உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: ஒரு மணி நேரம்தான் துாக்கம்!

டில்லி உஷ்ஷ்ஷ்: ஒரு மணி நேரம்தான் துாக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பிரதமர் பிஸியாகி விட்டார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கூடாரங்களை இந்திய ராணுவம் நொறுக்கி தள்ளியது. இதில், 100க்கும் மேற்பட்ட பாக்., பயங்கரவாதிகள் பலியாகி விட்டனர்.இதையடுத்து, தொடர்ந்து பல ஆலோசனை கூட்டங்கள், முப்படை தளபதிகளுடன் கூட்டம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ அமைச்சர், உள்துறை அமைச்சர் என பல கூட்டங்களில் பங்கேற்று, பாகிஸ்தான் தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதித்தார் மோடி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w8uf51c1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மற்றொரு பக்கம் வெளிநாட்டு தலைவர்களுடன் தினமும் பேசி வருகிறார். இதுவரை, 150க்கும் மேலான உலக தலைவர்களுடன் பேசி விட்டாராம் மோடி. 'பாக்., பயங்கரவாதிகளைத்தான் இந்தியா தாக்கியது' என, உலக தலைவர்களுக்கு தெரிவித்து உள்ளார்.ஒருபக்கம் ஆலோசனைக் கூட்டங்கள், இன்னொரு பக்கம் உலக தலைவர்களுடன் போனில் பேச்சு என, நாள் முழுதும் பிரதமர் பிஸியாகவே இருந்தார்.'இந்த காலகட்டத்தில், அவர் அதிகம் துாங்கவே இல்லையாம். அதிகபட்சமாக இரண்டு மணி நேரம்தான் மோடி துாங்கியிருப்பார்' என்கின்றனர், பிரதமருக்கு நெருக்கமானவர்கள். சாப்பாடும் அதிகம் கிடையாதாம்.மோடி இருக்கும் இடமருகே, ஒரு ப்ளாஸ்க்கில் வெந்நீர் வைத்துவிட்டால் போதும்... அதைக் குடித்தபடியே கூட்டங்களில் பங்கேற்பாராம்.அதிக பிரச்னை, நெருக்கடி என வரும்போது, குஜராத்தில் உள்ள அம்பாதேவி அம்மனை வழிபடுவதுடன், பிரார்த்தனையும் செய்து கொண்டிருப்பாராம். அதிகம் யாருடனுமே பேச மாட்டார். தனக்கு நெருக்கமாக, பல ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் இரண்டு மூத்த அதிகாரிகளுடன் மனம் விட்டு பேசுவாராம் மோடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

lana
மே 11, 2025 11:57

அது தான் எதிர்கட்சி சொல்லி விட்டதே பாகிஸ்தான் bjp க்கு தான் எதிரி என்று. அவர்கள் இதன் மூலம் சொல்லாமல் சொன்னது பாகிஸ்தான் congress கட்சி க்கு நட்பு மட்டுமல்ல காங்கிரசுக்கு எதிரி இந்திய தேசத்தின் பக்தி உள்ள மக்கள் குறிப்பாக இந்துக்கள். இவர்கள் அனைவரும் அடி கொடுக்க வேண்டும்


kumar
மே 11, 2025 11:46

GOD


mani
மே 11, 2025 09:04

இறைவா! மோடிஜியை இந்தியாவின் தலைவராக்கியதற்கு கோடானுகோடி நன்றி.


கிஜன்
மே 11, 2025 05:12

உங்கள் உழைப்பை.... நாட்டுப்பற்றை குறை கூறவில்லை ....அதில் எள் அளவும் சந்தேகமில்லை .... ஆனால் ...ஜனநாயக நாட்டில் மன்னர் பாணி அரசியல் சரிவருமா .... எதிர்கட்சிகளை அழைத்து பேசிவிட்டு போர் நிறுத்தம் அறிவித்திருந்தால் ...உங்கள் மதிப்பு உயர்ந்திருக்கும் .... எதிர்கட்சிகளை துச்சமென நடத்துவது ...இந்தியா போன்ற வலிமையான ஜனநாயகத்தை உலகிற்கு பறைசாற்றும் நாட்டிற்கு பெருமை சேர்க்குமா என்று எண்ணவேண்டும் ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 11, 2025 07:10

எதிர்கட்சிகள் எதிர்கட்சிகள் போல் பொறுப்புணர்வுடன் இந்திய இறையாண்மை காக்கும் விதத்திலும் நடந்து கொண்டு இருந்து இருந்தால் அவர்களுக்கு உரிய மரியாதை உரிய விதத்தில் அனைவரும் கொடுப்பார்கள் கொடுத்திருப்பார்கள். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தரக்குறைவாக அழைப்பது மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் எதிர்த்து பின்னர் மாநில அரசின் ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் செய்து பணம் தரவில்லை என்று கூறுவது ஒரு பெண் நிதியமைச்சராக பல ஆண்டுகள் நீடிக்கிறார் என்பதற்காக ஆண் ஆதிக்க எதிர்கட்சிகள் அவருக்கு எதிராக கீழ்தரமான விமர்சனங்கள் வைப்பது எப்பொழுதும் வோட்டுக்காக ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு ஆதரவாக செயல்பட்டு பெரும் பாண்மை மதத்தவரை அவர்கள் நம்பிக்கையை இழிவு படுத்தி நாக்கு காது கூசும் வண்ணம் பேசி சிறுபான்மை மதத்தவரை திருப்தி படுத்த நினைப்பது பாலியல் வன்கொடுமைகளில் அரசின் உயர் பதவியில் இருப்பவர்கள் தலையிட்டு குற்றவாளிகளை காக்க நினைப்பது கனிம வளங்கள் கொள்ளை என்றால் எங்கள் ஆட்சியில் மட்டுமா நடக்கிறது உங்கள் ஆட்சியில் கூட நடந்தது என்று கூறி மக்களை ஏளனமாக நடத்துவது தீவிர வாத தாக்குதல் எதிராக கடுமையாக குரல் கொடுக்காமல் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு ஊர் ஊராக சென்று மேடை பிரசங்கம் செய்து ஊடகங்களில் வரச் செய்து தீவிர செயல்பாடுகள் அதற்கு மத்திய அரசின் எதிர்வினை செய்திகள் மத்திய அரசின் செயல்பாடுகள் ஊடகங்களில் குறைந்த அளவே வரும்படி பார்த்து கொள்வது


Santi
மே 11, 2025 07:27

எதற்கு எதிர் கட்சி இடம் பேச வேண்டும், அதுவும் போர் நிறுத்தம் செய்ய... ஸ்டிக்கர் ஒட்டவா? போர் தொடரும் முன் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.


Oviya vijay
மே 11, 2025 10:51

அது எதிர் கட்சிகள் அல்ல. உண்ட வீட்டுக்கு துரோகம் செய்யும் எட்டப்பர்கள்.


theruvasagan
மே 11, 2025 16:44

அவை எதிர்கட்சிகள் இல்லை. நமது எதிரிகளுடன் குலாவும் எதிரிக் கட்சிகள்.


எஸ் எஸ்
மே 11, 2025 18:33

முதலில் எதிர்க்கட்சி தலைவர்களை நாட்டையும் பிரதமரையும் மதித்து நடந்து கொள்ள சொல்லுங்கள்.


SIVA
மே 16, 2025 09:07

எதிர்கட்சி ஏன் சீனாவுடன் ஒப்பந்தம் செய்கின்றது , எதிர்க்கட்சி ஆளும் கட்சியை எதிர்ப்பதாக கூறி தேசத்தை எதிர்க்கின்றது இதில் எப்படி ஜனநாயகம் வரும் , எதிர்க்கட்சி தலைவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் 246 முறை வெளிநாடு சென்று வந்துஉள்ளர் , அந்நிய நாட்டில் இந்தியா அரசு இங்கு உள்ள மக்களை மத பாகுபாட்டுடன் நடத்துவதாக பொய் சொல்கின்றார், இதற்கு முன் தீவீரவாதிகள் தாக்குதல் நடத்தி விட்டு வீர வசனம் பேசுவான் , மேலும் இதை செய்வேன் அதை செய்வேன் என்று பேட்டி கொடுப்பான் , இப்போது இந்தியாவுக்கு எதிராக பேச முடியவில்லை அது ஏன் அதற்கு காரணம் இந்த அரசு , இவர்கள் ஒரு முறை அல்ல இரண்டு முறையும் சொல்லி அடித்துஉள்ளார்கள் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை