உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: ஒரே நாளில் நடந்த மாற்றம்

டில்லி உஷ்ஷ்ஷ்: ஒரே நாளில் நடந்த மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இது, டில்லி அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், 'தி.மு.க., - -பா.ஜ., நெருங்கி வருகிறதா' என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த இரண்டாம் கட்ட திட்டம், பல மாதங்களாக கிடப்பில் இருந்தது; தவிர, நிதி அமைச்சகம் இதற்கு அனுமதி அளிக்க கிட்டத்தட்ட மறுத்து விட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் டில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து, இத்திட்டத்திற்கு விரைவில் அனுமதி அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.மத்திய அமைச்சரவை, இதற்கான அனைத்து வேலைகளையும் ஒரே நாளில் முடித்து, அனுமதியும் வழங்கியது குறித்து அதிகாரிகள் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.இந்த விவகாரத்தில், பல அமைச்சகங்களின் அனுமதி தேவை. மேலும், இந்த விவகாரத்தை கவனிப்பது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை.இதன் அமைச்சர், ஹரியானாவின் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார். அவரோ, ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிசியாக இருந்தார். எனவே, அவர் செய்ய வேண்டிய வேலைகளை, சென்னை மெட்ரோ திட்டத்திற்காக செய்தது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.'இப்போதைக்கு அனுமதி கிடையாது' என, ஒரு மாதத்திற்கு முன் சொன்ன நிதி அமைச்சகம், தற்போது அனுமதி வழங்க அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, பிரதமர் கட்டளையிட்டதாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ... சென்னை மக்களுக்கு இந்த திட்டம் ஒரு பெரிய வரப்பிரசாதம்.இந்த அனுமதி, அரசியல் ரீதியாக பல கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் சந்தேகத்தையும் உண்டாக்கியுள்ளது.பா.ஜ.,வுடன் தி.மு.க., நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளதா? காங்கிரசின் சீனியர் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர், தி.மு.க., சீனியர் எம்.பி., ஒருவரிடம், 'முதல்வரும், பிரதமரும் என்ன பேசினர்? நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தனரே... என்ன நடந்தது?' என, விசாரித்து உள்ளனராம். அந்த எம்.பி.,யோ, 'எனக்கு எதுவும் தெரியாது' என கைவிரித்து விட்டாராம்.தி.மு.க., பவள விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'பா.ஜ.,வை உள்ளே வர விடக்கூடாது' என, கறாராக சொல்லி விட்டார்; ஆனாலும், காங்கிரசுக்கு சந்தேகம் தீரவில்லை. 'இதென்ன காதலா அல்லது உறவா?' என, டில்லி தலைவர்கள் கிண்டலடிக்கின்றனர்.தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, தி.மு.க., எதையும் செய்ய தயாராக இருக்கும்' என, சந்தேகிக்கின்றனர் காங்கிரசார். இதற்கேற்றார் போல, தி.மு.க., அமைச்சர்கள் மீது, அமலாக்கத் துறை வழக்குகளில் வேகம் காட்டாமல், அமைதியாக இருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Palanisamy Narayanasamy
அக் 07, 2024 11:44

இதில் என்ன தவறு...?


சாண்டில்யன்
அக் 06, 2024 14:36

மெட்ரோ ரயில் மக்களுக்கானது இதிலென்ன ராசியில் வேண்டிக் கிடக்கு எத்தனையோ கோரிக்கைகளுக்கும் அசைந்து கொடுக்காதவர்கள் ஒரேநாள் சந்திப்பில் சம்மதிக்கிறார்கள் என்றால் எங்கோ உதைக்கிறது DMK என்றால் ஊழல் என்பார்கள் ஸ்டார் லின் பேரம் பேசினாரா? எப்படியிந்த மற்றம் நடந்தது என விளக்கி மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது டில்லி தர்பார் கடமை


SP
அக் 06, 2024 11:07

திமுக விஷயத்தில் மத்திய தலைமை நடந்துகொள்வது முற்றிலும் சரியில்லை.


சாண்டில்யன்
அக் 06, 2024 14:42

இது திமுக விஷயமல்ல வேலைக்கு பள்ளி கல்லூரிகளுக்கு மருத்துவ மனைகளுக்கு என்று பலவற்றிற்கும் சென்று வர மணிக்கணக்கில் சாலைகளில் / சிக்கனல்களில் வாகனங்களில் காத்துக் கிடக்கும் சென்னை மக்களின் நலன் சார்ந்த விஷயம் ஒருவேளை நிதி தந்தாலும் தராவிட்டாலும் திட்டத்தை முடிப்பார்கள் என்ற அச்சம் டில்லிக்கு வந்திருக்கலாமோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை