உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விருதுநகரை குறி வைக்கும் காங்.,: தி.மு.க., - எம்.எல்.ஏ., கடும் அதிருப்தி

விருதுநகரை குறி வைக்கும் காங்.,: தி.மு.க., - எம்.எல்.ஏ., கடும் அதிருப்தி

விருதுநகர் தொகுதியில் காங்., போட்டியிட விரும்புவதால், அதிருப்தி அடைந்த அத்தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவாசன், இளைஞர் காங்., நிர்வாகியை தி.மு.க.,வில் இணைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்., துணைத் தலைவர் சுரேந்திரன் சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்தார். இதற்கான ஏற்பாடுகளை, விருதுநகர் தொகுதி சிட்டிங் தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவாசன் செய்திருந்தார். இளைஞர் காங்., நிர்வாகி சுரேந்திரனை, தி.மு.க.,வில் சேர்த்தது, தி.மு.க., - காங்., கூட்டணியில், சலசலப்பை உருவாக்கி உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால், தொகுதி பறிபோகுமோ என அதிருப்தி அடைந்த சீனிவாசன், காங்., நிர்வாகி சுரேந்திரனை தி.மு.க.,வில் இணைய வைத்ததாக, தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, விருதுநகர் மாவட்ட காங்., நிர்வாகிகள் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தொகுதியில், 'சிட்டிங்' காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோகன் மீண்டும் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு குறைவு என, சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது. எனவே, அவர் வரும் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக்தாகூர் ஆதரவாளர்களான காங்., பிற்படுத்தப்பட்டோர் அணி மாநிலத் தலைவர் நவீன், விருதுநகர் மாவட்ட காங்., தலைவர் ராஜா சொக்கர் ஆகியோரும் விருதுநகரில் போட்டியிட விரும்புகின்றனர். இப்படி, காங்., நிர்வாகிகள் காய் நகர்த்துவதால், அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ., சீனிவாசன், சுரேந்திரனை தி.மு.க.,வில் இணைத்து கலகத்தை ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை