உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தீபத்துாணா, நில அளவைக்கல்லா? குன்றத்தில் தொல்லியல் துறை ஆய்வு

தீபத்துாணா, நில அளவைக்கல்லா? குன்றத்தில் தொல்லியல் துறை ஆய்வு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மேல் இருப்பது தீபத்துாணா, நில அளவைக்கல்லா என, தமிழக அரசு தொல்லியல் துறையினர் நேற்று மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்தனர். தொல்லியல் துறை முதன்மை செயலர் அனுப்பிய கடிதத்தின் படி, மதுரை கலெக்டர் உத்தரவில், நேற்று காலை, 8:10 மணிக்கு தொல்லியல் துறை துணை இயக்குநர் யத்திஷ் குமார் தலைமையில் ஏழு பேர் கொண்ட தொல்லியல் துறை குழுவினர், திருப்பரங்குன்றம் மலை மேல் சென்றனர்.

கண்டிக்கத்தக்கது

அங்கு, மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்து, தீபத்துாணை அளவீடு செய்து, காலை, 11:45 மணிக்கு புறப்பட்டனர். அவர்களுடன், திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா, ஆர்.ஐ., திருக்கண்ணன், வி.ஏ.ஓ.,க்கள் சுந்தரேசன், முத்துசாமி, மனோஜ் சென்றனர். ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் எம்.சோலைகண்ணன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றாதது தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ளது எல்லை கல்லா, தீபத்துாணா என, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தது கண்டிக்கத்தக்கது.

சந்தேகம்

தீபத்துாண் இருந்ததற்கான ஆதாரங்கள், ஆவணங்கள், சட்டத்தின் அடிப்படையில், தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என, நீதிபதி தீர்ப்பளித்ததை மதிக்காமல், சிறுபான்மையினர் ஓட்டுக்காகவும், அவர்களை குளிர வைக்கவும், 'தீபத்துாணில் தீபம் ஏற்ற விடமாட்டோம்; அது எல்லைக்கல்' எனக்கூறும் தமிழக அரசு, இத்தனை நாட்கள் கழித்து தமிழக தொல்லியல் துறையை ஆய்வு செய்ய அனுப்பியது, மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்புகிறது. தீபத்துாணை, தொல்லியல்துறை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதா? தமிழக தொல்லியல் துறை, மலையை ஆய்வு செய்ய போகிறோம் என உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனரா? ஆய்வுக்கு செல்லும் போது, வழக்கு தொடர்ந்த மனுதாரரையோ, மாவட்ட நீதிபதி ஒருவரையோ ஏன் அழைத்து செல்லவில்லை? நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிப்பதற்கு முன், மலை மீதுள்ள தீபத்துாணை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு செய்துள்ளார். அப்படி இருக்கையில், தமிழக தொல்லியல் துறை எதற்காக ஆய்வு செய்ய வேண்டும்? தன் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழக தொல்லியல் துறையை ஏவி, தீபத்துாணில் உள்ள ஆவணங்களை அழித்து, அது எல்லைக்கல் தான் என நிறுவ, அரசு பார்க்கிறது. நீதிபதிகள் உத்தரவு இன்றி, தீபத்துாணை ஆய்வு செய்த தமிழக அரசின் தமிழக தொல்லியல் துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மத்திய அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு, தீபத்துாணை ஆய்வு செய்ய மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தர்கா, கலெக்டர் ஆபீசுக்கு மிரட்டல்

மதுரை கலெக்டர் அலுவலகம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா ஆகியவற்றுக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சமீபத்தில் பிரச்னை உருவானது. இதையடுத்து, 144 தடை உத்தரவு போடப்பட்டு, மலைக்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியில் உள்ள வீடுகளுக்கு செல்வோரையும் கடும் சோதனைக்கு பின்பே அனுமதிக்கின்றனர். மலைமீதுள்ள தர்கா , தீபத்துாண் பகுதியிலும் கண்காணிப்பு உள்ளது. குண்டு மிரட்டல் வந்ததும், நேற்று மாலை போலீசார், மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் சகிதமாக சோதனையிட்டனர். இறுதியில் புரளி என தெரிந்தது. மேலுார் ரோட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சோதனைக்கு பின் அதுவும் புரளி என, தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Skywalker
டிச 11, 2025 19:15

In this way they will systematically bring some nonsense theories about hindu culture and practices and find a way to stop them despite courts orders, and use it as a precedent to put in their Dravidian propaganda school books and at one point turn the entire state towards anti hinduism


Anonymous
டிச 11, 2025 17:42

இது எதிர் பார்த்த ஒன்று தான், விரைவில் தொல்லியல் ஆய்வு துறையின் ஒரிஜினல் கோப்புகளை அழித்து, தீமுக அவர்களுக்கு வேண்டிய மாதிரி மாற்றி எழுதிய கோப்புகளை தொல்லியல் துறையில் வைத்து , விடுவார்கள், நாளைய தலைமுறைக்கு அதை காட்டி , எதிர்கால திமுக அரசுக்கு பிரச்சினை வராமல் இருக்க , இப்போவே அடிக்கல் நாட்டியாச்சு, இந்து மதத்தை அழிக்க எல்லா உள்ளடி வேலைகளையும் கன கச்சிதமாக செய்து முடித்து விடுவார்கள், 2026 தேர்தலில் தோற்றாலும், அதற்கு பிறகு வரும் தேர்தலில் ஒரு வேளை ஜெயித்தால், இன்பநிதிக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க , அடிக்கல் போட்டு விட்டு தான் , இங்கே இருந்து கிளம்புவார்கள் திமுக ஆட்சியாளர்கள். தமிழக மக்களுக்கு புரிந்தால் நன்று, விழித்து கொள்ள வேண்டிய நேரம் தமிழக மக்களுக்கு இப்போது, தயவு செய்து விழித்து கொள்ளுங்கள், உங்கள் எதிர் கால சந்ததியினருக்கு நிம்மதியான சூழ்நிலையை விட்டு செல்லவேண்டிய கடமை , நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.தயவு செய்து விழிப்போடு இருங்கள்.


ManiK
டிச 11, 2025 10:50

அடுத்ததாக ஓய்வு எடுக்கும் சந்துரு என்பவரின் ஒரு நபர் கமிஷன் அமைத்து அந்த சிறப்பான தீபத்தூணுக்கு கருப்பு பென்ட் பூசுவார்கள்.


balaji
டிச 11, 2025 10:36

அட 200 ஓவா உடன்பிறப்புகளே...எல்லைக் கல் என்பது ஒன்றே ஒன்று மட்டும்தான் இருக்குமா...?


ஆரூர் ரங்
டிச 11, 2025 09:30

அயோத்தியில் கூட திரு.கே கே முஹம்மது கமிட்டி தொல்லி‌யல் அகழ்வாராய்ச்சி நடத்தி அங்கு முன்பு ராமர் ஆலயம்தான் இருந்ததாக அறிக்கையளித்தது. ஆனால் அதனை முஸ்லிம் இயக்கங்களும் எதிர்க்கட்சிகளும் ஏற்கவில்லை. ஆக மத நம்பிக்கை விஷயங்களில் விஞ்ஞானி ஆராய்ச்சி பயனற்றது.


அருண், சென்னை
டிச 11, 2025 08:35

Setupன்னு நல்லா தெரியுது...


விஸ்வநாத் கும்பகோணம்
டிச 11, 2025 08:19

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விஷயம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது தமிழக தொல்லியல் துறை கோர்ட் அனுமதி இல்லாமல் எப்படி அங்கு போய் ஆய்வு நடத்தலாம்? திமுக நீதித்துறையை மதிக்கும் லட்சணம் உலகுக்கே தெரியும். இந்த அவமதிப்பையும் நீதிமன்றம் தாங்கிக் கொள்ள வேண்டியதுதான். நீதி அரசர் திரு. சுவாமிநாதன் அந்தணராக இல்லாமல் இருந்தால் ஒரு வேளை முதலமைச்சருக்கு இவ்வளவு வன்மம் இருக்காது என்று தோன்றுகிறது. அந்தணர்கள் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பு எல்லாரும் அறிந்ததே. இதை வெளிப்படையாக சொல்ல அறிவு ஜீவிகளுக்கும் சட்ட வல்லுநர்களுக்கும் தயக்கம் இருக்கும். ஆனால் இதையெல்லாம் மீறி சத்தியம் வெற்றி பெறும். சாதுக்களை இறைவன் கைவிட்ட தில்லை.


kulanthai kannan
டிச 11, 2025 07:57

முடிவை முன்னரே தீர்மானித்து விட்டு, துவக்கப்பட்ட உள்ள டுபாக்கூர் ஆய்வு


சூர்யா
டிச 11, 2025 07:44

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது குறித்து வழக்கு உயர்நீதி மன்றத்தில் உள்ளது. இவ்வழக்கின் எதிர்மனுதாரர் தமிழக அரசு அதன் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக தொல்லியல் துறை நீதி மன்ற ஆணை இல்லாமல் எப்படி இவ்விடத்தில் ஆய்வு மேற்கொள்ளலாம்? அல்லது நீதி மன்ற உத்தரவுப்படி ஆய்வு மேற் கொள்கிறார்களா?


Sun
டிச 11, 2025 07:39

தமிழக தொல்லியல் துறையா? அப்ப முடிவு தெரிந்த ஒன்றுதான்!


புதிய வீடியோ