உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செஞ்சி கோட்டை பெருமைக்கு 348 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்ட சத்ரபதி சிவாஜி

செஞ்சி கோட்டை பெருமைக்கு 348 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்ட சத்ரபதி சிவாஜி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சிகோட்டை பெருமைக்கு 348 ஆண்டுகளுக்கு முன்பே சத்ரபதி சிவாஜி அடித்தளமிட்டுள்ளார்.இந்தியாவில், மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் ராணுவ தளங்களாக அமைந்திருந்த 12 கோட்டைகளை, உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கையை மஹாராஷ்டிரா அரசு முன்னெடுத்தது. அதில் 11 கோட்டைகள் மஹாராஷ்ட்டிராவில் உள்ளன. 12வது கோட்டையாக, தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி கோட்டை அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜெகாம்ஸ், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் செஞ்சி கோட்டையில் நேரடி ஆய்வில் ஈடுபட்டார்.இவரது அறிக்கையை தொடர்ந்து செஞ்சி கோட்டை உள்ளிட்ட 12 கோட்டைகளையும், தனது பட்டியலில் இணைத்து, அறிவிப்பு ஒன்றை, நேற்று முன்தினம் வெளியிட்டது யுனெஸ்கோ நிறுவனம். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த உலக பாரம்பரிய குழுவின் 47வது அமர்வில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த யுனெஸ்கோ அறிவிப்பின் பின்னணியில், 348 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு இருக்கிறது என்று, விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அமைந்துள்ள பழம் பெரும் கோட்டை, கி.பி.13ம் நூற்றாண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில், ஆட்சியாளர்கள் பலரால் மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது. கடந்த கால வரலாற்றில், தென்னிந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகளில் ஒன்றாக திகழ்கிறது. குறிப்பாக, பீஜப்பூர் சுல்தான்களிடம் இருந்து 1677ல் செஞ்சி கோட்டையை கைப்பற்றினார் மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி. சுமார் 20 ஆண்டுகள் இவர்களது ஆளுகையின் கீழ் இருந்தது செஞ்சி கோட்டை. அந்த நேரத்தில்தான், கிழக்கிந்திய கம்பெனியினர் தேவனாம்பட்டினத்தில் வணிகம் செய்வதற்கான உரிமை செஞ்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. செஞ்சி கோட்டையை கைப்பற்றிய சில காலம் பேரரசர் சிவாஜி அங்கு தங்கியிருந்தார். அப்போது, கோட்டை அரண்களை பலப்படுத்துவதில் பெரிதும் கவனம் செலுத்தினார். சுற்றுச்சுவர் மதில்கள் பலப்படுத்தப்பட்டன. காவல் அரண்கள் ஏற்படுத்தப்பட்டன.சிவாஜி கைப்பற்றிய சில நாட்களில், செஞ்சிக்கு வந்திருந்த பிரான்சிஸ் மார்ட்டின், அதனை பதிவு செய்து இருக்கிறார். இவரைத்தொடர்ந்து கி.பி., 1678ல் செஞ்சிக்கு வந்திருந்த ஜெசூட் பாதிரியார் ஆன்ட்ரூ பிரைரா என்பவர், 'இந்தப் பணியில், சிவாஜி தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி, முக்கிய நகரங்களைப் பலப்படுத்த தனது மாநிலத்தின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தியுள்ளார். அவர், செஞ்சியைச் சுற்றி புதிய அரண்களைக் கட்டினார், அகழிகளைத் தோண்டினார், கோபுரங்களை உயர்த்தினார், நீர்த்தேக்கங்களை அமைத்தார், ஐரோப்பிய பொறியாளர்களே வியக்கும் வகையில், கச்சிதமாக அனைத்து வேலைகளையும் செய்தார்' என்று விரிவாக தகவலை பதிவு செய்து இருக்கிறார். சத்ரபதி சிவாஜியின் இந்த பணிகள், மராத்திய அரசுக்கு பெரிதும் கைகொடுத்தன. இதன் காரணமாகவே இவர்களிடமிருந்து, செஞ்சியை கைப்பற்ற மொகலாயர்கள் 7 ஆண்டுகள் முற்றுகையில் ஈடுபட வேண்டியிருந்தது. சிவாஜியின் ஆளுகையின் கீழ் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக செஞ்சிக் கோட்டை மாற்றப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சிக்கோட்டை தற்போது இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை செஞ்சி கோட்டை பெரிதும் ஈர்க்கும். சுற்றுலா, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் வளர்ச்சி காணும் வாய்ப்பு செஞ்சிக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Murugan Gurusamy
ஜூலை 14, 2025 21:57

இந்த கோட்டை கட்டப்பட்ட ஆண்டு 1190 வீர சிவாஜி ஆட்சி செய்தது 1674 முதல் 1680 வரை தான் பிஜேபி அரசாங்கம் மேலும் மேலும் கெட்ட பெயர எடுக்க வேண்டாம் ஒரு கோனார் கூட பிஜேபி யை ஆதரிக்க மாட்டார்கள், கோட்டையை காட்டியது யாதவ் மன்னன்


Murugan Gurusamy
ஜூலை 14, 2025 15:58

இது பொய்யான வரலாறு,சிவாஜி ஆட்சி செய்ததே 1674 முதல் 1678 வரை, சங்கிகள் பொய்யான வரலாற்றை ஏற்படுத்த முயல்கிறார்கள்


மூர்க்கன்
ஜூலை 14, 2025 11:39

ஞான சூன்யங்களுக்கு எப்படி தெரியும்?? கல்விதான் ஒளி விளக்கு. கல்வி கற்கும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் பல்கலை கழகங்களுமே திராவிட மாடலின் கோட்டை சுவர்கள் என்பது?? இன்னும் கல்வியறிவும் பகுத்தறிவும் பெற்ற ஒவ்வொரு மாணவ, மாணவியரும் எங்கள் போர்ப்படை செல்வங்கள். முடிந்தால் உன் அறியாமை இருள் பிரச்சாரங்களை ஆதவன் சுடர் விடும் பூமியில் விதைத்து பார்?? எந்த பயனும் இருக்காது. சிந்திக்க தெறிந்த எம்மக்கள் அகில இந்தியாவுக்கும் கலங்கரை விளக்கம் ஆவார்கள்.


rama adhavan
ஜூலை 14, 2025 01:10

அப்போ செஞ்சி கோட்டைக்கும் திராவிட மாடலுக்கும் சம்பந்தம் இல்லையோ? செஞ்சி கோட்டை சிவாஜி மாடல், செய்ண்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கில மாடல், பரங்கிப்பேட்டை போதுக்கீசியர் மாடல், அப்போ திராவிட மாடல் என்ன, சூனியமா?


kalyanasundaram
ஜூலை 13, 2025 15:47

ONE said that SHIVAJI MAHARAJ constructed vellore fort under the direction of Stalin but the commision amount left to all to imagination


Santhakumar Srinivasalu
ஜூலை 13, 2025 13:21

இனி செஞ்சி கோட்டையை காப்பது மத்திய மாநில அரசாங்களின் கடமை!


magan
ஜூலை 13, 2025 13:15

சத்ரபதி சிவாஜி மகாராஜ் புகழ் ஓங்குக


Ram
ஜூலை 13, 2025 12:48

ஸ்டாலின் சொல்லித்தான் சிவாஜி செய்தார் என்று கழகத்தர் மார்தட்டிக்கொள்வார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை