உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்!; இந்திராவை அடுத்து சோனியா?

டில்லி உஷ்ஷ்ஷ்!; இந்திராவை அடுத்து சோனியா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வட மாநிலங்களில், தற்போது ஒரு சினிமா அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., - எம்.பி.,யும், நடிகையுமான கங்கனா ரணாவத்தின், எமர்ஜென்சி திரைப்படம் தான் அது. இதில், முன்னாள் பிரதமர் இந்திரா வேடத்தில் நடித்துள்ளார் கங்கனா. எமர்ஜென்சி சமயத்தில் நடந்த கொடுமைகளையும், அரசியல் விஷயங்களையும் இந்த படத்தில் சொல்லி இருக்கின்றனர்; பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, எமர்ஜென்சி வெளியிடப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ezqife7i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசியல் தலைவர்கள் வேடங்களை ஏற்று நடிப்பதில் வல்லவர் கங்கனா. ஏற்கனவே, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக, குயின் படத்தில் நடித்துள்ளார். பா.ஜ., ஆளும் மாநிலங்கள், எமர்ஜென்சி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளன.எமர்ஜென்சியின்போது நடந்த அட்டூழியங்களை, பா.ஜ.,வினர் அடிக்கடி மக்களுக்கு நினைவுபடுத்தி, காங்கிரசை கடுப்பேற்றி வருகின்றனர். ஒடிசா மாநில பா.ஜ., முதல்வர் மோகன் சரண் மஜி, ஒருபடி மேலே போய், இந்த அவசர சட்ட காலத்தின்போது, சிறையில் இருந்த, 700 பேருக்கு பென்ஷன் வேறு அறிவித்துள்ளார்.இந்திராவை அடுத்து, சோனியா வேடத்தில் கங்கனா நடிக்கப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தேசிய ஆலோசனை குழு என ஒன்றை துவங்கி, அதன் தலைவராக இருந்தவர், சோனியா.'இந்த பதவி, சூப்பர் பிரதமர் பதவி' என, அப்போது சொல்லப்பட்டது. 'மன்மோகன் சிங் பிரதமராக இருந்தாலும், சோனியா சொல்வதைக் கேட்டுதான் ஆட்சி நடத்தி வந்தார்' என, குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரங்களை எல்லாம், தன் புதிய படத்தில் கொண்டுவர விரும்புகிறாராம் கங்கனா. ஆனால், 'இது சாத்தியமா?' என, பல பா.ஜ., தலைவர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. காரணம், 'இந்த புதிய பட விவகாரம், நீதிமன்றம் வரை செல்லும்' என்கின்றனர். எது எப்படியோ, அரசியல் தலைவர்களின் ஆட்டங்களை, திரையில் காட்ட முடிவெடுத்துவிட்டார் கங்கனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

முருகன்
ஜன 19, 2025 07:35

காங்கிரஸ் சார்பில் இவர்கள் கட்சி தலைவர்களை பற்றி படம் எடுத்தால் ஏற்றுக் கொள்வர்களா


N Sasikumar Yadhav
ஜன 19, 2025 07:56

கோபாலபுர கொத்தடிமையான உங்களுக்கு பொய் மட்டுமே தெரியும்


vijai
ஜன 19, 2025 13:42

muruga அரோகரா வாயமூடும் .


subramanian
ஜன 19, 2025 04:52

மட்டரகமான செயல் செய்த நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் காந்தி பெயரில் கள்ள தனம் செய்கிறார்கள்


N Sasikumar Yadhav
ஜன 19, 2025 04:51

தேசத்திற்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டிப்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் . தமிழகத்தில் சுதந்திர தினத்தை துக்கநாள் என சொன்ன ஈவெ ராம்சாமை தோலுரிக்கவேண்டும்


bala
ஜன 19, 2025 06:47

என்ன பா எப்ப பாத்தாலும் உஸ்ஸ் இஸ்ஸ் நு டைடல் please change the title it's irritating the tile


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை