உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாமல்லையில் தி.மு.க., அரங்கம்; கட்டுமான பணி விரைவில் துவக்கம்

மாமல்லையில் தி.மு.க., அரங்கம்; கட்டுமான பணி விரைவில் துவக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி பகுதியில், மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய தனியார் நிலங்களை, சில ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., பிரமுகர் ஒருவர் வாங்கினார். இந்த நிலங்களுக்கும், புதுச்சேரி சாலைக்கும் இடையே, அரசு தரிசு நன்செய் நிலமும் உள்ளது. தி.மு.க., பிரமுகர் வாங்கிய நிலத்தை, புதுச்சேரி சாலையுடன் இணைக்க விரும்பி, அரசு தரிசு நன்செய் நிலத்தை பாதைக்காக ஆக்கிரமிக்க முயன்ற போது, அதை வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

பத்திரப்பதிவு

இந்நிலையில், பெருமாளேரி பகுதியில், தி.மு.க., பிரமுகர் வாங்கிய நிலம், தி.மு.க., அறக்கட்டளை பெயருக்கு மாற்றப்பட்டது. இதற்கான பத்திரப்பதிவை, 2019 பிப்ரவரியில், தி.மு.க., தலைவரான ஸ்டாலின், திருக்கழுக்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொண்டார். உடன், அந்த நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு, 'தி.மு.க., அறக்கட்டளை' என, பெயர் பலகையும் வைக்கப்பட்டது. தி.மு.க., அறக்கட்டளை பெயருக்கு மாற்றப்பட்ட நிலப்பகுதி, புதுச்சேரி சாலை மட்டத்திலிருந்து மிகவும் தாழ்வாக இருந்தது. அதனால், சாலை மட்டத்திற்கு உயர்த்த முடிவெடுக்கப்பட்டு, 2022ல், ஏரி கிராவல் மண் குவித்து, நிலமட்டம் உயர்த்தப்பட்டு சமன் செய்யப்பட்டது.

தகர கொட்டகை

இந்நிலையில், கட்டுமான பணிகள் விரைவில் துவக்கப்படலாம் என்று தெரிகிறது. அதற்கேற்ற வகையில், அங்கு தொழிலாளர்கள் தங்குவதற்கான தகர கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதற்கிடையில் இந்த நிலத்தில், 'கன்வென்ஷன் சென்டர்' எனப்படும், மாநாட்டு அரங்கம் அமைக்க, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, மாவட்ட நகர் ஊரமைப்பு துறையிடம், கடந்த ஆண்டு ஜூலையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார்.மாமல்லபுரம் உள்ளூர் திட்டக்குழும கூட்டத்தில், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கன்வென்ஷன் சென்டரை, நிலத்தடி, தரை, முதல் என, இரு தளங்களுடனும், மொத்தம் 25,000 ச.மீ., பரப்புக்கு மேல் அமைக்க, கடந்த ஜனவரியில், நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதி பெறப்பட்டுஉள்ளதாக தெரிகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Durai Raj
அக் 16, 2024 19:36

இந்த நிலம் திமுக அறக்கட்டளைக்கு குடுத்த திமுக நபரை பாராட்டித்தான் ஆகவேண்டும் வேறு என்ன சொல்வது.


sankaranarayanan
அக் 15, 2024 21:15

கர்நாடகாவில் அரசு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் திடீர் திருப்பமாக பிரியங்கா கார்கே ராகுல் கார்கே அந்த ஐந்து ஏக்கர் நிலத்தை திரும்ப அரசிடம் ஒப்படைத்துவிட்டால் இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று நிறைவுபனம் ஆகிவிடாது. சித்துராமையா செய்த செயலும் தமிழகத்தில் செந்தில் பாலாஜி செய்த செயலும் இப்போது ராகுல் கார்க்கி செய்தசெயலும் எல்லாமே ஓரே விதமான செயல்போலத்தான் இருக்கின்றன. ஒருவரை ஒருவர் கொன்றுவிட்டு நான் தெரியாமல் செய்து விட்டேன் என்று சொன்னால் நீதி அவர்களுக்கு கிடைத்துவிடுமா? தப்பு தப்புதான் உப்பைத்தின்றவன் தண்ணீரை குடித்துத்தான் ஆகவேண்டும் முன் உதாரணமாக இவர்களின் பதவிகளை பறிக்க வேண்டும்


Anonymous
அக் 15, 2024 12:50

இப்படியே போனால் அடுத்த எலக்சனுக்குள்ள தமிழ்நாடு முழுதும் வாங்கிரலாம்


ஆரூர் ரங்
அக் 15, 2024 10:57

சதியாலோசனை மன்றம் என்று பெயர் வைக்கலாமே.


முக்கிய வீடியோ