உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்பு சான்று ; மனைவியை போலீசில் ஒப்படைத்த தாசில்தார்

உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்பு சான்று ; மனைவியை போலீசில் ஒப்படைத்த தாசில்தார்

இடைப்பாடி; கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக, அவர் உயிரோடு இருக்கும் போதே, இறப்பு சான்று பெற்று வாரிசு சான்றிதழ் பெற முயன்றவரை, இடைப்பாடி தாசில்தார் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.சேலம் மாவட்டம், இடைப்பாடி வீட்டுவசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் விஜயகுமார், 48. பத்தாம் வகுப்பு படித்திருக்கும் இவருக்கும், காங்கேயத்தை சேர்ந்த ரேவதி, 40, என்பவருக்கும், 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு, 17, 15 வயதில் இரு மகள்கள் உள்ளனர். பணம் சம்மந்தமாக தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.வேலைக்காக, 10 ஆண்டுகளுக்கு முன் மலேசியா சென்ற விஜயகுமார், கடந்தாண்டு ஜூலையில் இந்தியா திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த நாள் முதலே விஜயகுமாருக்கும், ரேவதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தததையடுத்து, நான்கு மாதங்களுக்கு முன், ஓசூருக்கு சென்ற விஜயகுமார், அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் ரேவதி, தன் கணவரை காணவில்லை என, இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் கடந்தாண்டு செப்., 12ல், புகார் கொடுத்துள்ளார். போலீசாரும் ஒரு மாதம் கழித்து அக்.,24ல் விஜயகுமாரை காணவில்லை என வழக்கு பதிவு செய்தனர்.அதேபோல், பவானி போலீஸ் ஸ்டேஷனில், தன் கணவரை காணவில்லை எனக்கூறி ரேவதி புகார் கொடுத்துள்ளார். கடந்தாண்டு நவ., 2ல் பவானி தாலுகா, சன்னியாசிப்பட்டி பகுதியில் ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய ஆண் சடலம், தன் கணவர் தான் என பவானி போலீசில் ரேவதி கூறியுள்ளார்.இதையடுத்து வழக்கு பதிவு செய்த பவானி போலீசார், பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கு பதிவை வைத்து உயிரோடு இருக்கும் விஜயகுமாருக்கு, பவானி பேசலீசார் இறப்பு சான்று கொடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ