உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமைச்சர் மீதான அமலாக்கத்துறை சோதனை முன் கூட்டியே எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் மீதான அமலாக்கத்துறை சோதனை முன் கூட்டியே எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனை நடத்தி உள்ளனர். இது எதிர்பார்த்ததுதான் என, அறிவாலய வட்டாரங்களில் சாதாரணமாக பேசுகின்றனர். அறிவாலய வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., கூட்டணியை விட்டுச் சென்ற அ.தி.மு.க., தேர்தலில் தோல்வி அடைந்ததும், மீண்டும் கடந்த ஏப்.,லில் பா.ஜ.,வுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டது. தமிழகத்துக்கு அமித் ஷா வந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, கிண்டி ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வரவழைத்து, மீண்டும் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்தார். அதற்கு முன்பே, தி.மு.க., தொடர்புடையோர் மற்றும் தி.மு.க., அமைச்சர்கள் மீது மத்திய பா.ஜ., அரசு கண் வைத்திருந்தது. செந்தில் பாலாஜி, பொன்முடி குடும்பத்தினர், அமைச்சர் துரை முருகன் குடும்பத்தினர், தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரை குறி வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வழக்குகளும் போடப்பட்டன. இது அரசியல் பின்புலத்தோடு போடப்பட்ட வழக்குகள் என, தி.மு.க., தரப்பும் கடும் விமர்சனங்களை வைத்தது. இதன் பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ., தலைமையின் ஆசி உண்டு என்றும் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்த பிறகும் கூட, சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. அந்த கூட்டணியை நோக்கி, சிறு கட்சிகள் கூட வரவில்லை. இதனால், இரு தரப்பும் கடும் அப்செட்டில் உள்ளன. இந்த சூழ்நிலையில், தி.மு.க.,வை நோக்கி அமலாக்கத்துறையை கட்டாயம் பா.ஜ., தலைமை ஏவி விடும் என, தி.மு.க., தரப்பு எதிர்பார்த்தது. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்த்தார். அவருக்கு கிடைத்த ரகசிய தகவல்களும் அதையே உறுதி செய்தன. எனவே, 'மிக விரைவில், அமலாக்கத்துறை அதிகாரிகள், தி.மு.க., அமைச்சர்களை நோக்கி சோதனைக்காக வருவர்' என, சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, சிக்னல் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும், 'அதை அனைவரும் துணிச்சலோடு, கவனமாக அதை எதிர்கொள்ள வேண்டும்' எனவும் சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்ல, 'என்னதான் தி.மு.க., மற்றும் தமிழக அரசு செயல்பாடுகள் மீது எதிர்கட்சியினர் குறைகளை கூறினாலும், தி.மு.க., மீது மக்கள் நம்பிக்கையாக உள்ளனர். தமிழக அரசின் செயல்பாடுகள் அனைத்தும், மக்களை சென்று சேர்ந்திருக்கிறது. ஆங்காங்கே ஒரு சில குறைகள் இருக்கலாம்; அதை, அமைச்சர்கள் அறிந்து சரி செய்ய வேண்டும். ஆக., கடைசியில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு செல்லவிருக்கிறேன். இருபது நாட்களுக்கு பயணத் திட்டம் தயாராகி இருக்கிறது. நான், தமிழகத்தில் இல்லாத சூழலில் கூட, அமைச்சர்களை நோக்கி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பப்படலாம். இப்படியெல்லாம் செய்வதன் வாயிலாக, சட்டசபைத் தேர்தலை தி.மு.க., வலுவுடன் எதிர்கொள்வதில் தொய்வு ஏற்படும் என பா.ஜ., கருதும்; பின்னணியில் அ.தி.மு.க.,வும் இருக்கும். அரசியலில் இதெல்லாம் நடப்பதுதான்' என்றும் அமைச்சர்களிடம் சொல்லி, அனைவரையும் கவனமாக இருக்குமாறு முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார். அமைச்சரவை கூட்டத்துக்கு முன், தி.மு.க, மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது. அப்போதும், முதல்வர் இதே கருத்தை வெளிப்படுத்தி, மா.செ.,க்களாக இருப்போரையும் கவனமாக இருக்கக் கேட்டுக் கொண்டார். அதனால், தமிழக அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை சோதனையை, முதல்வர் ஸ்டாலின் வாயிலாக, கட்சியின் முக்கியத் தலைவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஆக 17, 2025 22:57

இது எதிர்பார்த்ததுதான். அப்படி என்றால் என்ன? ஊழல் செய்திருக்கிறார். ரெய்டு வரும் என்று முன்கூட்டியே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.


peermohammednurullaraja peermohammednurullaraja
ஆக 17, 2025 16:32

திரு.முக ஸ்டாலின் சொல்லி தான் இந்த அமலாகத்துறை சோதனை நடக்கிறதா.


ramesh s
ஆக 17, 2025 09:31

கூட்டணி அமைந்த பிறகும் வெற்றி பெறுவதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லையா. அண்ணாமலை மீதான உங்களது பாசம் என்னவெல்லாம் சொல்ல வைக்கிறது . அண்ணாமலை இல்லாத பா ஜ க தோற்க வேண்டும் என்று நினைக்கிறீங்க.


N PALANISAMY
ஆக 17, 2025 09:26

அல்லது அதானி & அம்பானி போன்றவர்கள் காப்பாற்றப்படுவது போலவா, சகோ....?


vivek
ஆக 17, 2025 11:16

அதானி , அம்பானி எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் கூட இருந்தாங்க


Mahendran Puru
ஆக 17, 2025 09:15

இன்று நாட்டிலே மூன்றாவது பெரிய பணக்காரன் அமித் மகன் ஜெய். சொல்லிக் கொள்ளும்படி ஒரு தொழில் கிடையாது. இந்த அமலாக்கத்துறை அவன் வீட்டுக்கு எப்போ போகும்? அங்கேயும் போகட்டுமே. மற்றபடி தமிழகத்தில் அமலாக்கத்துறை வரும் நாட்களில் ரொம்பவே ஆட்டம் காட்டும்.


ஆரூர் ரங்
ஆக 17, 2025 11:01

இந்திய கிரிக்கெட் வாரியம் சென்னையில் தமிழக SOCIETIES சட்டத்தின் கீழ் பதிவு செய்யபட்ட தனியார் நிறுவனம். முறைகேடுகள் நடந்திருந்தால் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கலாமே. ஓ. பிசிசிஐ யின் தமிழக TNCA பொன்முடியின் மகன் அசோக்கின் தலைமையில் உள்ளதே. அவருக்கும் ஆபத்து வருமே.


vivek
ஆக 17, 2025 08:08

சும்மா வெளியே வாங்க பாஸ்....நாம வாங்காத அடியா......


visu
ஆக 17, 2025 06:39

அப்ப கதவை பூட்டிவிட்டு ஓடிவிடுங்கள் என்பதுதான் அந்த துணிச்சலான எதிர்கொள்வதா


D Natarajan
ஆக 17, 2025 06:24

எல்லா அமைச்சர்களும் லஞ்சத்தில் ஊறி திளைக்கின்றனர் . ரெய்டு வரும் என்று தயாராக இருக்க வேண்டும். 2026 எலெக்ஷன் தான் தீர்வு


Mani . V
ஆக 17, 2025 05:34

சப்பாஸ். ஒரு தலைவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். தனக்குக் கீழ் உள்ள கொள்ளையர்களுக்கு பிரச்சினை வருவதை முன்கூட்டியே கணித்து, அவர்களை எச்சரித்து, கொள்ளையடித்ததை பதுக்கி வைக்கச் சொல்லும் திறமை இருப்பதால்தான் அவர் தலைவனாக இருக்கிறார்.


Indhuindian
ஆக 17, 2025 04:35

இதை சொல்ல தீர்கதரிசியா இருக்கணுங்கற அவசியம் இல்லை. பொதுவா எல்லா மந்திரிகள், எம் எல் ஏ க்கள், எம் பீ கள் , உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் , அதன் தலைவர்கள் எல்லோருக்கும் பொதுவா சொன்ன போறும், அதற்க்கு துணை போகும் அதிகாரிகள் உட்பட .


சமீபத்திய செய்தி