உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரிப்பு வடிவமைப்பு காரணமாக தாமதம்?: ரயில்வே அமைச்சர் மறுப்பு

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரிப்பு வடிவமைப்பு காரணமாக தாமதம்?: ரயில்வே அமைச்சர் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வடிவமைப்பு அனுமதி கிடைக்காததால், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரிப்பில் தாமதம் நீடிப்பதாக ஊடகங்களில் வெளியான தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக மறுத்தார்.நாட்டின் பல்வேறு நகரங்ளுக்கு இடையே, 100க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் உட்கார்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில்கள், மணிக்கு 120 கி.மீ., வேகத்துக்கு மேல் பயணிக்கின்றன.இந்த ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, 'ஸ்லீப்பர்' எனப்படும், துாங்கும் வசதியுடைய, வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணியில், ரயில்வே நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்க, ரஷ்யாவின் மாஸ்கோவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங்' என்ற ரயில் போக்குவரத்து நிறுவனத்துடன், நம் ரயில்வே துறை ஒப்பந்தம் போட்டுஉள்ளது.ஸ்லீப்பர் ரயில் பெட்டியில் கழிப்பறை, கேன்டீன் அமைக்க, டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் நிறுவனத்திடம் நம் ரயில்வே அமைச்சகம் கோரியதாகவும், இதனால், தயாரிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், சமீபத்தில் செய்தி வெளியானது.மேலும், ரயில்வே அமைச்சகத்தின் கோரிக்கையின்படி, ஸ்லீப்பர் ரயிலின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து அனுப்பப்பட்டதாகவும், இதற்கு அமைச்சகத்திடம் இருந்து பதில் வரவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அமைச்சர் கூறுவது என்ன? ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது:ஆறு அல்லது எட்டு பெட்டிகளுக்கு மேல் உள்ள ரயில் பெட்டியை தயாரிப்பதில், டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் நிறுவனத்துக்கு அனுபவம் இல்லை.ரஷ்யாவில் குறைந்த மக்கள் தொகை இருப்பதால், அங்கு ஆறு அல்லது எட்டு பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்படுகிறது.நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் இருப்பதால், 16 அல்லது 24 பெட்டிகள் கொண்ட ரயில் தேவை. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் வடிவமைப்பு மாதிரியை நாங்கள் தருகிறோம் என்றும், அதன்படி ரயில் பெட்டியை தயாரிக்க வேண்டும் என்றும், டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் நிறுவனத்திடம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும், 16 அல்லது 20 அல்லது 24 என்ற எண்ணிக்கையில் ரயில் பெட்டிகளை தயாரிக்க வேண்டும் என, தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறு. ரயில் பெட்டி தயாரிப்பு பணிகளை, டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் நிறுவனம் விரைவில் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழ்வேள்
நவ 30, 2024 18:39

யூரேசிய ரயில் கழிவறைகள் 30 அல்லது 40 பயணிகள் கெப்பாசிடி மட்டுமே...நமது ரயில்கோச் ஒன்றில் பயணிகள் கெப்பாசிடி 80 பயணிகள்... டிசைன் செட் ஆகாது. தற்போதைய கழிவறை டிசைன், வண்டி தாண்டி செல்லும் போதும் வண்டிக்குள்ளும் கப்பு ஓவராக இருக்கும்...


அப்பாவி
நவ 30, 2024 06:27

ஆறு ஆறா நாலு தயாரிச்சு இணைச்சா ஓடாதா கோவாலு? அந்நிய பத்திரிகைகளில் போதுமான கழிப்பறை வசதி பெட்டிகளில் குடுக்காமல் போனதால் தாமதம்னு படிச்சேன். அசல் காரணம் கட்டிங் சரியா குடுக்கப் படவில்லை என்பதாகத்தான் இருக்கும்.


கிஜன்
நவ 30, 2024 06:15

சார் ...நீங்க நிஜமாவே ஐ.ஐ.டி லதான் படிச்சியாளா ? ஒண்ணுமே படிக்காத லாலுவிடம் இருந்த திறன் கொஞ்சம் கூட உங்களிடம் இல்லை ... டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் .... 8 பெட்டிகளுக்கு மேல் தயாரிக்கும் அனுபவம் இல்லை என்பது இப்போ தான் புரிந்ததா ? ... BEML மற்றும் ICF ல் இல்லாத திறன் டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங்ல் இருக்கும் என என்று எப்படி முடிவெடுத்தீர்கள் .... ருசியா தயாரிப்பே அரதபழசாக ... மட்டமாகத்தான் இருக்கும் .... அவர்களிடம் ஏன் நவீன வடிவமைப்பை ஒப்படைத்தீர்கள் ? ஜெர்மனி பிரான்ஸ் எல்லாம் உங்கள் நண்பர்கள் தானே ?


ஜீவன்
நவ 30, 2024 07:44

அவுரு அந்தக்கால ஐ ஐ.டி


வினோத்
நவ 30, 2024 10:30

போரினால் ரஷ்யா கஷ்டபடுது. நமக்கு குறைச்ச விலைக்கு ஆயிலும்.குடுக்குது. நாம கைம்மாறு செய்ய வாணாமா? அதான் இந்த காண்டிராக்ட் போலேருக்கு. சின்ன வந்தே பாரத்துக்கு ஆர்டர் குடுத்துரலாம்.


jayvee
நவ 30, 2024 18:59

உண்மை.. லாலு வின் திறமை இவருக்கு கிடையாது.. தொலைத்தொடர்பு துறையும் தோல்வி, டிஜிட்டல் இந்தியாவிலும் தோல்வி .ரயில்வே துறை வர்த்தக நிறுவனமானதுதான் மிச்சம்.


முக்கிய வீடியோ