உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆதவ் அர்ஜுனாவால் கட்சியில் குழப்பம்; திருமாவளவனிடம் நிர்வாகிகள் குமுறல்

ஆதவ் அர்ஜுனாவால் கட்சியில் குழப்பம்; திருமாவளவனிடம் நிர்வாகிகள் குமுறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'கூட்டணி தொடர்பாக, தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜுனாவின் ஆலோசனையை ஏற்க வேண்டாம்; அவருக்கு முக்கியத்துவமும் தர வேண்டாம்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும்' என, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதை அப்போதே வி.சி., வரவேற்றது. இதனால், தி.மு.க., கூட்டணியில் அக்கட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u7iu85mw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் தொடர்ச்சியாக, வி.சி., துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவின் 'வாய்ஸ் ஆப் காமன்' என்ற அமைப்பு சார்பில் அம்பேத்கர் குறித்த நுால் வெளியீட்டு விழா, வரும் டிச., 6ல் நடக்க ஏற்பாடானது. இதில், திருமாவுடன் நடிகர் விஜயும் பங்கேற்கவிருப்பதாக தகவல் பரவியது.'தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டு, கூட்டணியை கடுமையாக விமர்சிக்கும் நடிகர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில், திருமா எப்படி பங்கேற்கலாம்' என, தி.மு.க., தரப்பில் கேள்வி எழுப்பி திருமாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, 'வரும் சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., கூட்டணியில் தான் இருப்போம்' என திருமாவளவன் விளக்கம் அளித்தார்.இந்நிலையில், 'ஆதவ் அர்ஜுனாவின் ஆலோசனையை கேட்க வேண்டாம்' என, கட்சியின் மாநில நிர்வாகிகள் திருமாவிடம் வலியுறுத்தி உள்ளனர்.

வி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:

கட்சிக்கு புதியவரான ஆதவ் அர்ஜுனாவுக்கு, திருமாவளவன் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே துணைப் பொதுச்செயலர் பொறுப்பு வழங்கினார். கட்சி நிகழ்ச்சிகளில், தன் அருகில் அமர வைக்கிறார். அவர் கொடுக்கும் ஆலோசனையை ஏற்று செயல்படுகிறார். இது கட்சியிலும், கூட்டணி உறவிலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு; எதிர்ப்பு என, கட்சிக்குள் இரு கோஷ்டிகள் உருவாகி உள்ளன. இதனால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும். இதை தவிர்க்க வேண்டும் என்றால், ஆதவ் அர்ஜுனா தரும் ஆலோசனைகளை திருமா ஏற்கக்கூடாது. அதைத்தான் கட்சி நிர்வாகிகள், திருமாவிடம் வலியுறுத்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Narasimhan
நவ 09, 2024 18:48

தலை சொல்லாமல் வால் ஆடாதுங்க. தத்தியெல்லாம் துணை முதலமைச்சராகும் போது தான் ஏன் ஆகக்கூடாது என்ற நப்பாசைதான்


karthik
நவ 07, 2024 12:16

குழப்பம் செய்வதற்காக தான் திமுகவால் அனுப்பப்பட்ட மிஷினரி கூட்டத்தின் பிரதிநிதி அவர். அண்ணாமலை அன்றே எச்சரித்தார்.


N Sasikumar Yadhav
நவ 07, 2024 07:44

தலித்துகளுக்கான கட்சி என சொல்லும் திருமாவளவனின் வுடுதலை சிறூத்தை கட்சி தலித்துகளுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை .


SUBBU,MADURAI
நவ 07, 2024 06:55

இப்போதைக்கு விசிக என்கிற கட்சிக்கு ஆதவ் அர்ஜூனாதான் ஆக்ஸிஜன். கட்சிக்கும் மாநாட்டுக்கும் முழு வீச்சில் பணத்தை வாரியிறைப்பவர் லாட்டரி மார்ட்டினின் மருமகன் அதனால்தான் திருமாவளவன் அவருக்கு கட்சியில் சேர்ந்தவுடனே துணை பொதுச் செயலாளர் பதவியை வழங்கினார். இது அக்கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளுக்கு அறவே பிடிக்கவில்லை. மேலும் விசிகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் ஆளூர் ஷா நவாஸ், ரவிக்குமார், வன்னியரசு, போன்றவர்கள் திமுகவின் அடிமைகளே அதனால்தான் இவர்கள் ஆதவ் அர்ஜூனா என்பவரை ஓரம்கட்ட துடிக்கிறார்கள் எது எப்படியோ எழுச்சித் தமிழன் திருமாவின் கட்சியில் புகைச்சல் ஆரம்பித்து விட்டது அது கொழுந்து விட்டு எரியுமா அல்லது அப்படியே அடங்கி விடுமா என்பது திமுகவின் கைகளில்தான் இருக்கிறது.


முக்கிய வீடியோ