உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கம்யூ., தலைவர்களே த.வெ.க., ஆட்சியை விமர்சிக்கின்றனர்: பழனிசாமி பேட்டி

கம்யூ., தலைவர்களே த.வெ.க., ஆட்சியை விமர்சிக்கின்றனர்: பழனிசாமி பேட்டி

சென்னை: ''த.வெ.க., ஆட்சி அமைப்பதற்கு துணை நின்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களே, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப்பதாக சொல்கின்றனர்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி; சட்டசபை தினமும், பத்து மணி நேரம் நடப்பதாக பெருமை பேசுகின்றனர். ஆனால், மூன்று மணி நேரம் தான் மக்கள் பிரச்னைகளை பேசுகின்றனர். மீதி நேரம், ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் மாறி மாறி பேசி, நேரத்தை வீணடிக்கின்றனர்.எந்த கேள்வி கேட்டாலும் மூன்று அமைச்சர்கள் மட்டும் தான் பதில் சொல்கின்றனர். காவல் துறை மானிய கோரிக்கையில் நான் கேட்ட கேள்விகளுக்கு, முதல்வர் எந்த பதிலும் சொல்லவில்லை.முதல்வர், தன் பதிலுரையில், கொலை, கொள்ளை, போதை பொருட்கள் விற்பனை நீண்ட காலமாக இருப்பதாக சொல்கிறார். முதல்வர் தான் அவற்றை தடுக்க வேண்டும். அவரே இப்படி சொன்னால், யாரிடம் போய் சொல்வது?த.வெ.க., ஆட்சி அமைப்பதற்கு துணை நின்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களே, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்கின்றனர். த.வெ.க., ஆட்சி அமைந்த பின், அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து உள்ளன.த.வெ.க., ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடித்தால், தமிழகத்தின் கடன் சுமை, 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து விடும். இவ்வாறு கூறினார்.

 தி.மு.க., - த.வெ.க., மோதலில் நாடக வாடை வீசுகிறது

கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு மீது, எம்.ஜி.ஆர்., அளித்த புகாரில், அன்றைய மத்திய காங்., அரசு அமைத்த சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு எடுத்த 28 குற்றச்சாட்டுகளில், 'மேகலா பிக்சர்ஸ்' நிறுவனத்தின் அசுர வளர்ச்சியும் ஒன்று. அதன் உரிமையாளர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி அழைப்பில், கடந்த 2006ல், தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்க, தற்போதைய முதல்வர் விஜய், டில்லி சென்றார்.சர்க்காரியா கமிஷன் விபரங்களை, விஜய் அன்று அறியாதவரா? த.வெ.க., - எம்.எல்.ஏ., ஒருவர், கருணாநிதி என குறிப்பிட்டதற்கே, கோபப்பார்வை வீசி, மன்னிப்பு கேட்ட விஜய்க்கு, சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதே கருணாநிதி ஆட்சிக்கு எதிரான புகார்களை விசாரிக்க என்பது தெரியாதா? அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், த.வெ.க., - தி.மு.க., மோதலில் அப்பட்டமான நாடக வாடை வீசுகிறது.- இன்பதுரை, அ.தி.மு.க., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Santhakumar Srinivasalu
செப் 09, 2026 15:18

இபிஎஸ் எம் எல் ஏ க்களை காவு கொடுத்ததை மறந்து கம்யூ. பற்றி பேசறார்?


சூர்யா
செப் 09, 2026 12:17

ஸாரி, ஸாரி, ஸாரி கருணாநிதின்னு பேர் சொன்னதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.எதற்காக இந்த இரட்டை வேட நாடகம்?


அண்ணா
செப் 09, 2026 11:49

அமெரிக்காவுக்கு கெட்ட நேரம் டிரம்பால் ! தமிழ்நாட்டுக்கு கெட்ட நேரம் ரீல்ஸ் நாயகனால் !


சந்துரு
செப் 09, 2026 12:22

பரந்தூரை இந்த ரீல்ஸ் ஆட்சி இழுத்து மூடிய போதே தமிழ் நாட்டோட வளர்ச்சியை ஒரு பத்து, பதினைந்து வருடம் பின்னால இழுத்தாச்சு.


Santhakumar Srinivasalu
செப் 09, 2026 18:25

இப்போ பார்த்திருக்கும் அந்த 2 இடங்களும் நிராகரிக்க பட வாய்ப்பு அதிகம்!


குமார்
செப் 09, 2026 11:32

சும்மா உருட்டாதீர்கள் பிரேம் குமார் அது எம்ஜிஆர் ஆட்சி என்பதால். ரகுமான் கான் துரைமுருகன் தாமரைக்கனி உள்ளிட்டோர் எவ்வளவு களேபரம் செய்தனர் சபை எவ்வளவு அல்லோகளப்பட்டது என்பதை நான் அறிவேன். திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலே சட்டசபையை ஒழுங்காக நடத்த விட மாட்டார்கள் என்பது வரலாறு.


ஆரூர் ரங்
செப் 09, 2026 10:44

ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் குருவி படத்தில் நடித்த போது விஜய் சர்க்காரியா அறிக்கை பற்றித் தெரியாத பச்சைக் குழந்தை. சன் பிக்சர்ஸின் படங்களுக்கு பணம் பெற்ற போது அதெல்லாம் நேர்மையாக உழைத்து சம்பாதித்த பணமாக நினைத்த வெள்ளந்தி பாப்பா.


அண்ணா
செப் 09, 2026 10:16

MGR அவர்களின் கால் தூசிக்கு கூட வராது ரீல்ஸ் நாயகன்.ஆனால் அவிங்க MGR ஐ விட நாம் பெரிய ஆள் என்று நினைக்கிறது. நெனப்பு தான் பொழப்பை கெடுக்கும் என்ற சொலவடை தான் ஞாபகம் வருகிறது.


Prem Kumar
செப் 09, 2026 08:41

எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்ற போது அவருடன் பதவியேற்ற அமைச்சர்கள் மட்டுமல்ல அவருக்கு எதிரணியில் அமர்ந்திருந்த உறுப்பினர்களும் கூட அவரது தீவிர ரசிகர்களாக தான் இருந்தார்கள் என்பதை என்னை போல் மூன்று கால் நூற்றாண்டை கடந்த வயதுடைய அனைவரும் அறிவார்கள். ஆனால் அதற்காக அவையில் நுழைந்த பிறகு சபைக்குள் உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் எந்த நேரத்திலும் எந்த கட்சி உறுப்பினர்களும் இழக்காமல் செயல்படுவது தான் தங்கள் தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல் பட்டார்கள். சபை அலுவல்கள் சுமுகமாக- விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதில் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த எவருமே தவறவில்லை. ஒரு நடிகர் அரசியல்வாதியாகவும்- கட்சி தலைவராகவும் -அதையும் கடந்து மக்கள் தலைவராகவும் மாநிலத்தின் முதல்வராகவும் வெற்றி பெற முடியும் என்பதை தனது செயலில் காட்டி உண்மையிலேயே வெற்றி பெற்ற ஒரே மாமனிதர் MGR மட்டுமே .


அப்பாவி
செப் 09, 2026 08:38

அவிங்களுக்கு வந்த வாழ்வு