உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: வி.வி.ஐ.பி., பாதுகாப்பில் மாற்றம்

டில்லி உஷ்ஷ்ஷ்: வி.வி.ஐ.பி., பாதுகாப்பில் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தற்போது வி.வி.ஐ.பி.,க்களுக்கு, என்.எஸ்.ஜி., எனப்படும், தேசிய பாதுகாப்பு படையின் கருப்பு பூனைகள் பாதுகாப்பு அளித்து வருகின்றன. பயங்கரவாதிகளின் தாக்குதலை சமாளிக்கவும், அதை முறியடிக்கவும் இந்த என்.எஸ்.ஜி., துவங்கப்பட்டது.ஆனால், முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என, பலருக்கும் கருப்பு பூனை படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். 'என்.எஸ்.ஜி.,யை வி.வி.ஐ.பி., பாதுகாப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்' என, கடந்த 2012 முதலே சொல்லப்பட்டாலும் அது அமல்படுத்தப்படவில்லை.ஆனால், இப்போது வி.வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பை முற்றிலும் மாற்றியமைக்க பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முடிவு செய்துள்ளனர். இதனால், 450க்கும் அதிகமான என்.எஸ்.ஜி., அதிரடி வீரர்கள் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் பணிக்கு திரும்புவர். வி.வி.ஐ.பி., பாதுகாப்பு பணியிலிருந்து கருப்பு பூனையினர் வாபஸ் பெறப்படுவர்; இவர்களுக்கு பதிலாக சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர்.பயங்கரவாதிகள், இந்தியாவின் பல பகுதிகளில் ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தினால், அதை எதிர்கொண்டு அவர்களை ஒழித்துக்கட்ட, என்.எஸ்.ஜி., வீரர்கள் தேவை. இந்த எண்ணத்தில் தான், என்.எஸ்.ஜி., துவங்கப்பட்டது. ஆனால், இப்படி வி.வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பிலேயே பாதி நேரம் செலவிடப்படுகிறது என்பதால் இந்த மாற்றம்.என்.எஸ்.ஜி.,யைத் தவிர, இன்னொரு மிக அதிரடி பாதுகாப்பு படை உள்ளது; அது, எஸ்.பி.ஜி., அமைப்பு. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இவர்களது குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பது, இந்த எஸ்.பி.ஜி., 3,000 வீரர்களைக் கொண்ட இந்த பிரிவு, 1985ல் ராஜிவ் கொலைக்கு பின் துவங்கப்பட்டது. இது எப்படி செயல்பட வேண்டும் என்பதை, 'புளூ புக்' எனப்படும் நீலநிற புத்தகம் தெரிவிக்கிறது. ஆனால், இந்த புத்தகம் யார் கைக்கும் கிடைக்காது; ரகசியமானது.அதே போல மஞ்சள் நிற புத்தகமும் உள்ளது. இதில், தனிநபர் பாதுகாப்பு எப்படி அளிக்க வேண்டும், அதற்கான நெறிமுறைகள், மற்ற பாதுகாப்பு ஏஜென்சிகளோடு தொடர்புகொள்வது குறித்த அனைத்தும் இருக்கும்; இதுவும் ரகசிய புத்தகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ