உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: பிரியங்காவிற்கு எதிராக ஒரு தமிழ் பெண்மணி!

டில்லி உஷ்ஷ்ஷ்: பிரியங்காவிற்கு எதிராக ஒரு தமிழ் பெண்மணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துவிட்டார் பிரியங்கா. இவருக்கு எதிராக சி.பி.எம்., சார்பில் சத்யன், பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர்.இவர்களைத் தவிர ஒரு தமிழ் பெண்மணியும் பிரியங்காவை எதிர்த்து போட்டியிடுகிறார். அவர் ஒரு தமிழ் சீக்கிய பெண்மணி; பெயர் சீதா கவுர். சீக்கிய உடையில், நீல நிற தலைப் பாகையுடன் வலம் வருகிறார்; 52 வயதாகும் இவருக்கு இரண்டு குழந்தைகள். பகுஜன் திராவிட கட்சியைச் சேர்ந்தவர் சீதா. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்ஷிராமின் கொள்கைகளை பின்பற்றும் இந்த கட்சியின் நோக்கம், பட்டியலின மக்களின் முன்னேற்றம்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டவர் சீதா. இவருடைய கணவர் ராஜன் சிங், கன்னியாகுமரியில் போட்டி யிட்டார். இந்த கட்சியின் தலைவர், ஜீவன் சிங் மில்கா; உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Senthoora
அக் 27, 2024 13:37

இப்படித்தான் ஹரியானாவில் தமிழனை நிறுத்த, தலைவரே தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழ்த்தாய்க்கு அடுத்தபிறவியில் பிறக்கணும் என்று பொம்மினார், அவரே ஹரியானாவுக்கு போய் தேர்தல்காலத்தில், தமிழனை நம்பாதீங்க என்று சொல்லி தமிழிலனை கேவலப்படுத்தினார், அதேதான் இந்த பெண்னுக்கும் கேவல படுத்துவங்க. ஒதுங்குவது நல்லது.


SRIDHAAR.R
அக் 27, 2024 09:01

ஓட்டை பிரிக்கவா தமிழச்சி


மோகனசுந்தரம்
அக் 27, 2024 05:41

இது தேவையில்லாதது ஒன்று. பிஜேபி வேட்பாளருக்கு ஆதரவு அளித்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். தமிழ் பெண்மணி என்று தலையில் தூக்கி கொண்டாட வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை