டில்லி உஷ்ஷ்ஷ்: ரிசர்வ் வங்கி கவர்னரின் பதவிக்காலம் நீட்டிப்பு?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ்; 67 வயதாகும் இவர், ஒடிசாவைச் சேர்ந்தவர். ஆனால், தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. தமிழக அரசில் பல துறைகளில் பணியாற்றி உள்ளார்.மத்திய நிதி செயலராக பணியாற்றியவர். மோடி அரசு, இவரை ரிசர்வ் வங்கி கவர்னராக கடந்த 2018 டிசம்பரில் நியமித்தது. இவருடைய மூன்றாண்டு பதவிக்காலம் 2021 டிசம்பரில் முடிந்தது; இவருடைய திறமையைப் பார்த்து, பதவிக் காலத்தை மேலும் மூன்றாண்டுகள் நீட்டித்தார் மோடி.தற்போது அடுத்த மாதம் தாசின் பதவிக்காலம் முடிவடைகிறது; ஆனால் மீண்டும் அதை நீட்டிக்க முடிவெடுத்துள்ளாரம் பிரதமர் மோடி. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, எந்தவிதமான நியமன அறிவிப்பும் வெளியிடக்கூடாது.மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என, சொல்லப்படுகிறது. சக்திகாந்த தாசின் நிர்வாக திறமையால், மோடி இவர் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார்.சக்திகாந்த தாசுக்கு பதவி நீட்டிப்பு கிடைத்தால், ரிசர்வ் வங்கியின் கவர்னராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என, பெயர் பெறுவார். முன்னதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராம் ரவு என்பவர், ரிசர்வ் வங்கியின் கவர்னராக, 1949லிருந்து 1957 வரை கிட்டத்தட்ட ஏழரை ஆண்டு காலம் பதவி வகித்து உள்ளார்.