உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்: சோடங்கருக்கு காங்கிரசார் அழுத்தம்

ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்: சோடங்கருக்கு காங்கிரசார் அழுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தி.மு.க.,வுடன் கூட்டணி உடன்பாடு செய்வதற்கு முன், ஆட்சியில் பங்கு குறித்து பேச வேண்டும்' என, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரிடம், தமிழக காங்., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.சென்னை சத்தியமூர்த்தி பவனில், இரண்டாவது நாளாக நேற்று, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் இல.பாஸ்கரன் கூறியுள்ளதாவது:கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கும், அ.தி.மு.க., கூட்டணிக்கும், ஒன்றரை சதவீதம் தான் ஓட்டு வித்தியாசம். வலுவான கூட்டணி அமைந்தால் தான் தி.மு.க.,வால் ஆட்சி அமைக்க முடியும். தமிழகத்தில் காங்கிரஸ் இனி, அரசியல் செய்ய வேண்டும் என்றால், அதிகார பகிர்வு வேண்டும். அதனால், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும். தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தும்போது, ஆட்சியில் பங்கு குறித்து உறுதி செய்த பின்னரே, ஒப்பந்தம் செய்ய வேண்டும். இது அடிமட்ட தொண்டர்களின் கருத்து. தொண்டர்களின் மன உணர்வை ராகுலிடம் கிரிஷ் சோடங்கர் தான் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். நேற்று முன்தினம் கிரிஷ் சோடங்கர் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு, 24 துணை அமைப்புகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. மகளிர் அணி தலைவி ஹசீனா சையது, மாணவரணி தலைவர் சின்னதம்பி உட்பட, 20 அணிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், மீனவர் அணி தலைவர் ஜோர்தான், விவசாய அணி தலைவர் பவன்குமார் உட்பட, 4 பேர் மட்டும் பங்கேற்கவில்லை. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பேசும் தமிழன்
மே 17, 2025 11:11

ஏன் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்.... நீங்களே ஆட்சியில் பங்கு கொடுப்பது போல்.... புதிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டியது தானே..... முடியாது..... அப்படி போட்டியிட்டால் உங்களின் உண்மையான பலம் தெரிந்து விடும்..... அப்புறம் யாரும் உங்களை சீண்ட மாட்டார்கள்.


Yes your honor
மே 17, 2025 10:19

24 அமைப்புகளா? அமைப்புக்கு ஒருத்தர் என்று கணக்குப் போட்டால்கூட 24 உறுப்பினர்கள் உள்ளனரா? அண்ணே, உங்க தகுதிக்கு நீங்க மினிமம் 300 தொகுதிகளாவது கேக்கணும் அண்ணே. அவ்வளவு தொகுதி தமிழகத்துலயே இல்லனு சொன்னாங்கனு வைய்யுங்க, அது உங்க பிரச்சனை இல்லைன்னு தெளிவா சொல்லீருங்க. தேவைப்பட்டால் ராகுல் காந்தியிடம் கூட எப்படிப் பேசனும்னு கேட்டுது தெரிஞ்சுக்கோங்க, அவருக்கு இதுல நல்ல அனுபவம் இருக்கு. 300 தொகுதிண்ணே, மறந்துராதீங்க.


Haja Kuthubdeen
மே 17, 2025 07:36

சோடங்கர் யாருன்னே தெரியல..இவுருக்கு அழுத்தம் கொடுத்து என்னய்யா ஆகப்போவுது..தமாஸ்


Haja Kuthubdeen
மே 17, 2025 07:33

முதலில் செல்வ பெருந்தகை இப்ப உள்ள சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இந்த உணர்வு ஆசை உண்டா??நமக்கு மீண்டும் சீட் கிடைத்தாலே போதும் ஆட்சியில் பங்காவது மண்ணாவது என்ற எண்ணத்தில்தானே இருக்கிறார்கள்.வரும் அற்புதமான வாய்ப்புகளை எல்லாம் சுயநலக் கிருமிகள் வீணாக்குவார்கள். கட்சி மேலிடமும் தேமேன்னு வேடிக்கை பார்க்கும். இதானே காங்கிரசின் பழக்கம். இடையிடையே காமராஜ் ஆட்சின்னு வேற தமாஸ் செய்வாய்ங்க...


Balasubramanian
மே 17, 2025 05:23

ஊழலிலும் பங்கு கேட்பார்களோ? ஆட்சியாளர்கள் தயக்கம்


சமீபத்திய செய்தி