உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தே.ஜ., கூட்டணியில் பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளை இணைக்க பா.ஜ., ஆலோசனை

தே.ஜ., கூட்டணியில் பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளை இணைக்க பா.ஜ., ஆலோசனை

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பலப்படுத்த, பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளை இணைக்க, தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tdpet6zz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தேர்தல் வெற்றிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மக்கள் சந்திப்பு வாயிலாக பிரசாரம் செய்து வருகிறார். பா.ஜ.,வும் வெற்றி வாகை சூட, தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை துவக்கி உள்ளது. சென்னை கமலாலயத்தில், தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம் நேற்று நடந்தது. பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட 14 பேர் பங்கேற்றனர். கூட்டத்தில், மத்திய அரசின் சாதனை திட்டங்களை, வீடு வீடாக, மக்களிடம் எடுத்து செல்வது, பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலுக்கு பின், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றிய பின், கட்சியின் வளர்ச்சி நிலை; கூட்டணியில் பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளை இணைப்பது; கூட்டணியை பலப்படுத்த த.வெ.க., நாம் தமிழர் போன்ற கட்சிகளை இணைக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தே.ஜ., கூட்டணிக்கு, முக்குலத்தோர் ஓட்டு களை பெற, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோரை இணைத்துக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மையக்குழு கூட்டம் முடிந்ததும் சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பயிற்சி பாசறை நடந்தது. கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில், தி.மு.க., அமைச்சர்கள் செய்த ஊழல்கள், மத்திய அரசு வழங்கிய நிதியில் முறைகேடு செய்தது குறித்து, மக்களிடம் பிரசாரம் செய்வது; தமிழகம் முழுதும் பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பது ஆகியவை குறித்து, சந்தோஷ் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், தமிழகம் முழுதும் இருந்து, 180 பேர் பங்கேற்றனர். இவர்களில், 40 பேர் பெண்கள். ஆனால், பா.ஜ., துணைத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட நடிகை குஷ்பு பங்கேற்கவில்லை. மாநில அளவில் பதவி பெற்ற பின் நடந்த முதல் கூட்டத்தில், அவர் பங்கேற்காதது, கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

SP
ஆக 11, 2025 21:38

நான்கு ஆண்டுகளாக அமைச்சர்கள் செய்த ஊழல்களை மக்களிடம் விளக்க போகிறார்களாம். முதலில் அவர்கள் மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதப்படுத்தி நடவடிக்கை எடுங்கள் அதுதான் மக்கள் எதிர்பார்ப்பது.


Narayanan
ஆக 11, 2025 17:27

தேதிமுக திமுக அணிக்குதான் போகும் . பெட்டி தொகையை பொறுத்து நடக்கும். பாமக அன்புமணி பிரிவு உங்கள் பக்கமும், ராமதாஸ் பிரிவு திமுக பக்கமும் போய் பாமக பிளவுபடுவதால் ஓட்டு பிரியும்.


தஞ்சை மன்னர்
ஆக 11, 2025 17:21

எப்போ தேர்தல் முடிந்த பின்பா


ராஜா
ஆக 11, 2025 16:11

பேராசை பிடித்த பூனை கஞ்சி தொட்டியில் விழுந்து இறந்து போன கதை கேட்டு இருக்கீங்களா அதான் இது


vijay
ஆக 11, 2025 15:26

பிஜேபி எல்லாவறையும் சேத்து வைங்க கடைசியா EPS உங்களை தூக்கி வெளியேபோட்டுட்டு த்வக் கூட கூட்டு சேர்ந்து ஆட்சியை புடிக்க உதவும் பிஜேபி க்கு இப்பவே அட்வான்ஸ் நன்றி .


Bharathi
ஆக 11, 2025 13:58

ரெண்டு பேராசை பிடிச்ச ஆளுங்களும் நிறைய பெட்டி கேட்பாங்க. மச்சானுக்கு ராஜ்யசபா, படுத்து இருக்கிற ரியல் எஸ்டேட் பிஸினஸுக்கு உதவி, மகனுக்கு மந்திரி பதவி. மரம்வெட்டி பேரனுக்கு மந்திரி பதவி, மகளுக்கு ராஜ்யசபா. இப்படி பெரிய லிஸ்ட் இருக்குமே.


venugopal s
ஆக 11, 2025 13:33

ஆடித் தள்ளுபடி, பாமக வாங்கினால் தேமுதிக இலவசம் என்று ஆஃபர் அறிவித்துள்ளார்களோ?


vivek
ஆக 11, 2025 15:32

அய்யோ வேணுகோபால், இது விஷாலுக்கு தெரியுமா....திமுகவிற்கு கஷ்ட காலம் ..


mohana sundaram
ஆக 11, 2025 12:39

எதற்காக ஆலோசனை செய்ய வேண்டும்.


Oviya Vijay
ஆக 11, 2025 10:34

தமிழ்நாடு மக்கள் உங்க எல்லாரையும் எலெக்ஷன்ல குழி தோண்டி புதைக்கப் போறாங்க...


vivek
ஆக 11, 2025 11:20

நீ சொன்னது நடகலைன்ன...


vivek
ஆக 11, 2025 10:33

அட விஜய்க்கு எதிரா விஷால்....திமுக நிலைமை அவளோ மோசமா? எதுக்கும் உங்க இதயம் பத்திரம்...


முக்கிய வீடியோ