி இரண்டொழிய வேறில்லை.


பேசும் தமிழன்
செப் 07, 2026 19:55

நீங்கள் இருந்தால் தான் குளறுபடி.... இல்லையென்றால்... குளறுபடி என்ற பேச்சுக்கே இடமில்லை.


kulanthai kannan
செப் 07, 2026 19:11

Traffic jamல் சிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


Sekar Times
செப் 07, 2026 19:08

ஜெயிலில் சாதிவாரி கணக்கு எடுக்க வேண்டும்.அதில்தெரியும் நல்ல சாதி கெட்ட சாதி எது என்று


Karthik
செப் 07, 2026 17:27

தமிழக அரசு இந்த கணக்கெடுப்பை நடத்த தயாராக இருக்கின்றார்கள் போல. அதை முன்னரே முகர்ந்துவிட்ட இவர், வெளிப்படையாக சொல்லுகிறார். நாளை அவர்கள் அறிவிப்பு வெளியிடும் பட்சத்தில் திருட்டு விளம்பரத்தை திமுக பெற்றுக்கொள்ளும்.


M Ramachandran
செப் 07, 2026 16:33

உங்க்கள் லகைய்ய ஹிந்துக்களை இந்து கடவுலற்களையும் தாழ்த்தி பேசுவது. எங்க்கிருந்தோ ஒண்ட வந்து இங்கேயா இருக்கும் தெரு வில் வள வள் ன்னு பேசி அவர்கள் டி அறுதியாக ஏலியய் எய்து அவர்கள் போராடும் பிச்சையய் .. ... காசுக்கு மானம் கேட்டு சொந்த மதத்தின் அடையாலங்க்ளிய்ய டித்து அதில் கிடைய்யக்கும் ஊறுகாயாய் நக்கி இன்பம் பெறுவது கௌறு படி யாற்ற வாக்கெடுப்பா? போய் நெல்லுர் ஓங்கோலு பக்கம் பழைய குலத்தொழில் ஞாபக படுத்தும் உங்க மூன்று தலை முறைக்கு முன் ஓசி திருட்டு ரயில் ஏரி பிழைப்பு நடத்த தமிழ்நாடு வாடு மஞ்சி வாடுனு வந்தீங்க்ளே அதே இடத்துசினிமா கார்னை ஏமாற்றியும் சில கருங்க்காலிகள் உதவியுடன் அரசு திகாரம் துஷ் ப்ரயாரோகம் செய்த்தகு அடித்த முக மூடி கொள்ளை யால் குடும்ப சொத்தாக மாற்றி யேமாற்றி அந்த தீவினையால் குவித்த பணத்தை தீவினையய யாக செயல் படுத்துவது ரோந்து மாக்கள் விழித்து கொண்டு கோல்மால் புறத்தில் மண்டையில் அடித்து ஓடுங்கி இருக்கும் படி செய்தார்களே அதை மறக்க வில்லை.இனி உங்க ஜம்பம் பொய் புரட்டு வாய் ஜாலம் அது உமக்கு கிடையாது. உங்க அப்பனாக ஏக்ட் கொடுத்த மஞ்ச துண்டுக்கு நிறைய உண்டு . 2 தலை முறை மக்கள் திருட்டு கும்பல் பற்றி அறிந்திருக்க வில்லை. இனி பூ பூ ஊஊ. சங்கத்து சத்தம். டண்டணக்கா டண்டணக்கா


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை