உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: டில்லியை கலக்கும் நீல நிற அரசியல்

டில்லி உஷ்ஷ்ஷ்: டில்லியை கலக்கும் நீல நிற அரசியல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கருக்கு எதிராக சபையில் பேசி அவமரியாதை செய்துவிட்டார்' என, காங்கிரஸ் குற்றம்சாட்டி சபையை ஸ்தம்பிக்க வைத்தது. 'என் பேச்சை வேண்டுமென்றே திரித்து விட்டனர் காங்கிரசார்' என, அமித் ஷா சொல்கிறார்.'அம்பேத்கரை தொடர்ந்து அவமதிப்பு செய்து வருவது காங்கிரஸ் தான். நேரு காலத்தில் துவங்கி, இன்று வரை அது தொடர்கிறது' என, மோடியும், பேசி உள்ளார். இந்நிலையில் அமித் ஷாவிற்கு எதிராக பார்லிமென்டில் போராட்டம் நடத்தியது காங்கிரஸ்.நீல நிற டி - ஷர்ட் அணிந்து, போராட்டத்திற்கு வந்தார் ராகுல். சகோதரி பிரியங்காவும் நீல நிற உடை அணிந்திருந்தார். 'நீங்களும் நீல புடவை கட்டிக்கொண்டு வாருங்கள்' என, கனிமொழிக்கு குறுஞ்செய்தி அனுப்பினாராம் பிரியங்கா. இப்படி எதிர்க்கட்சிகள் அனைவருமே நீல நிறத்தில் இருந்தனர்.கடந்த 1942லிருந்து பட்டியலினத்தாரோடு அரசியலுடன் சம்பந்தப்பட்டது நீல நிறம். இவர்களுக்காக அம்பேத்கர் ஒரு அமைப்பை துவங்கியபோது, இந்த அமைப்பின் கொடி நீல நிறத்தில் இருந்தது; நடுவே அசோக சக்கரம். அம்பேத்கர் ரிபப்ளிகன் கட்சியை 1956ல் துவங்கியபோது, இதே நீல நிற கொடியை கட்சியின் கொடியாக அறிவித்தார். தலித் மக்களுக்காக துவங்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி கொடியிலும் நீல நிறம் உள்ளது. இப்படி இந்த நீல நிறம் பட்டியலினத்தாரின் முன்னேற்றத்தில் ஒரு இடம் பிடித்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சந்திரசேகர்
டிச 22, 2024 10:27

தலித்துக்காக குரல் கொடுக்கும் எந்த அரசியல் கட்சியும் அவர்களின் வாழ்க்கை தரத்தை பெரிதாக மேம்படுத்தியது இல்லை.எல்லாம் ஓட்டுக்காக மட்டும் பாசமாக பேசுவார்கள்.இட ஒதுக்கீடும் சாதி சான்றிதழும் என்று ஒழிக்கபடுமோ அன்று ஒருவேளை மாற்றம் வரலாம் சமுதாயத்தில் அனைவரும் ஒன்று என்று


V வைகுண்டேஸ்வரன்
டிச 22, 2024 15:48

இட ஒதுக்கீடும் சாதி சான்றிதழும் ஒழிக்கப் பட்டால் அவ்வளவு தான். இந்தியா மீண்டும் 1910 -20ஆண்டுகளின் நிலைமைக்கு ஆளாகி, தீண்டாமை, கல்வி மறுப்பு, ஒடுக்கப்படுவது, தாழ்த்தப்படுவது, எல்லா வன் கொடுமைகளும் மீண்டும் அரங்கேறும். இப்போதே சில வட மாநிலங்களில் வன் கொடுமைகள் நடக்கின்றன.


ஆரூர் ரங்
டிச 22, 2024 09:24

இவர்கள் அரசியல் சுயநலத்துக்காக தலித் அரசியலை கையில் எடுத்து அவர்களைவிட மூன்று மடங்கு அதிகமுள்ள மக்களின் எதிர்ப்பை வலிய சம்பாதிக்கின்றனர். SC ST பிரிவினரிலேயே 90 சதவீதம் பேர் அமித் ஷா கூறியது போல அம்பேத்காரைவிட கடவுளை அதிகம் நேசிக்கிறார்கள்.


கிஜன்
டிச 22, 2024 04:58

பொதுவாக அம்பேத்கரை உயர்த்திப்பிடிக்கும் கட்சிக்கு ...மற்ற ஜாதியினர் ஒட்டு போடமாட்டார்கள் .... எல்லா கட்சிகளுமே அவரை கொஞ்சம் கவனமாக கையாளும் .... அதுதான் கனியக்கா புளு புடவையிலும் .... பாலு மஞ்சள் சட்டையிலும் வந்தார்கள் ...


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 22, 2024 09:38

மஞ்சளும், நீலமும் சேர்ந்தால் பச்சை வெளிப்படும் ....


சமீபத்திய செய்தி