உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓட்டு எண்ணும் முறையில் மாற்றம்: பீஹாரில் அமலாகிறது

ஓட்டு எண்ணும் முறையில் மாற்றம்: பீஹாரில் அமலாகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வழக்கமாக ஓட்டுகள் எண்ணும் நாளில், காலை 8:00 மணி முதல் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பின் சரியாக அரை மணி நேரம் கழித்தே, மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். சில நேரங்களில் தபால் ஓட்டுகள் எண்ணி முடிப்பதற்கு முன்பாகவே, மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடுகின்றன. அதே போல், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிப்பதற்குள்ளாகவே, சில நேரங்களில் தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு விடுகின்றன. இதனால், குழப்பங்கள் நீடிக்கின்றன. இதை தவிர்க்கும் வகையில், ஓட்டு எண்ணிக்கையில் ஒரே மாதிரியான ஒழுங்கு முறையை உறுதி செய்யும் வகையில், எண்ணும் முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன்படி, இனி தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளின் இறுதிச் சுற்று எண்ணும் பணி துவங்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. ஏதேனும் ஒரு ஓட்டு எண்ணும் மையத்தில் தபால் ஓட்டுகள் அதிக அளவில் பதிவாகி இருந்தால், தாமதம் இல்லாமல், அதை விரைவாக எண்ணி முடிக்க வசதியாக கூடுதல் மேஜைகள் அமைத்து, அதற்கேற்ப ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்த மாற்றம், வரும் நவம்பருக்குள் நடக்கவுள்ள பீஹார் சட்டசபை தேர்தலில் இருந்து அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது -நமது சிறப்பு நிருபர்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Padmasridharan
செப் 26, 2025 20:21

வோட்டு மெஷின்ல பொத்தானை அழுத்தியவுடன் sound வருது ஆனா light உடனே அணைவதில்லை எல்லா இடத்திலும் இப்படித்தானா. sound வந்துடிச்சி உடனே என்னைவெளியில வரச்சொன்னாங்க ஒரு அதிகாராம்மா, நான் light off ஆனாதும் தான் அட்டை பெட்டிக்குள்ளிருந்து வெளியில் வந்தேன்


M.Sam
செப் 26, 2025 15:42

கண்ணன் கட்ட பின்பு சூர்யா நமஸ்காரம் இந்த தடவை புதுசா ஏதாவது செய்வானுக போல வோட்டை சொறி கும்பல் சே சே


Mohan
செப் 26, 2025 09:46

தேர்தல் ஆணையமே ..மொதல்ல பூத் வாரிய எண்ணுறத கைவிடுங்க எனக்கு வோட் போடல அதனால கரண்ட் கட், சாக்கடை அள்ளுவது கிடையாது கொண்டுவந்து கொட்டுறானுக , தண்ணி வராது , இத மொதல்ல பாருங்க


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 26, 2025 10:50

இது சரியான கருத்து. பூத் வாரியாக ஓட்டு எண்ணும் நடைமுறை தவறு. பழி வாங்கும் நடவடிக்கைகள் தோற்றவர்களும் எடுக்கலாம் வெற்றி பெற்றவர்களும் எடுக்கலாம்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 26, 2025 21:08

அப்படி செஞ்சா தானே தரவுகளின் அடிப்படையில் வாக்குத் திருட்டை அரங்கேற்ற முடியும்.


Ayappan
செப் 26, 2025 23:04

அது உங்க வேல


புதிய வீடியோ