உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கண்துடைப்பாக நடக்கும் கிராமசபை கூட்டங்கள்: வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்படுமா?

கண்துடைப்பாக நடக்கும் கிராமசபை கூட்டங்கள்: வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்படுமா?

மதுரை: தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் கண்துடைப்பாகவே நடத்தப்படுகிறது. இவற்றை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.அரசியல் சாசனத்தில் 1973ம் ஆண்டு திருத்தப்படி பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் கிராமங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது 1991 முதல் தேசிய அளவில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை கூட்டங்கள் நடத்துவது அவசியம்.தமிழகத்தில் 12,500 கிராமங்கள் உள்ளன. இவற்றில் கிராம சபை கூட்டங்களை ஆண்டுதோறும் குடியரசு, தொழிலாளர், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி தினங்களில் கட்டாயம் நடத்த வேண்டும். இதில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பொதுமக்களுடன், பள்ளி ஆசிரியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், ரேஷன் பணியாளர்கள் என அரசு சார் ஊழியர்களும் பங்கேற்க வேண்டியது கடமை. அவர்கள் கிராம மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். மக்களின் தேவை தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும். அவற்றை ஒன்றிய, மாவட்ட நிர்வாகங்களுக்கு தெரிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.ஆனால் எந்த கிராமத்திலும் இம்முறைப்படி நடப்பதில்லை. ஆரம்ப காலத்தில் இக்கூட்டங்களில் 200 பேருக்கு மேல் பங்கெடுத்த நிலை மாறி, இன்று 25 பேர் வந்தாலே அதிகம் என்றளவில் தான் நடக்கின்றன.முந்தைய தி.மு.க., அரசு காலத்தில் இக்கூட்டங்களை மார்ச் 22 தண்ணீர் தினம், நவ., 1 உள்ளாட்சி தினத்திலும் கூடுதலாக நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டன. இக்கூட்டத்தை விளம்பரப்படுத்தி தேநீர் வழங்கி நடத்த உள்ளாட்சிகளின் செலவுக்கு ரூ.5 ஆயிரம் வரை அரசால் வழங்கப்படுகிறது.கிராம ஊராட்சி செயலர்கள் கூறியதாவது: கிராம சபை கூட்டம் நடத்த வழிகாட்டி நெறிமுறை இல்லை. பலர் இஷ்டத்திற்கு பேசுகின்றனர். இதனால் பெண் தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அரசு ஊழியர்கள் இருப்பதில்லை. கூட்டம் நடத்த சரியான வழிகாட்டி நெறிமுறைகளும் இல்லை. தீர்மானங்கள் ஒரு சடங்காக நிறைவேறுகிறதே தவிர, அதன்படி தேவைகள் பூர்த்தியாவதில்லை. அரசமைப்பின்படி நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களை முறையாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sundaran manogaran
நவ 09, 2026 12:23

மக்கள் கையில் அதிகாரம் போய்விடாமல் அரசியல் வாதிகள் கைகளில் வைத்துக்கொண்டு கொள்ளையடிக்க வேண்டும் என்ற தீம் சக்திகள் மாநிலதாதை ஆட்சி செய்யும் வரை கிராமங்களில் முன்னேற்றம் இருக்காது.அண்டை மாநிலமான கேரளாவில் அரசியல் தலையீடு இல்லாமல் கிராம நிர்வாகம் நடக்கிறது.அறிவார்ந்த தன்மானத்தமிழர்கள் வாழும் தமிழ்நாடு ஊழல்வாதிகளுக்கு வாக்களித்து வளர்க்கிறது.


Krishna
நவ 09, 2026 10:42

All DramaShows. Negligence, Power-Misuses, MegaLoots, VoteBriberies Endlessly Happening, UnChecked by Rulers, GovtOfficials, Police, Court-Judges etc etc


Haja kutbudeen
நவ 09, 2026 07:46

கண் துடைப்புக்காவது நடக்குதே அப்டின்னு ஆறுதல் அடையலாம். வெற்றி கிராம சபை கூட்டம் அப்டின்னு பெயர் மாற்றலாம்