வாசகர்கள் கருத்துகள் ( 23 )
234 தொகுதியிலும் போட்டியிட வேண்டியது தானே.... உங்களை யார் தடுத்தது.... அப்படி தனியே தேர்தலில் நின்றால் தான் உங்களது பலம் தமிழக மக்களுக்கு தெரியும்.... பிறகு துண்டை காணோம்..... துணியை காணோம் என்று ஓட வேண்டி இருக்கும்.
பேசும் தமிழா காங்கிரஸ் தமிழ்நாட்டில் இழப்பதற்கு எதுவுமில்லை.. ஆட்சியையயும் பிடிக்க போவதில்லை.இதை அனைவருமே அறிவோம்.காங்கிரசின் சில ஆயிரம் வாக்குகள்தான் திமுகவின் வெற்றிக்கு உதவுது...அப்படி இருக்க இழப்பு யாருக்கு!!!???
2026 சட்ட மன்ற தேர்தலில், திமுக 200 சீட்டுகள் என்ற குறியீட்டை வைத்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் பலவற்றுக்கும் திமுக குறைந்த சீட்டுகளே ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் அணி மாறும் நிலை ஏற்பட கூடும். இதில் நிச்சயம் காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இருக்கும். எனவே 2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும் என்று கூற இயலாது. மேலும் கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில், தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் திமுக தனித்து நின்று வெற்றி பெறவும் இல்லை. தொடர்ந்தாற் போல 10 ஆண்டு கால ஆட்சி நடத்தவும் இல்லை என்பதால் திமுகவின் ஆட்சி அடுத்த ஆண்டில் நிறைவு பெறும் வாய்ப்புகளே அதிகம்.
BEGGARS CAN'T BE CHOOSERS. புரியுதா?.
கெடுவான் கேடு நினைப்பான்!
விஜய் தலைமையில் காங்கிரஸ் திருமா போன்றோர் மூன்றாவது அணி அமைக்க வாய்ப்புகள் நிச்சயம் உள்ளது..தற்சமயம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையா இருப்பதாக காட்டி கொண்டாலும் சீட் ஒதுக்கீடு சமயம் அனைத்துமே மாறும்.
விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம். பாவம் அவர் தனியா இருக்கிறார்?
அதிமுக பாஜக ஒன்று சேர்ந்துவிட்டன. பாமகவுடன் தீயோர் கட்சி நெருக்கம் காட்டுகிறது. இதனால் வெத்து உதார் திருமா எங்கு செல்வது எனப் புரியாமல் உலையில் கொதிக்கும் குருமாவாக இருக்கிறார். இப்போதைக்கு போக்கிடம் என்று பார்த்தால் விஜய் கட்சிதான். விஜயுடன் கூட்டணிவைத்தால் குருமா தன் கைக்காசைத்தான் செலவு செய்யவேண்டும், விஜயிடம் இருந்து தம்பிடி பெயராது. ரொம்ப புரண்டு புரண்டு அழுதால் லாட்டரி மாப்பிள்ளை ஏதாவது உதவலாம். மற்றபடி விஜயுடன் கூட்டணி என்பது காசுக்கு ஆகாது. இப்பொழுதெல்லாம் குருமாவின் முகத்தைப் பார்த்தால் பேயறைந்தது போலத்தான், அதிர்ச்சியுடன் தான் உள்ளது. மதிமுக சட்டையைக் கழட்டிப்போட்டுவிட்டு நடுரோட்டில் நிற்கவும் கூச்சப்படாத தன்மானமற்ற கட்சி. அதற்கெல்லாம் ஒரு பலமும் கிடையாது. தேமுதிகவைப் பற்றி கூற ஒன்றுமில்லை. காங்கிரஸ் இப்பொழுது திடீரென குறைந்த தொகுதிகள் கொடுத்தால் மாற்று அணி என்று கூவ ஆரம்பித்துள்ளது. காங்கிரசை ராகுலே கண்டுகொள்வதில்லை, பிறகு தானே நானும் நீங்களும். வேண்டுமானால் காங்கிரஸ் தலைமையில் ஒரு மாற்று அணி அமையட்டும், அதில் திருமா உறுதியாக சேர்ந்து கொள்வார். தமிழக மக்களுக்கு 2026ல் விடிவு பிறக்க வாழ்த்துக்கள்.
காங்கிரஸ் பிஜெபி போல ஸ்ட்ராங்கா கூட்டணி விசயமா பேசாமல் எது கொடுத்தாலும் வாங்கி கொள்வோம் என்று நினைப்பது கேவலம்.கூட்டணியால்தான் ஒருவர் ஆட்சியை பிடித்தார் என்ற சாதாரண கணக்கு கூட காங்கிரசுக்கு தெரியாதா!!!
காங்கிரஸ் திமுகவினுடைய கிளை கட்சி. திமுகவை விட்டு எங்குமே செல்லாது. ஸ்டாலின் ராகுலை ஃபோனில் அழைத்தாலே போதும் காங்கிரஸ்காரர்கள் கப்சிப் ஆகி விடுவார்கள்
ஒன்றும் நடக்காது. திமுக கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக்கொண்டு மதவாத சக்திகளை ஒடுக்குவோம் என்று அறிக்கை விட்டு அமைதியாகி விடுவார்கள்