உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தே.ஜ., கூட்டணியில் குழப்பம்: திருமா

தே.ஜ., கூட்டணியில் குழப்பம்: திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பொருந்தா கூட்டணியாகவே உள்ளது. இப்போதிருக்கும் சூழலில் இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவது அவ்வளவு எளிதானதாக தெரியவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j2kv6l2b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொருந்தா கூட்டணியை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று சொல்வதும், நான் தான் முதல்வர் வேட்பாளர் என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சொல்வதும் நேர் முரணாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என திரும்ப திரும்ப சொல்கிறார். ஆனால், அதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் இருந்து உறுதியான எந்த தகவலும் கிடையாது. தனி பெரும்பான்மையுடன் அ.தி.மு.க., ஆட்சி அமையும் என கூறி வருகிறார். அப்படியென்றால், கூட்டணி ஆட்சி கிடையாது என்பதுதான் அர்த்தம். அதாவது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பா.ஜ., கோஷத்தை அ.தி.மு.க., ஏற்க தயாரில்லை. ஆனால், வெளிப்படையாக தெரிவிக்க, அ.தி.மு.க.,வுக்கு தைரியம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி என, அமித் ஷா திரும்ப திரும்ப சொல்லும்போது, இங்கு அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி என்பது போய் விடுகிறது. அதிலும் ஒரு குழப்பம் உள்ளது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றால், முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் முடிவெடுப்பர் என்றும் பா.ஜ.,வினர் சொல்கின்றனர். அப்படியென்றால், முதல்வர் வேட்பாளராக பழனிசாமி தன்னை தானே அறிவித்துக் கொள்வதால் என்ன பிரயோஜனம். இப்படி குழப்பம் மேல் குழப்பத்தில் தவிக்கும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தான், தமிழகத்தில் வெற்றி பெறப் போகிறதா?இவ்வாறு கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

RAMESH
ஜூலை 08, 2025 05:36

இந்தியாவை ஆளும் பாஜக கூட்டணி பற்றி பேச அருகதை இல்லை...... எடப்பாடி அவர்களுக்கு கோவையில் கூடிய கூட்டத்தை பார்த்து பேதி போய் விட்டது...


திகழ் ஓவியன், Ajax, Ontario
ஜூலை 07, 2025 18:21

திரு குரு குருமா வை டெபாசிட் காலி செய்து அரசியலை விட்டே விரட்ட வேண்டும்


kumaran
ஜூலை 07, 2025 17:21

கூட்டணியில் குழப்பங்கள் ஏற்படுத்த தினமும் ஒரு கூச்சல் தி(கு)ருமா


V.Mohan
ஜூலை 07, 2025 14:19

தே.ஜ. கூட்டணியில் குழப்பம் இருந்தால் அது அவர்கள் தலைவலி. உங்களுக்கு அந்த கூட்டணியை பார்த்து பயமாக இருந்தால், உங்க கூட்டணியை பலப்படுத்த முயற்சி எடுங்க.


ராமகிருஷ்ணன்
ஜூலை 07, 2025 12:29

எந்த கூட்டணியில் என்ன குழப்பம் இருந்தால் உனக்கு என்ன வந்தது. அந்த கூட்டணி ஜெயிக்க போவது தெரிந்ததால் அதை கெடுக்க உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறாய்.


kannan sundaresan
ஜூலை 07, 2025 11:49

தேர்தலுக்கு இன்னும் 10 மாதம்தான் இருக்கு. போய் வேலையை பார். அடுத்தவனை குறை சொல்லியே எத்தனை வண்டிய ஓட்டுவ?


theruvasagan
ஜூலை 07, 2025 11:12

சில பேரு உடம்பை என்னவோ பண்ணுதும்பாங்க. எங்க பிரச்சனைன்னு கேட்டா எங்கேயோ வலிக்குது. அது கரெக்டா இன்ன இடம்ன்னு சொல்லத் தெரியலை என்பார்கள். இந்த நபருக்கு மனசுக்குளளே ஏதோ ஒரு பயம். கலக்கம். அது எதானலேன்னு சொல்ல முடியல. இப்ப இருக்குற இடத்துல ஏதோ சங்கடமான சூழ்நிலை இருக்கா. இல்லை போகணும்னு நினைச்ச இடத்துக்கு போகமுடியாத தடங்கல் ஏதாவது இருக்கா. இதுவா அதுவான்னு தெரியாம தினம் தினம் புலம்ப வேண்டிய நிலைமைக்கு கொண்டுவந்து விட்டுடுச்சு.


lana
ஜூலை 07, 2025 10:53

ஈழத்தில் படுகொலை செய்த காங்கிரஸ் உடன் இருக்கும் உங்க கூட்டணி எப்படி. வேங்கை வயல் போன்ற பட்டியல் இன மக்களின் மீது பழியை சுமத்தி வருகின்றனர். இது எப்படி பட்ட குருட்டு அணி


பேசும் தமிழன்
ஜூலை 07, 2025 09:35

ஏம்பா... நீயும் தான் மேடை தோறும் ஆட்சியில் பங்கு கேட்டு ஒப்பாரி வைக்கிறாய்.. ஆனால் அதற்க்கு இண்டி கூட்டணி தமிழக தலைவர் பதில் என்ன... அதுமட்டுமல்ல 234 தொகுதியில் போட்டியிட தகுதி இருக்கிறது என்று கூறியதற்கு.. அவர்கள் பதில் என்ன? உங்களுக்கு எத்தனை தொகுதி தருவதாக கூறியுள்ளார்கள்.. நீங்கள் இருப்பது புள்ளி வைத்த இண்டி கூட்டணியா அல்லது திமுக கூட்டணியா ???


Krishna Moorthy
ஜூலை 07, 2025 08:29

அந்த கூட்டணி எக்கேடு கெட்டுப் போனால் உனக்கு என்ன? ஏன் இந்த பயம், உளறல் பேச்சு? அவர்கள் இணைந்திருப்பது ஒட்டுமொத்த திமுகவையும் கூட்டணி கட்சிகளையும் தான் வீழ்த்த தான். அதனை எதிர்கொள்வதை விட்டு விட்டு, எதையோ கொளுத்தி போட்டு குளிர் காய வேண்டாம். முதலில் இந்த மரணபயம் நீங்க ஏதேனும் வழி உண்டா என சிந்திக்கலாமே!