உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேச நலனில் அக்கறை இல்லாத ஸ்டாலினுக்கு பா.ஜ., கண்டனம்

தேச நலனில் அக்கறை இல்லாத ஸ்டாலினுக்கு பா.ஜ., கண்டனம்

சென்னை: 'அமெரிக்கா விதித்துள்ள, 50 சதவீத வரியை நீக்க, அதன் நிபந்தனையை ஏற்க சொல்வது அநீதி' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

'குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, குறைந்த விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும், தமிழக ஏற்றுமதியாளர்களை பரிதவிக்க விடுவது நியாயமா' என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். சிறிதளவும் முதிர்ச்சியில்லாத, பொறுப்பில்லாத, தேச நலனில் அக்கறை இல்லாத, வர்த்தக வியூகம் தெரியாத, ஒரு முதல்வரை தமிழகம் பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றால், காங்கிரஸ் -- தி.மு.க., கூட்டணி ஆட்சியில் நடந்தது போல, எண்ணெய் நிறுவனங்கள், கடனில் மூழ்கியிருக்கும். இது போன்ற அறிக்கைகள், இந்தியாவை வலுவிழக்க செய்யும் என்பது கூட தெரியாமல், சுயநல அரசியலை முன்னெடுக்கும் முதல்வரை, தமிழகம் பெற்றிருப்பது சாபக்கேடு. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, கோவை போன்ற நகரங்களில், தொழிற்சாலைகளை மேம்படுத்த, மற்ற மாவட்ட மக்களின் உழைப்பை உறிஞ்சுவது நியாயமா என்று கேட்டால், அது சரியாகுமா. அப்படித்தான் ஸ்டாலின் கேள்வி உள்ளது. சென்னையில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்கள் கூட, ரஷ்யா கச்சா எண்ணையை பெறுவது ஸ்டாலினுக்கு தெரியுமா? அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை நீக்க, அமெரிக்க அரசின் கட்டளையை, இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வது அநீதி மட்டுமல்ல, அநியாயமும் கூட. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

ராஜா
செப் 05, 2025 08:07

தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாத நபர்கள் சொல்வதை எல்லாம் நம்ப முடியாது


Tetra
செப் 05, 2025 06:46

சிலர் என்னவோ அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹25 க்கு விற்பது போல் பேசுகிறார்கள். விவரம் தெரியாமல். அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் குறைந்த பட்சம் ₹87 லிருந்து ₹112 வரை விற்கப்படுகிறது.. டீசல் ₹ 95 லிருந்து ₹130. கப்பர் சிங் வரி என்று ஓலமிட்டு க் கொள்ளை அடித்தவர்கள் இப்போது குறைத்தவுடன் அய்யோ என் வருமானம் போய் விட்டதே என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு வக்காலத்து வாங்கி மத்திய அரசை பழிப்பவர்களே . வெட்கமாக இல்லையா அனியாயத்துக்கு துணை போக


Siva Balan
செப் 04, 2025 21:44

நம் முதல்வர் ஸ்டாலின் மிகப்பெரிய தத்தி என்பதும் பசுத்தோல் போர்த்திய புலி என்பதும் அன்னிய கைக்கூலி என்பதும் அனைவரும் அறிந்ததே.


ManiK
செப் 04, 2025 21:08

ஸ்தாலின் தன் குடும்பத்தையே தேசமாக பார்ப்பதால் தேச நலனிற்காக பல தூர தேசங்கள் சென்று 7 ஸ்டார் ஹோட்டல் ரூமிலும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்கிறார்.


Venugopal S
செப் 04, 2025 20:58

குறைந்த விலை ரஷ்ய பெட்ரோலால் இந்திய பொது மக்களுக்கு எந்த விதமான பலனும் இல்லை.அதன் பலன் உண்மையில் யாருக்கு போகிறது என்பதை இங்கு எல்லோரும் அறிவார்கள்.இந்தியாவில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் நூறு ரூபாய், ஆனால் அமெரிக்காவில் பெட்ரோல் விலை இந்திய ரூபாய் மதிப்பில் அறுபது ரூபாய்க்கு கிடைக்கிறது.


Tetra
செப் 05, 2025 06:30

Ularadheenga . California vil Rs 112 per liter. new jersey il Rs 88 per liter. Oruvanum 60 rupaikku kodukka mattan. California one american gallon 3.5 ltrs - $ 4.5. New Jersey $3.5 to 3.8 per Am. Gallon. Calculate yourself


pakalavan
செப் 04, 2025 19:52

ஏன் 25 ரூபாய்க்கு விக்கவேன்டிய பெட்ரோலை 100 ரூபாய்க்கு விக்கிறானுங்க, கேட்டா தேச நலம் என்று பித்தலாட்டம் பண்றீங்க


sankar
செப் 04, 2025 12:10

நீதிக்கட்சி ஆங்கிலேய அடிவருடிகள் ஆயிற்றே


Vasan
செப் 04, 2025 11:39

He has already TOLDED, which is past tense of past. Its a new Grammar that he learnt in OXFORD, last week. Yes, he was invited to Oxford to unveil Periyaar photo.


baala
செப் 04, 2025 11:27

நீங்க.


xyzabc
செப் 04, 2025 11:22

சாபக்கேடு என்பது எப்போவோ தெரிந்த விஷயம்.


சமீபத்திய செய்தி