உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூட்டணிக்கு தே.மு.தி.க.,வை இழுக்கும் பொறுப்பை ஏற்ற பா.ஜ.,

கூட்டணிக்கு தே.மு.தி.க.,வை இழுக்கும் பொறுப்பை ஏற்ற பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தே.மு.தி.க.,வை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இழுக்கும் பொறுப்பை பா.ஜ., ஏற்றுள்ளது. இதற்காக, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதாவை, பா.ஜ., மேலிட தலைவர்கள் சந்திக்க உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jakvgxes&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெற்று போட்டியிட்ட ஒரே இடத்திலும் தோல்வியடைந்து. தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க, அ.தி.மு.க., மேலிடம் விரும்பவில்லை. இதனால், இரு கட்சி தலைவர்களிடம் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த பின், தே.மு.தி.க.,வை அ.தி.மு.க., கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. தி.மு.க.,வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க, மத்திய அமைச்சர் அமித் ஷா தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக, மற்ற கட்சிகளை சேர்க்கும் பணிகளை, வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார். எனவே, தே.மு.தி.க.,வை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் பொறுப்பை பா.ஜ., ஏற்றுள்ளது. இதற்காக, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை, பா.ஜ., மேலிட தலைவர்கள், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Haja Kuthubdeen
ஏப் 20, 2025 12:18

ஏற்கனவே வாசன்.. அன்புமணி போன்றோர் அஇஅதிமுக தயவிலேயே ராஜ்ய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கடைசியில் பிஜெபி பக்கம் போய்விட்டார்கள். தேமுதிகவை நம்பி எப்படி கொடுப்பார்கள். சீட் கிடைக்காது என்று தெரிந்ததும் பிரேமலதா மாற்றி பேச ஆரம்பித்துட்டாங்க.


Rajarajan
ஏப் 20, 2025 09:43

போச்சுடா. கூட்டணில பங்கு பெற்று, வெற்றி பெற்ற பின்னர், அவங்க மகனுக்கு அமைச்சர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரலன்னா, அந்தம்மா ஆட்டம் தாங்க முடியாது. இவங்கனாலதான், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றதுனு முக்குக்கு முக்கு ஆணவமா பேசுவாங்களே. இவங்க வீட்டு வாசல்ல, பா.ஜ.க. மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் காத்துக்கிடந்தாங்கன்னு ரீல் மேல ரீல் விடுவார்களே. தேவையா இதெல்லாம். இப்போவே நல்ல யோசிச்சிக்கோங்க.


பாமரன்
ஏப் 20, 2025 09:22

கோயம்பேடு ஃப்ளை ஓவர் ரிடிசைன் செய்யப்போறதா அல்லது மாமண்டூர் அருகில் ஆண்டாள் அழகர் கல்லூரி இருக்கும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலை இரண்டு கிலோ மீட்டர் உள்ளே இழுத்து போடும் புர்ச்சி திட்டம் பரிசீலனையில் இருக்குன்னு ஒரு அறிவிப்பு போதும்... இவிங்களுக்கெல்லாம் ஈடி சிபீபீபீபீ ஐடி எல்லாம் தேவையில்லை... அவ்ளோ ஒர்த் இல்லை ஸாரே


Easwar Kamal
ஏப் 20, 2025 09:14

திமுக உடன் போட்டி போட்டு டெபாசிட் போகிற இடமா தேர்ந்து எடுத்து கொடுங்க. அதுக்காகவாது 2, 3 சிலரை கட்சிகள் வேண்டுமே அதுதான் இந்த தேமுதிக கட்சி எல்லாம். விஜயகாந்த் விட்டுட்டு போன கொஞ்சம் நஞ்சம் பணத்தையும் கரைக்காம விடமாட்டானுங்க பய புள்ளைங்க


kumar c
ஏப் 20, 2025 09:12

இந்த கருத்து பெட்டக கதறல் இன்னும் ஒரு வருடம் தொடரும். தி மு க அம்புட்டு அப்பாடக்கர்னா எதுக்கு 2024 ல வோட்டு குறஞ்சுது .இனி எம் எல் எ கு இன்னும் குறையும். நம்ம சரியாய் இருந்தா ஏனிந்த கதறல். இதுவே நம்பிக்கை இல்லாம இருப்பவர்களுக்கு ஒரு ஊட்ட சத்து. வளர்க ஊ பி சேவை


Barakat Ali
ஏப் 20, 2025 08:55

துக்ளக்கார் மிரட்டுனதுனாலயா என்னன்னு தெரியல.. துக்ளக்காரின் பங்காளி கட்சி அதிமுகவே வெட்டிக்குது.. இதுல தேமுதிகவை வேற இழுத்துப்போடப் போறீங்களா ????


selva sekar
ஏப் 20, 2025 08:01

தயவு செய்து தோற்கின்ற கட்சியுடன் கூட்டணி வைக்காதீர்கள் அக்கா திமுகவுடன் சேர்ந்து வெற்றியை பெற்று கட்சியை வளர்க்க பாருங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள் அரசியலில் நண்பர்கள் பகைவர்கள் கிடையாது அதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்


Oviya Vijay
ஏப் 20, 2025 07:43

திமுக தவெக தவிர்த்து அனைத்து எதிர் கட்சிகளும் ஒருசேர வேண்டும்... அதில் ஒரு கட்சி கூட விடுபட்டு விடக்கூடாது... நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால்... நாங்கள் மட்டும் கூட்டணி வைத்திருந்தால் ஜெயித்திருப்போம் என எதிர்காலத்தில் எதிர்வரிசையில் இருக்கும் ஒரு கட்சி கூட பேசிவிடக்கூடாது என்பதற்காகத் தான்... அனைத்து கட்சிகளும் ஓரணியில் கூடி போட்டியிட்டு திமுகவிடம் தோற்க வேண்டும்... அப்போது தெரியும் திமுக கூட்டணியின் பலமும் எதிர்க்கட்சிகளின் பலவீனமும்... திமுக கூட்டணி என்பது அசுர பலத்துடன் உள்ளது... அவர்களில் ஒரு கட்சி கூட வெளியே வராத வரை அந்த கூட்டணியை வீழ்த்துவது கடினம்... எதிர்க்கட்சிகள் வார்த்தை ஜாலம் மட்டுமே செய்து கொண்டுள்ளனர். வலுவான ஒரு எதிர்க்கட்சி கூட்டணி என்பது தமிழகத்தில் இல்லை என்பதே நிதர்சனம்... இந்த தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் வீழப் போகிறார்கள்... தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் என் வாக்கு பலித்திருக்கும்...


vivek
ஏப் 20, 2025 13:17

மொத்தத்தில் ஆர்டிஸ்ட் ஒரு 200 ரூபாய் தீர்க்கதரிசி


பிரேம்ஜி
ஏப் 20, 2025 21:41

ஓவிய விஜய் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்! கூட்டணி வலுவாக இல்லை என்பது முற்றிலும் உண்மை!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை