உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிகாரிகளை, ஆசிரியர்களை பாடாய்படுத்தும் ஜாதி வெறி: சீர்கேடுகளை சந்திக்கும் பள்ளிக்கல்வி துறை

அதிகாரிகளை, ஆசிரியர்களை பாடாய்படுத்தும் ஜாதி வெறி: சீர்கேடுகளை சந்திக்கும் பள்ளிக்கல்வி துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அதிகாரிகள் ஜாதி ரீதியாக பிரிந்து செயல்படுவதால், பள்ளிக்கல்வி துறை பல்வேறு சீர்கேடுகளை சந்தித்து வருகிறது. சமீப காலமாக, அரசு பள்ளிகளில் ஜாதி ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு, சமூகத்தினர் மட்டுமின்றி, ஆசிரியர்கள், அதிகாரிகளும் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முக்கியமாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடமாவட்டங்கள், திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில், ஜாதிய பாகுபாடுகள் அதிகம் உள்ளதாக புகார் கூறப்படுகிறது. காரியம் சாதிப்பு இந்த குற்றச்சாட்டு, மாணவர்கள் மீது மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மீதும் சுமத்தப்படுகிறது. அதாவது, பள்ளிக்கல்வி துறை தலைமையகத்தில் உள்ள அதிகாரிகளின் ஜாதியை தெரிந்து கொண்டு, அவர்களது ஜாதியை சேர்ந்த ஆசிரியர்கள், தங்களுக்கான தேர்வுப்பணி, மாற்றுப்பணி, நிர்வாகப்பணி உள்ளிட்ட ஒதுக்கீட்டு காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். அந்த ஒதுக்கீடுகளில் மற்றவர்கள் போட்டியிடுவதாக தெரிய வந்தால், அவர்களைப் பற்றி மொட்டை கடிதங்களின் வாயிலாக புகார் பெற்று நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், இணை, துணை இயக்குநர்கள் என அனைத்து நிலைகளிலுமே, இந்த மாதி ரியான செயல்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. முறைகேட்டிலோ, குற்றச் செயல்களிலோ ஈடுபடும் ஆசிரியரை பற்றி, ஒரு தலைமை ஆசிரியர் மேலதிகாரிக்கு புகார் அனுப்பினால், குற்றம் புரிந்தவர் தங்களின் ஜாதியை சேர்ந்தவராக இருந்தால், கண்துடைப்புக்கு விசாரணை அறிக்கை தயாரித்து, தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்கின்றனர். அதாவது, தவறிழைத்தவர் மீதான நடவடிக்கைக்கு பதிலாக அவரை காப்பாற்றுவதிலேயே, இந்த ஜாதிப்பற்று அதிகமாக செயல்படுகிறது. இது, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்த அதிகாரிகளிடம் மட்டுமின்றி, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரிடமும் அதிகம் உள்ளது. அவர்கள் தங்களுக்கு பிடிக்காத அதிகாரிகளை, வன்கொடுமை செய்வதாக, ஆணையத்துக்கு புகார் அளித்து, இடமாற்றம் செய்வது, அவர்களின் வளர்ச்சியை தடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். நடவடிக்கை தேவை மொத்தத்தில், அனைத்து பிரிவினரிடமும் ஜாதிய வன்மமும், காய் நகர்த்தலும் அதிகம் உள்ளது. இதை அறியும் மாணவர்களும், தங்களின் ஜாதியை சேர்ந்த ஆசிரியர்களிடம் சென்று, மற்றவர்களை பற்றி புகார் கூறுகின்றனர். இதனால், பள்ளிகளில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு உணர்வு இல்லாத சூழல் நிலவுகிறது. இதுபற்றி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பெரும்பாலான ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் ஜாதிய உணர்வு மிகுந்துள்ளது. காரணம், அவர்களின் ஜாதியை சேர்ந்தோர், தலைமை செயலக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ இருந்தால், இடமாறுதல் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை எளிதாக நிறைவேற்றி விடுகின்றனர். மேலும், மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாக பதவிகளுக்கும், தங்கள் சங்க நிர்வாகிகளை பரிந்துரைக்கின்றனர். முக்கியமாக, ஒரு மாவட்டத்திற்கு, புதிதாக கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால், தங்களுக்கு தெரிந்தவர்களின் வாயிலாக, அவரின் பின்புலம், ஜாதி, விருப்பு, வெறுப்பு உள்ளிட்டவற்றை மோப்பம் பிடித்து, ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றுவது, தங்களுக்கு உகந்த இடத்துக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உள்ளிட்ட காரியங்களை சாதித்து கொள்கின்றனர். இதனால், ஜாதி உணர்வற்ற ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாணவர்களை மட்டு மின்றி, ஆசிரியர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சங்கங்கள் பெயரில் ஜாதி இருக்கலாமா?

பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு பல்வேறு சங்கங்கள் உள்ளன. அந்த வகையில், வி.சி., உள்ளிட்ட கட்சியினர், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரை சேர்த்து, சில சங்கங்களை உருவாக்கி உள்ளனர். அவை, நேரடியான ஆசிரியர் சங்கங்களாக இல்லாமல், அரசு அலுவலர் சங்கங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. அந்த சங்கங்கள், தங்கள் ஜாதி சார்ந்த ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்காகவும், புகார்களுக்காகவும் வழக்கு தொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுவாக சங்கங்கள் என்றால், அவற்றை தமிழக சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்வது வழக்கம். இதில், சமுதாயம், காலாசாரம், விளையாட்டு மேம்பாடு போன்ற நோக்கங்களுக்கான சங்கங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அத்துடன் பொது விவகாரங்களுக்காக குடியிருப்போர் சங்கங்கள், கூட்டமைப்புகளும் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், பணி யாளர் மற்றும் அலுவலர் சங்கங்களுக்கு, பொருளாதார மேம்பாடு நோக்கமாக இருப்பதால், சங்கங்கள் பதிவு சட்டத்தில் அவற்றை பதிவு செய்ய முடியாது. ஆனால், எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., பணியாளர், அலுவலர் சங்கங்கள் செயல்படுகின்றன. இதில், சில சங்கங்கள், பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்த எண்ணை பயன்படுத்தி செயல்படுகின்றன. இந்த சங்கங்களுக்கு, தற்போதைய நிலவரப்படி முறையான பதிவு இல்லை. சங்கங்கள் ஜாதி பெயர்களை பயன்படுத்தலாமா என்பதை, அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பரிந்துரைகள் அமலாகுமா?

 பள்ளி பெயர்களில் உள்ள, 'கள்ளர் மறுவாழ்வு, ஆதி திராவிடர் நலம்' உள்ளிட்ட அடையாளங்களை நீக்கி, அரசு பள்ளி என மாற்றுவதுடன், பள்ளிக்கல்வி துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்  நன்கொடையாளர் பெயரில் ஜாதியை குறிப்பிடக்கூடாது  உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களை, குறிப்பிட்ட காலத்துக்கு மேல், ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. முக்கியமாக, பெரும்பான்மை ஜாதியினர் உள்ள பகுதிகளில், அதே ஜாதி ஆசிரியர்களையோ, அதிகாரிகளையோ பணியாற்ற அனுமதிக்கக்கூடாது  கல்வி உதவித் தொகைக்கான விபரங்கள் சேகரிக்கும் போது, தலைமை ஆசிரியர் அறைக்கு அழைக்க வேண்டும். ஜாதியை அடையாளப்படுத்தும் வகையில், கையில் கயிறு, நெற்றியில் பொட்டு வைக்க அனுமதிக்க கூடாது.  நீதிபதி சந்துரு கமிட்டி பரிந்துரைகள் இவை. இவற்றை அரசு அமல்படுத்தினால் மாற்றங்கள் வரும்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

VENKATASUBRAMANIAN
அக் 13, 2025 19:36

சாதி டை ஒழித்து விட்டோம். பெயரை மாற்றி விட்டால் போதும். ஈவெரா சாதியை ஒழித்து விட்டார். இப்படியெல்லாம் பேசிக்கொண்டு சாதியை பார்த்து அரசியல் வேட்பாளர்கள் . இதுதான் திராவிட மாடல்.


Ram
அக் 13, 2025 18:29

முதலில் ஜாதியடிப்படையில் உதாரணத்திற்கு SC ST சங்கங்களை தடைசெய்யவேண்டும் , அந்த சங்கங்கள் ஒழுங்காக வேலைபார்ப்பவர்களை மிரட்டி கெடுக்கின்றன , இதனால்


Ram
அக் 13, 2025 18:27

ஜாதிகளை ஒழிக்க எல்லோரையும் சமமாக நடத்தவேண்டும் , அதைவிடுத்து இடவொதுக்கீடு ஜாதியடிப்படையில் கொடுத்தால் எப்படி ஜாதி ஒழியும் .... திறமையான மாணவர்களின் கனவை பறித்தவர்களை எப்படி மறக்கமுடியுமா


Naranam
அக் 13, 2025 13:54

பாழாய்ப் போன இட ஒதுக்கீட்டை அறவே ஒழித்து விட்டால், இந்த சாதி பூசல்களும் ஒழிந்து விடும்..


m.arunachalam
அக் 13, 2025 12:35

இயற்கை சீற்றம் வந்து இதை ஒழித்தால் தான் உண்டு, அல்லாமல் இந்த கிருமிகளை ஒழிக்க முடியாது.


govinda
அக் 13, 2025 12:34

True....... Teachers in north districts (cuddalore, viluppuram, thiruvannamalai, krishnagiri, dharmapuri) are appointed through full politics..... they didn't know teaching... plus 2 exam valuation duty plenty of govt teachers are absent.....


Rathna
அக் 13, 2025 11:44

போலி திராவிடம் சாதியை ஒழிப்பேன் என்று சொல்லி சாதி வெறியை 1000 மடங்கு பெருக்கி உள்ளது.


Subburamu K
அக் 13, 2025 09:10

Dravidian parties developed the caste community religious politics. They will never work for unity in diversity. Appeasing voters is more important for their survival and remain in power Mostly political netas are business peoples doing all kinds of illegal business


நிக்கோல்தாம்சன்
அக் 13, 2025 07:43

நீங்க வெறுமனே ஜாதி என்று எழுதிவிட்டீர்கள் , ஆனால் மதமும் இதனுள்ளே பெரிய வேலையை காட்டுகிறது என்பது எனது எண்ணம்.


வெங்கட்.
அக் 13, 2025 07:06

சாதியை ஒழித்தார் ஈ.வே. ராமசாமி என்று பெருமை கொள்வோர் இதற்கு என்ன பதில் சொல்வர்?