உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ., சார்பில் வாட்ஸாப் பிரமுகர்: ம.பி.,யில் முதன்முறையாக நியமனம்

பா.ஜ., சார்பில் வாட்ஸாப் பிரமுகர்: ம.பி.,யில் முதன்முறையாக நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேசத்தின் போபாலில், 'வாட்ஸாப்'பில் மக்களை தொடர்பு கொள்ளவும், அரசு திட்டங்கள் பற்றிய தகவல்களை கொண்டு சேர்க்கவும், கட்சி நிர்வாகியை, 'வாட்ஸாப் பிரமுகர்' என்ற பொறுப்பில் பா.ஜ., மேலிடம் நியமித்துள்ளது.ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள போபாலில், சமூக வலைதளமான வாட்ஸாப் வாயிலாக மக்களை தொடர்பு கொள்ளவும், அரசு திட்டங்கள் பற்றி பரப்பவும், வாட்ஸாப் பிரமுகர் என்ற பொறுப்பில், முதுகலை பட்டதாரியான ராம்குமார் சவுராசியா என்பவரை, பா.ஜ., மேலிடம் நியமித்துள்ளது.ராம்குமார் சவுராசியா கூறுகையில், ''சாமானிய மக்களை அதிகபட்ச எண்ணிக்கையில் இணைக்கவும், அரசின் திட்டங்களை வாட்ஸாப் வாயிலாக மக்களிடையே கொண்டு சேர்க்கவும், இந்த பொறுப்பு எனக்கு தரப்பட்டுள்ளது. போபாலில் இந்த சோதனை நடக்கிறது. இது விரைவில் மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.வாட்ஸாப் பிரமுகர் என்பது, பா.ஜ.,வின் புதுப்பிக்கப்பட்ட பூத் கமிட்டி கட்டமைப்பின் ஒரு அங்கம் மட்டுமே. இதில், பூத் தலைவர், பயனாளிகளின் தலைவர் உட்பட 12 பேர் உறுப்பினர்களாக இருப்பர்; இதில் மூவர் பெண்கள்.ம.பி., -- பா.ஜ., தலைவர் வி.டி.சர்மா கூறுகையில், ''இது ஒரு பெருமையான தருணம். தொழில்நுட்பத்தின் வாயிலாக ஒவ்வொரு தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களை இணைப்பது, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும். ''கட்சி தொடர்பான செய்திகள், பிரதமர் மோடியின் மன் கி பாத் செய்திகள், அரசு நலத்திட்டங்கள் பற்றிய செய்திகளை, வாட்ஸாப் மற்றும் மன் கி பாத் பிரமுகர்கள் மக்களிடையே கொண்டு சேர்ப்பர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி