உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருக்கோவிலுார் டூ விக்கிரவாண்டி தொகுதி மாறும் பொன்முடியால் சர்ச்சை

திருக்கோவிலுார் டூ விக்கிரவாண்டி தொகுதி மாறும் பொன்முடியால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தோல்வி பயம் காரணமாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, திருக்கோவிலுார் தொகுதியில் இருந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு மாற திட்டமிட்டுள்ளதால், அத்தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ., அன்னியூர் சிவாவுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு, வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் குறித்து, 'சர்வே' எடுக்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் தொகுதியில் வெற்றி வாய்ப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில், முதல்வர் ஸ்டாலின் நடத்திய, 'ஒன் டூ ஒன்' நிகழ்ச்சியில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள், பொன்முடி மீது தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதையடுத்து, வரும் சட்டசபை தேர்தலில் பொன்முடி தனது திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிடாமல், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி நிர்வாகிகளுக்கு, பொன்முடி தன் வீட்டில் விருந்து வழங்கியுள்ளார்.

இது குறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

திருக்கோவிலுார் தொகுதியில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், பா.ஜ.,வைச் சேர்ந்த ஏ.ஜி.சம்பத் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இவரது தந்தை, முன்னாள் தி.மு.க., அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு, சமீபத்தில் விழுப்புரத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் திறக்கப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதி முகையூர் தொகுதியாக இருந்தபோது, சுயேச்சையாக ஏ.ஜி.சம்பத் போட்டியிட்டு, 28,000 ஓட்டுகள் பெற்றார். எனவே, அவர் போட்டியிட்டால், பொன்முடியின் வெற்றி கேள்விக்குறியாகும் என்பதால், தொகுதி மாறும்படி அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். லோக்சபா தேர்தலில், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட வி.சி., வேட்பாளர் ரவிகுமார் பெற்ற ஓட்டுகளை விட, அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜ் கூடுதல் ஓட்டுகளை பெற்றதும், பொன்முடி மனநிலை மாற்றத்திற்கு காரணம். விக்கிரவாண்டி தொகுதி மீது பொன்முடி கண் பதித்திருப்பது, அத்தொகுதியின் தற்போதைய தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்னியூர் சிவாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இருவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் மோதல் உருவாகி இருக்கிறது. இவ்வாறு கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Raghavan
ஜூலை 28, 2025 20:37

நீதிபதியிடம் தனக்கு குறைச்சலான தண்டனை கொடுங்கள் என்று கேட்டார். அப்படியென்றால் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தானே அர்த்தம். பிறகு தனது அமைச்சர் பதவியையும் MLA பதவியையும் ராஜினாமாசெய்தார். பிறகு உச்ச நீதிமன்றம் சென்று எப்படியோ ஜாமீன் பெற்று நீதிபதிகளே அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவியை கொடுக்கும்படி செய்துவிட்டார்.


M Ramachandran
ஜூலை 28, 2025 19:11

முன்பெல்லாம் எல்லாமதத்தினரும் மற்றவர்கலிய்ய புண் படுத்த முயல வில்லையை எப்போனது இந்த திராவிடம் என்ற ஒட்டு பொறுக்கி கட்சி அரசியாலில் நுழைந்ததோ அதில் இருந்து மற்றும் MGR கால்பிடித்து முதல்வர் பதவிக்கு வந்ததோ அன்றிலிருந்து காலை சுத்தி அப்போஅதைய்ய கப்போவது கடித்து கொண்டிருக்கு. தமிழர்களூற்றுமையாய் குலைந்து சதி செய்து வருகின்றது.


M Ramachandran
ஜூலை 28, 2025 12:16

சில கீழ்த்தர ஜென்மங்களைமனித ஜென்மங்க்ளாக் நினையயக்க கூடாது.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 28, 2025 11:30

ஓசி அமைச்சர் இன்னமும் கூசாமல் பூசி ஓடுவது தான் திமுகவின் சிறப்பு


sankaranarayanan
ஜூலை 28, 2025 11:11

மற்ற எல்லா மதத்தினர்களையும் மனத்தால் புண் படுத்திய இந்த பொன்முடியை இனிமேல் புண் முடி என்றே அழைக்கலாமே


Gurumoorthy
ஜூலை 28, 2025 10:39

இந்துக்களின் மனதை மிகவும் காயப்படுத்திய இந்த முன்னாள் அமைச்சர் சட்டத்தின் முன்பு குற்றவாளி ஆன பொன்முடிக்கு எந்தத் தொகுதியிலும் சீட் கொடுக்கக் கூடாது என்பது திமுகவின் கொள்கை முடிவாக இருக்க வேண்டும்... இவர் இவருக்கு சீட் யுவர் மகனுக்கு சீட்..... கோடி கோடியாக கொள்ளையடித்து வைத்து உள்ளார்கள்


புதிய வீடியோ