உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை குழுவினர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை குழுவினர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க, தமிழக பா.ஜ.,வில் ஏழு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், கட்சி பணி தவிர, மற்ற எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழக பா.ஜ.,வில், அக்டோபர் 15க்குள், ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுதும் உள்ள ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என, பா.ஜ., மேலிடம் வலியுறுத்தி உள்ளது.உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த மாநில அளவில், மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் கவர்னர் தமிழிசை, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலர்கள் ஏ.பி.முருகானந்தம், ராம சீனிவாசன், மாநில செயலர் வினோஜ் செல்வம் ஆகிய ஏழு பேர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்த ஒருங்கிணைப்பாளர்களின் கட்டுப்பாட்டில் கட்சியினர், வீடு வீடாக சென்று உறுப்பினர்ளை சேர்க்க வேண்டும். அதேநேரத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் கட்சி பணி தவிர, வேறு எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Jysenn
செப் 09, 2024 10:54

Before recruiting new cadres try to retain the old one. I have been a BJP supporter for decades and after seeing the performance of the spineless and cowardice government of Modi have ceased to be a supporter. Who will vote for the continuation of a spineless and useless government?


Sridhar
செப் 09, 2024 15:10

While your anger is understandable, it shouldnt blind you totally to the extent all anti national elements will get strengthened by your behavior. You must hold national interest above all.


VENKATASUBRAMANIAN
செப் 09, 2024 09:27

முதலில் உறுப்பினர்களை சேர்த்த பிறகு மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள். இல்லையென்றால் ஸ்டிக்கர் ஒட்டி விடுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை