உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வன்னியர் ஆதரவை பெற முதல்வர் ஸ்டாலின் வியூகம்

வன்னியர் ஆதரவை பெற முதல்வர் ஸ்டாலின் வியூகம்

சென்னை: இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு, சிலையுடன் கூடிய அரங்கத்தை, 29ம் தேதி திறந்து வைத்து, வன்னியர் ஓட்டுகளை வளைக்க முதல்வர் ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளார்.வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, 1987ல் வட மாவட்டங்களில் தொடர் போராட்டம் நடந்தது. போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்; 21 பேர் பலியாகினர். அவர்களின் வாரிசுகளுக்கு பல ஆண்டுகளாக, எந்த சலுகையும் வழங்கப்படாமல் இருந்தது.தற்போது, உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை, அரசு வழங்கி வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் பலியான 21 பேருக்கும் சிலைகளுடன் கூடிய நினைவு அரங்கம் கட்டப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக, விழுப்புரம் மாவட்டம் வழுதாரெட்டியில், 5 கோடி ரூபாய் மதிப்பில் நினைவரங்கம் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகில், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு, 4 கோடி ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை, வரும் 29ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். வன்னியர்களுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும்படி, பா.ம.க.,வினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இப்பிரச்னையை கையில் எடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த, பா.ம.க., தலைமை திட்டமிட்டு இருந்தது.இது முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து, வன்னியர் ஓட்டுகளை வளைக்கும் வகையிலானப் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாகவே, 21 வன்னியர் இனத்தைச் சேர்ந்த சமூக நீதி போராளிகளுக்கு, நினைவு அரங்கம் திறக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
நவ 20, 2024 11:57

முன்பு வன்னியர்கள் சிறப்பு ஒதுக்கீடு கேட்ட நேரத்தில் மிகவும் பிற்பட்டோர் கோட்டா ஒன்றை ஏற்படுத்தி முதலில் தனது சாதியையும் அதில் சேர்த்த சாகசக்காரரர் கருணா. இப்போ அப்பட்டியலில் சாதிகள் நிரம்பி வழிவதால் வன்னியர்களுக்கு வாய்ப்பு குறைந்து விட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினாலும் உண்மையான பொருளாதார நிலையைக் கண்டுபிடித்தல் கஷ்டம். போலி சாதிச்சான்றிதழ் ஏராளம்.


ஆரூர் ரங்
நவ 20, 2024 10:25

மேலும் சிலைகள் மண்டபங்கள்? இதுக்குதான் நேற்று ஐம்பது சதவீத பங்கு கேட்டீங்களா? ஆனா ஆசிரியர் சம்பளம் கொடுக்க நிதியில்லையாம். நல்ல சாலை போடவும் பணமில்லை?


Barakat Ali
நவ 20, 2024 09:07

துரைமுருகனே - அல்லது டி துரைமுருகனா - அந்த வகுப்பைச் சேர்ந்தவர்தான் ...... தனது சமூக வாக்குகளை குடும்பக்கட்சிக்குப் பெற்றுத்தருவார் ......


SUBBU,MADURAI
நவ 20, 2024 06:20

வன்னியர்களின் ஆதரவை பெற எடப்பாடி செய்த ஓட்டு அரசியலால்தான் அவரது ஆட்சியே பறிபோனது. இப்போது முதல்வர் ஸ்டாலினும் அதே போன்று சாதி ஓட்டு அரசியலை கையில் எடுத்துள்ளார். தமிழகத்தில் MBC என்று அழைக்கப் படும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என தமிழக அரசால் அங்கீகரித்து வரையறுக்கப் பட்ட சமுதாயத்தினர்கள் கிட்டத்தட்ட 90 க்கும் (ஜாதிகள்) மேல் அதிகமாக இருக்கின்றனர் அவர்கள் அனைவருக்குமான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அரசு வழங்கிய மொத்த இட ஒதுக்கீடு 20 சதவீதம் ஆகும். அப்படி அந்த ஒட்டு மொத்த சமுதாயத்தினருக்குமான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து 10.5 சதவீதத்தை எடுத்து வன்னியர்களுக்கு கொடுத்து விட்டு மீதமிருக்கும் வெறும் 9.5 சதவீத இட ஒதுக்கீட்டை மற்ற சமுதாயத்தினர் அனைவரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என வன்னியர்களின் ஓட்டுக்களை முழுமையாக பெறுவதற்காக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் இது மற்ற அனைத்து சமுதாய மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது அந்தக் கோபம்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியின் தலைமையிலான அதிமுக தோற்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. (பின்குறிப்பு: இப்படி எழுதுவதால் நான் வன்னியர்களுக்கு எதிரானவன் என யாரும் நினைத்து விட வேண்டாம் தமிழகத்தில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் அவர்களுக்கும் அரசு நியாயமான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதே என் விருப்பம்.)


புதிய வீடியோ