உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு; தி.மு.க., நிர்வாகிக்கு காங்., கண்டனம்

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு; தி.மு.க., நிர்வாகிக்கு காங்., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காமராஜர் குறித்த தி.மு.க., மாணவர் அணி நிர்வாகி ராஜிவ் காந்தியின் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, 'இது போன்றவர்களை தி.மு.க., பேச அனுமதிக்குமானால், தமிழகத்தில் 'இண்டியா' கூட்டணிக்கு இதைவிட பெரும் கேடு இருக்க முடியாது' என, எச்சரித்துள்ளது. சமீபத்தில், தி.மு.க., இளைஞரணி அலுவலகத்தில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் ராஜிவ் காந்தி பேசுகையில், 'ராஜாஜி மூடிய பள்ளிகளை தான் காமராஜர் திறந்தார். கல்வி கண் திறந்த காமராஜர், தன் சொந்த பணத்தில் பள்ளிகளை திறக்கவில்லை.

எதிரும் புதிருமாக

'காமராஜர் குடியாத்தத்தில் போட்டியிட்டார்; அத்தொகுதியில் காங்கிரஸ் வலுவாக இல்லை. காமராஜர் தோற்று விடக்கூடாது என்பதற்காக, எதிரும் புதிருமாக இருந்த அண்ணாதுரை, தி.மு.க.,வை போட்டியிடாமல் செய்து, ஆதரவு அளித்தார்' என்றார். காமராஜர் குறித்த அவரது சர்ச்சை பேச்சு, கூட்டணியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

தமிழக காங்கிரஸ் மூத்த உறுப்பினர் திருச்சி வேலுச்சாமி கூறியதாவது:

ராஜிவ் காந்திக்கு தி.மு.க., காங்கிரஸ் வரலாறு தெரியவில்லை. குடியாத்தம் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என அவர் சொல்வது தவறு; பிதற்றல். அத்தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தான். அவர் ராஜினாமா செய்து தான் இடைத்தேர்தல் நடந்தது.மக்கள் வரிப்பணத்தில் தான் காமராஜர் பள்ளிகள் கட்டினார் என்பது எல்லாருக்கும் தெரியும். வரிப்பணத்தை அவர் கொள்ளை அடித்து செல்லவில்லை. ராஜிவ் காந்தியை அடக்கி வைக்கவில்லை என்றால், தி.மு.க., - காங்., இடையேயான உறவில் சிக்கல் ஏற்படலாம்.இவ்வாறு அவர் கூறினார். தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி அறிக்கை:நாம் தமிழர் கட்சியில் ராஜிவ் காந்தி இருந்தபோது, நாக்கில் நரம்பில்லாமல் கருணாநிதியை பற்றி பேசியவர். அங்கிருந்து சீமானால் விரட்டப்பட்டு, தி.மு.க.,வில் தஞ்சம் புகுந்தவர் தான் ராஜிவ் காந்தி. அவருடைய பின்புலம் அறிந்தும், தி.மு.க.,வில் அவருக்கு முக்கியத்துவம் ஏன் என்பது புரியவில்லை.

பெரும் கேடு

இத்தகைய மோசமான பின்னணி கொண்ட ஒருவர், காமராஜரை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. இவரை போன்றவர்கள் இப்படி பேச, தி.மு.க., தலைமை அனுமதிக்குமேயானால், தமிழகத்தில் 'இண்டியா' கூட்டணிக்கு இதை விட பெரும் கேடு இருக்க முடியாது. வரம்பு மீறி பேசிய ராஜிவ் காந்தியை அடக்கி வைப்பது கூட்டணி தர்மத்திற்கு உகந்ததாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

lana
அக் 22, 2024 22:18

கர்மவீரர் காமராஜர் அவர்களை இந்திரா கைது செய்து கேவலப்படுத்தி போது இந்த காங்கிரஸ் காரன் சும்மா தான் இருந்தாங்க. சரி இந்திரா ராஜிவ்காந்தி க்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று பார்த்தால் அந்த அம்மாவை கேவல படுத்திய தீய முக உடன் கொஞ்சி குலாவும் இவர்கள். ராஜீவ் ஐ கொலை செய்த பாவிகளை விடுதலை செய்து கொண்டாடும் ஒரு கட்சிக்கு வால் பிடிக்கிறார்கள். பதவிக்காக பப்பு பப்பி மா வை கேவலம பேசினா கூட துடைத்துக் கொண்டு போகும் கேவலமான ஜென்மங்கள் இந்த காங்கிரஸ். ஆனால் ஒன்று இன்று பேசிய ராஜீவ் என்ற 200 ஊவா அடிமை படிக்க காரணம் அந்த கர்மவீரர் தான்


எஸ் எஸ்
அக் 22, 2024 18:25

இவன் மனநோயாளி மாதிரி பேசுவான். பிராமணர்களை 50 ஆண்டுகள் முன்பே இன அழிப்பு செய்து இருக்க வேண்டும் என்று ட்விட்டர் பதிவு செய்தான். யாரும் கண்டிக்கவில்லை. ஆனால் இவன் போன்ற பேர்வழிகளால் திமுக தோற்கும் என்பது நிச்சயம்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 22, 2024 17:12

இந்திரா காந்தி , நேரு ஆகியோர் குறித்து கலைஞர் கூறிய ஆபாச அருவருக்கத்தக்க கருத்துக்களுக்கே மௌனம் காத்த காங்கிரசார் காமராஜர் குறித்து யாரோ ஒரு திமுக நிர்வாகி பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன? அறிவாலயத்து அடிமைகள் என்ற முறையில் பேசாமல் தலையசைத்து கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதானே


Rajarajan
அக் 22, 2024 15:33

ஒரு குறிப்பிட்ட முன்னேறிய பிரிவினரை முற்றிலும் முன்னமே கொ............லை செய்திருக்கவேண்டும் என ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசினார். நடவடிக்கை இல்லை.


Sridhar
அக் 22, 2024 14:51

இந்த ராஜிவ் காந்தி பேசுவது கருணாநிதித்தனமா இல்ல சீமாந்தனமா? ஓசியில டிவி கொடுத்ததோ இல்ல இப்போ பொம்பளைங்களுக்கு ஆயிரம் கொடுப்பதோ, கருணாநிதி வீட்டு சொந்த காசா? நாட்டு வளங்களை கொள்ளையடிச்சிட்டிருக்குற கும்பல் எப்படி இவ்வளவு தைரியமா பேசுதுன்னு புரியவே மாட்டேங்குது.


கண்ணன்,மேலூர்
அக் 22, 2024 15:12

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எல்லாம் கண்டனம் தெரிவிப்பது இருக்கட்டும் அக்கட்சியின் தலைவரான செல்லாப் பெருந்தொகை எங்கே போனார் அவர் ஏன் இதை கண்டிக்கவில்லை? கூட்டணிக்கட்சி என்பதால் வெட்கம், மானம், சூடு, சொரனை என எல்லாத்தையும் விட்டு விட்டு திமுகவுடன் அப்படி ஒரு கூட்டணியில் இருக்கத்தான் வேண்டுமா தமிழக காங்கிரஸ் கட்சியினர் திமுகவை எதிர்த்து பேச திராணியற்றவர்கள்.


ஆரூர் ரங்
அக் 22, 2024 14:21

ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த நேரத்தில் பல மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டன . அதற்கு அவர் கொடுத்த விளக்கம் அவை அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது. இப்போ பள்ளிகளை மூடியது ராஜாஜி என திசை திருப்புகிறார்கள். அப்போது ஆங்கிலேயர்கள் கஜானாவை காலி செய்து விட்டுச் சென்றதால்தான் ராஜாஜி பள்ளிகளில் ஷிஃப்ட் முறை கொண்டு வந்தார். அதனைத் திரித்து அரசியல் செய்கிறார்கள்.


ஆரூர் ரங்
அக் 22, 2024 14:16

பள்ளிகளை மூடிய (அதுவே பொய்) ஒருவருடன் இவர்கள் ஏன் கூட்டணி அமைத்தனர்? அவர் இல்லாவிட்டால் திமுக எதிர்க்கட்சியாகவே இருந்திருக்கும்.


ponssasi
அக் 22, 2024 13:01

கருணாநிதி நூற்றாண்டு எனும் பெயரில் வருவதெல்லாம் என்ன அவன் அப்பன்வீடு சொத்தா? கொள்ளையடித்த பணத்தில் சொந்த பள்ளிகளை திறப்பவனுடன் காமராஜை எப்படி சமமாக பார்க்க முடியும்.


Ramesh Sargam
அக் 22, 2024 12:54

காமராஜரின் கால் தூசிக்கு சமமில்லாதவர் அவரை பற்றி இழிவாக பேசுவது ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுபோன்ற அரைவேக்காடுகளை கட்சி நீக்கவேண்டும். இல்லையென்றால் கட்சி இதுபோன்ற அரைகுறைகளால் காணாமல் போய்விடும்.


chinnamanibalan
அக் 22, 2024 12:52

அரசியலில் எளிமையும் நேர்மையுமாக வாழ்ந்த காமராஜர் குறித்து இது போன்ற ஆசாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று அரசு திட்டங்கள் அனைத்தும் தரமற்று போக கமிஷன் தான் காரணம் என்பதை இவர் அறிவாரா? இவர் போன்ற அரை வேக்காடு ஆசாமிகள் உண்மையை உணர்ந்து பேச வேண்டும்.


முக்கிய வீடியோ