உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கமல் சிபாரிசில் காஷ்மீர் தூதர்: கதாநாயகிக்கு சூப்பர் சான்ஸ்!

கமல் சிபாரிசில் காஷ்மீர் தூதர்: கதாநாயகிக்கு சூப்பர் சான்ஸ்!

புதுடில்லி: தி. மு.க., தயவில் ராஜ்யசபா எம்.பி.,யான நடிகர் கமல்ஹாசன் திரையில் மட்டுமல்லாமல், பார்லிமென்டிலும் ஹீரோவாக வலம் வருகிறார். சதாசர்வகாலமும் சக எம்.பி.,க்கள் அவரை மொய்க்கின்றனர். பார்லிமென்டில் கமல் பின்னாலேயே ஒரு கூட்டம் அலைகிறது.கமல் நன்றாக ஹிந்தி பேசுவதால், வடமாநில எம்.பி.,க்களிடம் சகஜமாக பேசுகிறார். அதேபோல, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எம்.பி.,க்களிடம் அவரவர் மொழியிலேயே பேசி அசத்துகிறார். குறிப்பாக, பிரதமர் மோடியையும் சந்தித்துவிட்டார்.சமீபத்தில், ராகுல் வீட்டில், 'இண்டி' கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடந்தது. அதிலும் கமல் பங்கேற்றார். அனைத்து தலைவர்களும், கமலுடன் பேச ஆர்வம் காட்டினர்.ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, கமலின் ஹிந்தி புலமையைக் கண்டு ஆச்சரியப்பட்டு, 'பஹல்காம் தாக்குதலுக்கு பின், எங்கள் மாநிலத்தில் சுற்றுலா பயணியர் வருகையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.'ஒரு தென் மாநில ஹீரோயினை எங்கள் மாநில துாதுவராக நியமிக்க ஆசைப்படுகிறோம். அவர் வாயிலாக, மீண்டும் சுற்றுலா அதிகரிக்க வாய்ப்புள்ளது...' எனக் கூறிய ஒமர், ஒரு நல்ல ஹீரோயினை சிபாரிசு செய்யுமாறு, கமலிடம் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ