உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இடைத்தேர்தல் பிரசாரம்: ஸ்டாலின் தவிர்ப்பு?

இடைத்தேர்தல் பிரசாரம்: ஸ்டாலின் தவிர்ப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பலமான போட்டி இல்லாததால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க, முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துஉள்ளார்.காங்., - எம்.எல்.ஏ.,வாக இருந்த இளங்கோவன் மறைவை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, பிப்., 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், தி.மு.க., வேட்பாளராக சந்திரகுமார் களமிறக்கப்பட்டு உள்ளார். அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. தி.மு.க.,வை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி களமிறங்கியுள்ளது. அக்கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி நிறுத்தப்பட்டு உள்ளார். தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி உள்ளிட்டோர் பிரசாரம் செய்யும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால், களத்தில் பலமான போட்டி இல்லாததால், தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க, முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கள நிலவரத்தை பொறுத்து, இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வரை பங்கேற்க வைக்க, தேர்தல் பொறுப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஜன 22, 2025 20:47

ஆக பொய் வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காமல், இலவசங்கள் எதுவும் வழங்காமல் தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறார் முதல்வர்.


ராம் சென்னை
ஜன 22, 2025 22:49

துண்டு சீட்டு எழுதிக் கொடுக்க ஆள் இல்லை.


Raj
ஜன 22, 2025 11:42

ஈரோடு மக்கள் தப்பித்தார்கள் உளறல் பேச்சில் இருந்து என்று சொல்லுங்க


ஆரூர் ரங்
ஜன 22, 2025 11:12

சாரை கவனிக்க பாட்டி தயாராக இருக்கிறார்..பொன்முடியின் அனுபவம் உமக்கும்..


ஆரூர் ரங்
ஜன 22, 2025 10:36

போட்டி இல்லை என்பதற்காக வழக்கமான கவனிப்பை தவிர்த்தால் எதிர்காலத்தில் லஞ்ச போதைக்கு அடிமையான மக்கள் பழிவாங்கி விடுவர். மரியாதையா 500 சரக்கு பிரியாணி அனுப்பி வைக்கணும். கறாரா சொல்றாங்கன்னு கேள்வி.


subramanian
ஜன 22, 2025 07:45

ஸ்டாலின் தான் போனாரு......


ராமகிருஷ்ணன்
ஜன 22, 2025 07:17

ஏன் போக வேண்டும். பிரச்சாரம் போனால். ஏதாவது புளுகி மக்களை முட்டாளாக்கி விடனும். அந்த வீடியோவை வைச்சு 5 வருடம் கழித்து கூட ஏன் சொன்ன படி செய்யவில்லை என்று மக்கள் கேள்வி கேட்க முடியும். இப்போ தேர்தல் பிரசாரம் செய்யாமல் ஜெயித்தோம் என்று பீத்தி கொள்ளலாம்


முக்கிய வீடியோ