வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு உள்துறை அமைச்சர் இரண்டு முறை ஆட்சியில் இருந்த பொழுது sheenbagh மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை அடக்க துப்பு இல்லாதவர் இவருக்கு சாணக்கியன் என்று புனை பெயர் வேறு .
புதுடில்லி: எந்த ஒரு மாநிலத்திற்கும் டி.ஜி.பி., நியமனம் செய்ய, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய தேர்வாணையத்தை அணுக வேண்டும். ஆணையம் அனுமதி அளித்த பிறகே, டி.ஜி.பி.,யை நியமனம் செய்ய முடியும். இந்த நடைமுறையை மாற்ற உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்து, இது தொடர்பாக ஒரு சட்டம் கொண்டு வர உள்ளார்.இந்த புதிய சட்டத்தின்படி, உ.பி.,யில் டி.ஜி.பி.,யை நியமனம் செய்ய, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும்.இந்த குழுவில் தலைமை செயலர் உட்பட பலர் உறுப்பினர்களாக இருப்பர். டி.ஜி.பி.,யாக நியமிக்கப்படுபவர் பணி ஓய்வு பெற குறைந்தபட்சம் ஆறு மாதம் இருக்க வேண்டும்.இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காரணம், இப்போது உ.பி.,யின் டி.ஜி.பி.,யாக உள்ள பிரஷாந்த் குமார், இந்த புதிய சட்டத்தின்படி டி.ஜி.பி.,யாக நீடிக்கலாம். பிறகு, இவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும். இவர், முதல்வர் யோகிக்கு நெருக்கமானவர்.டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக 2006ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்தது. இதன்படி மத்திய தேர்வு ஆணையத்தின் ஒப்புதல் வேண்டும்.அதே சமயம் இந்த தீர்ப்பு எப்போது வரை செயல்பாட்டில் இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அல்லது மாநில அரசு, டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக சட்டம் இயற்றும் வரை தீர்ப்பு அமலில் இருக்கும் என கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். இதன் பின்னணியில் தான், புதிய சட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் யோகி.ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, யோகியின் இந்த புதிய சட்டம் பிடிக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். யோகிக்கும், அமித் ஷாவிற்கும் ஏற்கனவே ஆகாது என பல செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது உண்மையா என்பது அமித் ஷாவிற்குத்தான் வெளிச்சம். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் சட்டத்தை நிறைவேற்ற தயாராகி வருகிறார் யோகி.
ஒரு உள்துறை அமைச்சர் இரண்டு முறை ஆட்சியில் இருந்த பொழுது sheenbagh மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை அடக்க துப்பு இல்லாதவர் இவருக்கு சாணக்கியன் என்று புனை பெயர் வேறு .